குமரன்

மோட்டார் குண்டுகள் அடங்கிய 13 பெட்டிகள் மீட்பு!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 81 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள் கொண்ட 13 பெட்டிகளை பொலிஸ் விசேட அதிரடைப் படையினர் மீட்டுள்ளனர். குறித்த வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருந்த நிலத்தின் உரிமையாளர் இது தொடர்பில் தகவல் அறிந்து காவல் துறைக்கு வழங்கிய உத்தரவுக்கு அமையவே முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய இவை மீட்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்க்கப்பட்ட பல பெட்டிகள் சிதைவடைந்த நிலையில் இருந்ததாகவும், அவை விடுதலை புலிகளினால் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் காவல் துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும் இது தொடர்பான விசாரணைகளை முல்லைத்தீவு ...

Read More »

வில்லன் வேடத்தில் நடிப்பது ஏன்?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்தில் வில்லன் வேடத்தில் நடிப்பது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘மாஸ்டர்’. விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். ‘மாஸ்டர்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. படம், தமிழ் புத்தாண்டு அன்று வெளிவர இருக்கிறது. இம்மாதம் இறுதிக்குள் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட திட்டமிட்டு இருக்கிறார்கள். அதன்பிறகு படத்தொகுப்பு, குரல் சேர்ப்பு, ...

Read More »

தஞ்சைப் பெரியகோயில் எனும் தமிழனின் பெருமை!

தஞ்சையில் சோழப் பேரரசன் முதலாம் ராஜராஜனால் கி.பி. (பொ.ஆ) 1010ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப் பெற்றதே ‘இராஜராஜீச்சரம்’ எனும் சிவாலயமாகும். இதை மக்கள் வழக்கில் தஞ்சைப் பெரிய கோயில் எனக் குறிப்பிடுவர். இக்கோயில் கடைக்காலில் தொடங்கி விமானத்துச் சிகரம்வரை கருங்கற்கள் கொண்டே கட்டப்பெற்றதாகும். அதனால் இதனைக் கற்றளி எனக் குறிப்பிடுவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி காலகட்டத்தில் பாமர மக்கள் இதனைப் பூதம் கட்டிய கோயிலென்றே கூறி வந்தனர். தஞ்சையில் ஆட்சிபுரிந்த மராட்டிய அரசர் சரபோஜி மன்னரின் ஆட்சிக் காலத்தில் மராட்டி மொழியில் எழுதப் பெற்ற ...

Read More »

தஞ்சமடைய முயற்சிப்பவர்களை ‘ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்த மாட்டோம்!

ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே ஏற்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவில் மீள்குடியேற்றப்பட்ட அகதிகள், தற்போது மனுஸ்தீவு மற்றும் நவுருத்தீவில் இருக்கும் அகதிகளை அமெரிக்கா வர வேண்டாம் என எச்சரிப்பதாகக் கூறுகிறார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன். “இதுகுறித்து என்னால் எதுவும் செய்ய முடியாது,” எனக் கூறும் பீட்டர் டட்டன், பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவுகளில் உள்ள அகதிகளை வெளியேற்ற நான் நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது இப்படியான செயல் தன்னை சினங்கொள்ள வைப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆட்சியின் இறுதிக்காலக்கட்டத்தில் ...

Read More »

நோபல் பரிசுக்கு கிரேட்டா துன்பர்க் பெயர் பரிந்துரை!

கடந்த 2018 ஆகஸ்ட் மாதம், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான பள்ளி மாணவர்கள் போராட்டத்தை ஸ்வீடன் நாடாளுமன்றத்துக்கு வெளியே கிரேட்டா துன்பெர்க் என்ற இளம் மாணவி தொடங்கினார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ‘பிரைடேஸ் பார் பியூச்சர்’ என்ற ஹாஷ்டேக் உலக அளவில் பிரபலமானது. அந்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கானோரை பங்கேற்கச் செய்ததில் கிரேட்டா முக்கிய உந்துசக்தியாக திகழ்ந்தார். இந்நிலையில் 2020-ம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு கிரேட்டா துன்பெர்க் மற்றும் ‘பிரைடேஸ் பார் பியூச்சர்’ அமைப்பின் பெயரை ஸ்வீடன் நாட்டின் ...

Read More »

எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது உண்மைதான்!- பிக்பாஸ் தர்ஷன்

நடிகை சனம் ஷெட்டி கொடுத்த புகாருக்கு பதிலாக பிக்பாஸ் தர்ஷன் பத்திரிகையாளர்களை சந்தித்து   விளக்கம் அளித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் சனம் ஷெட்டி. மாடலிங்கும் செய்து வருகிறார். ‘கதம் கதம்‘, ‘சதுரம் 2’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் அடுத்து எதிர்வினையாற்று படத்தில் நாயகியாக நடித்துள்ளார். சனம் ஷெட்டியுடன் மாடலிங் படப்பிடிப்புகளின் போது நடித்தவர் தர்‌ஷன். ‘பிக்பாஸ்’ சீசன் 3ல் பங்கேற்றதால் பிரபலம் ஆனார். இருவரும் திருமணம் செய்வது ...

Read More »

கிளிநொச்சியில் சிறிலங்கா இராணுவத்தால் ஒருவர் கைது!

விடுதலைப் புலிகளின் கொடியை வைத்திருந்தக் குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி விவேகானந்தா நகரைச் சேர்ந்த குறித்த நபர் இன்று  முன்னர் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .கைது செய்யப்பட்ட குறித்த நபர் கிளிநொச்சி காவல் துறையிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Read More »

கூட்டுத் தலைமத்துவம் அல்ல முக்கியம் கொள்கை தான் முக்கியம்!

யதார்த்தத்தை உணரத் தொடங்கியிருக்கின்ற தமிழ் மக்கள் உண்மையான நேர்மையான கொள்கையில் விட்டுக் கொடுப்பில்லாத எங்களது தரப்பிற்கு முழுமையான ஆதரவை வழங்குவார்கள் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டுத் தலைமைத்துவம் முக்கியமல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். கூட்டுத் தலைமையின் முக்கியத்துவம் குறித்து கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்ததாவது, என்னைப் பொறுத்தவரையில் கூட்டுத் தலைமத்துவம் முக்கியமான விடயமல்ல. ஏனெனில் இங்கு கூட்டுத் தலைமத்துவம் அல்ல முக்கியம். கொள்கை தான் முக்கியம். நேர்மைத் தன்மை தான் முக்கியம். ...

Read More »

சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டவர் ஆஸ்திரேலியாவுக்கு வரத் தடை!

சீனாவில் கரோனா வைரஸ் பரவிய பகுதிகளிருந்து வரும் வெளிநாட்டவருக்கு சுமார் இரண்டு வாரத்திற்கு ஆஸ்திரேலியாவுக்கு வருகை தரக்கூடாது என்று அந்நாடு தடை விதித்துள்ளது. இதுகுறித்தான அறிவிப்பை ஆஸ்திரேலியப் பிரதமர் மோரிசன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ஸ்காட் மோரிசன் கூறும்போது, “ சீனாவில் கரோனா வைரஸ் பரவிய நகரிலிருந்து வருபவர்கள் இரு வாரங்களுக்கு ஆஸ்திரேலியாவுக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த முடிவு மூத்த மருத்துவ ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகே எடுக்கப்பட்டது” என்றார். ஆஸ்திரேலியாவில் இதுவரை 12 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் ...

Read More »

நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டி – டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்!

நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி 20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 20 ஓவர் போட்டித் தொடர் சமீபத்தில் தொடங்கியது. இதில் 4-0 என்ற கணக்கில் டி 20 தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 ...

Read More »