தேவதை! மனதை வென்றெடுத்த நைஜீரிய சிறுமி

இன்ஸ்டாகிராமில் `உலகிலேயே அழகான சிறுமி’ என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார் நைஜீரியா சிறுமி ஜரே.

குழந்தைகள் என்றாலே அழகுதான். அதுவும் கைதேர்ந்த புகைப்பட கலைஞரின் கேமராவில் குழந்தைகளின் அழகு இருமடங்காகிவிடும். அப்படிதான் ஜரேவை படம்பிடித்து இன்ஸ்டாகிராம் ஸ்டாராக்கிவிட்டார் `மோஃபே’ என்கிற புகைப்படக் கலைஞர்.

நைஜீரியாவில் உள்ள லாகோஸ் நகரத்தைச் சேர்ந்த பெண் புகைப்பட கலைஞர் மோஃபே, 5 வயது சிறுமி ஜரேவை புகைப்படம் எடுத்து  `இவள் மனித இனம்தான்… தேவதையும்கூட’ என்ற கேப்ஷனுடன் இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். ஜரேவின் புகைப்படம் பகிரப்பட்ட சில நொடிகளில் 10,000 லைக்ஸ்.

`ஜரேவின் குழந்தைப் பருவத்துக்கும் பதின்பருவத்துக்கும் இடைப்பட்ட அந்தப் பருவத்தைப் புகைப்படமாக்க வேண்டும் என்று எண்ணினேன். அவளைச் சிரிக்க வைத்து, படம்பிடிக்கவில்லை. அவளின் இயல்பான ஆர்ப்பாட்டமில்லா அழகைப்  பதிவு செய்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் மோஃபே.

மோஃபேவும் இன்ஸ்டாவாசிகளும் சிலாகிக்கும் அளவுக்கு ஜரே புகைப்படத்தில் என்னதான் இருக்கிறது..?

புகைப்படம் வழியாக ஜரேவின் கண்கள்  நம்மிடம் பேசும். இதுதான் அந்தப் புகைப்படத்தின் சிறப்பு.

 

ஜரேவின் புகைப்படத்தைப் பகிர்ந்து  `உலகிலேயே அழகான சிறுமி’  என்று பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்ஸ்!