தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். ஏ.எல்.விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, ‘நடிகையர் திலகம்’ படம் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். இதன்பின் இனி தன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டுமே கவனம் ...
Read More »குமரன்
வீட்டிலிருந்தவாறே நோயாளி வைத்தியருடன் தொடர்புகொள்ள புதிய முறை அறிமுகம்
வீட்டிலிருந்தவாறே நோயாளியொருவர் தனக்கு வேண்டிய வைத்தியருடன் தொடர்புகொண்டு தனது தேவைகளை நிறைவேற்ற செயலியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது வினைத்திறனாகும் பட்சத்தில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிறுவர் வைத்தியசாலைக் கிளையின் செயலாளரும் அதன் மத்திய குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரண்டசிங்கம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தொலைபேசியூடாக நோயளர்களுக்குரிய கிளினிக் வசதிகளை செயற்படுத்துவதற்கு அரச மருத்தவ அதிகாரிகள் சங்கம் ஒரு முன்மொழிவினை சுகாதார அமைச்சுக்கு வழங்கியிருந்தது. அந்த முன்மொழிவின் பிரகாரம் ஓடக் ; என்கின்ற நிறுவனத்தின் அனுசரணையுடன் ...
Read More »கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு!
கொரோனா வைரசுக்கு எதிராக சிறந்ததோர் மருந்தை கண்டுபிடித்துள்ளதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் சோதனையை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தொடங்கியது. அமெரிக்க அரசுக்கு சொந்தமான பயோமெடிக்கல் மேம்பாட்டு ஆணையத்துடன் (BARDA) இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மூன்று மாத கால ஆராய்ச்சிக்கு பலனாக சிறந்ததொரு கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக ஜான்சன் அண்ட் ...
Read More »விடுதலைக் கோரிக்கையினை நிராகரித்த ஆஸ்திரேலியா
உலகின் பிற பகுதிகளைப் போலவே ஆஸ்திரேலியா எங்கும் பெருகிவரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களிலும் உள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் இடையேயும் பரவியுள்ளது. இந்த நிலையில், தடுப்பில் உள்ள அகதிகளை விடுவிக்குமாறு எழுந்த கோரிக்கையினை ஆஸ்திரேலிய உள்துறை நிராகரித்துள்ளது. முன்னதாக, கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள அச்சம் காரணமாக குடிவரவுத் தடுப்பில் இருந்த நூற்றுக்கணக்கானவர்களை இங்கிலாந்து அரசு விடுவித்திருந்தது. இதே போல், ஆஸ்திரேலிய அரசும் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களை விடுவிக்கும் என குடிவரவு வழக்கறிஞர்களும் அகதிகளும் எதிர்ப்பார்த்த நிலையில் அக்கோரிக்கையினை ஆஸ்திரேலியா நிராகரித்திருக்கின்றது. ...
Read More »ஊடகவியலாளர் துசாந்த் மீது கிளிநொச்சியில் வாள்வெட்டு!
இணையத்தள ஊடகவியலாளர் நடராசலிங்கம் துஷாந் மீது கிளிநொச்சி – உதயநகர் அலுவலத்தில் வைத்து நேற்று (30) மாலை 5.30 மணியளவில் நால்வர் கொண்ட குழு தாக்கல் மேற்கொண்டுள்ளது. பொல்லுகள் கொண்டு தாக்கியதுடன், போத்தல் ஒன்றை உடைத்து துஷாந்த் மீது குத்தியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது அவர் கைகளில் காயமடைந்துள்ளார். “உதயநகர் பகுதியில் அமைந்துள்ள துஷாந்த் பணியாற்றிய இணைய ஊடகம் ஒன்றின் அலுவலகப்பகுதியில் நபர் ஒருவர் நின்றதாகவும், அவரை அங்கிருந்து வெளியேறப் பணித்த போது, குறித்த நபர் மேலும் சிலரை அழைத்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ...
Read More »தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்! -நியூயார்க் ஆளுநர்
கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் மக்களுக்கு உதவி செய்ய வரும்படி மருத்துவ தன்னார்வலர்களுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3164 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக நியூயார்க் நகரில் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போதுள்ள நிலை நீடித்தால் அடுத்த இரண்டு வாரங்களில் உயிரிழப்பு உச்சத்தை அடையும் என்று அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார். எனவே, கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. நியூயார்க் நகரில் ...
Read More »கொரோனா சந்தேகத்தில் கராப்பிட்டியவில் 200 பேர்
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 200 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் சிகிச்சைப்பெற்று வருகின்றனரென, வைத்தியசாலையின் பணிப்பாளர் சம்பத் ரணவீர தெரிவித்துள்ளார். எனினும்,காலி மாவட்டத்தில் இதுவரை ஒருவர் மாத்திரமே கொரோனா தொற்றுக்கு இலக்காகி உள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Read More »பிரபல பாடகியின் பயோபிக்கில் சமந்தா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, பிரபல பாடகியின் பயோபிக்கில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாழ்க்கை வரலாறு படங்கள் அதிகம் வந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் முதல்- மந்திரிகள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்-நடிகைகள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் வாழ்க்கை படங்கள் வந்துள்ளன. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் படமாகி வருகிறது. இந்த வரிசையில் பிரபல கர்நாடக இசை பாடகி பெங்களூரு நாகரத்னம்மாளின் வாழ்க்கை ...
Read More »கரோனாவை விரட்ட கழிப்பறைச் சுத்தமும் முக்கியம்!
கரோனா தொற்று தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஆய்வுகள் வழியே புதுப் புது விஷயங்களைக் கண்டறியும் நிபுணர்கள் கழிப்பறைச் சுத்தமும் மிக முக்கியம் என்கிறார்கள். தொற்று ஏற்பட்டவர்களில் சரிபாதி நோயாளிகளுக்குச் செரிமானக் கோளாறு இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது. நோய்த் தொற்றாளர்கள் மலம் கழிக்கும்போது அதன் வழியாகவும் கரோனா வைரஸ் வெளியாகிறது. ஆகவே, ஒவ்வொருவரும் மலம் கழித்துவிட்டு, கழிப்புச் சாதனத்தை நன்கு சுத்தம் செய்வது அவசியம். கூடவே, ஒவ்வொரு முறையும் கழிப்பறைக்குச் செல்லும்போதும், கழிப்பு முடித்துத் திரும்பும்போதும் கைகளை நன்கு சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். அதேபோல், ஒருவர் கழிப்பறைக்குச் ...
Read More »கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தாதியாக மாறிய நடிகை!
இந்தி நடிகை ஷிகா மல்கோத்ரா, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தாதியாக மாறி இருக்கிறார்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நடிகர்-நடிகைகள் விழிப்புணர்வு காணொளி வெளியிட்டு, தங்கள் பங்களிப்பை செய்து வருகிறார்கள். கஷ்டப்படும் திரைப்பட தொழிலாளர்களுக்கு நிதி உதவியும் அளிக்கின்றனர். ஆனால் இந்தி நடிகை ஷிகா மல்கோத்ரா, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நர்சாக மாறி இருக்கிறார். இவர் கடந்த மாதம் திரைக்கு வந்த ‘காஞ்ச்லி லைப் இன் எ ஸ்லாஷ்’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் சஞ்சய் மிஸ்ரா நாயகனாக வந்தார். ...
Read More »
Eelamurasu Australia Online News Portal