யாழ். குடா­நாட்­டில் 14,000 படை­யி­னர் உள்ளனராம்!

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் தற்­போது சுமார் 14 ஆயி­ரம் இரா­ணு­வத்­தி­னர் நிலை கொண்­டுள்­ள­னர் என்று யாழ்ப்­பா­ணம் தலை­மை­ய­கக் கட்­ட­ளைத் தள­பதி மேஜர் ஜென­ரல் தர்­சன ஹெட்­டி­ய­ராட்சி தெரி­வித்­துள்­ளார்.

குடா­நாட்­டில் தற்­போது 51, 52, 55 ஆகிய 3 டிவி­சன்­களே நிலை­கொண்­டுள்­ள­ னர். அவற்­றைச் சேர்ந்த சுமார் 14 ஆயி­ரம் படை­யி­னர் தற்­போது எனது கட்­டுப்­பாட்­டில் உள்­ள­னர் என்று அவர் கூறி­யுள்­ளார்.

2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ்ப்­பா­ணப் படை­க­ளின் கட்­ட­ளைத் தள­ப­தி­யா­கப் பதி­யேற்ற பின்­னர் குடா­நாட்­டில் படைக்­கு­றைப்பு நடக்­க­வில்லை என்­றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுளார்.

2009ஆம் ஆண்டு போர் உச்­சக்­கட்­டத்­தில் இருந்த போது குடா­நாட்­டில் சுமார் 45 ஆயி­ரம் படை­யி­னர் நிலை கொண்­டி­ருந்­த­னர். போர் முடிந்து 18 மாதங்­க­ளுக்­குப் பின்­னர் 2010 ஒக்­ரோ­ப­ரில் யாழ்ப்­பா­ணத்­தில் இரா­ணு­வத்­தி­ன­ரின் எண்­ணிக்­கை­யைக் குறைக்­கும் நட­வ­டிக்கை ஆரம்­பிக்­கப்­பட்­டது. படிப்­ப­டி­யாக இரா­ணு­வத்­தி­ன­ரின் எண்­ணிக்கை குறைக்­கப்­பட்டு வந்­தது என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

2014 ஜன­வரி மாதம், மேஜர் ஜென­ரல் உதய பெரேரா யாழ். படை­க­ளின் தள­ப­தி­யாக பொறுப்­பேற்ற போது, குடா­நாட்­டில் படை­யி­ன­ரின் எண்­ணிக்கை 14,600 ஆக குறைக்­கப்­பட்­டி­ருந்­தது. 2015 அதி­கர் தேர்­த­லுக்கு முன்­னரே, குடா­நாட்­டில் படை­யி­ன­ரின் எண்­ணிக்கை 14 ஆயி­ர­மாக குறைக்­கப்­பட்டு விட்­டது என்­றும் ஹெட்­டி­யா­ராட்சி தெரி­வித்­துள்­ளார்.

வடக்­கில் இருந்து படை­க­ளைக் குறைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என்று வெளி­யா­கி­யுள்ள செய்­தி­கள் தொடர்­பாக, கொழும்பு ஊட­கம் ஒன்­றுக்­குக் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.