அவுஸ்திரேலிய தம்பதி ஒருவருக்கு தத்துக் கொடுக்கப்பட்ட நிலானி எனும் பெண், பல வருடங்களின் பின்னர் சொந்த தாயை தேடி கண்டுபிடித்துள்ளார். 34 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவில் இருந்து தாயை தேடி இலங்கை வந்த மகள் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. 1984 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தை நோக்கி சென்ற மகளே தற்போது இலங்கையில் தாயை தேடி வந்துள்ளார். வறுமையின் காரணமாக குழந்தை பிறந்த இரண்டு வாரத்தில் வெளிநாட்டு தம்பதிக்கு தத்துக் கொடுத்ததாக குறித்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார். பிள்ளைகளுக்கு உணவு வழங்குவதற்கு ...
Read More »குமரன்
பதற்றம், விறுவிறுப்பாக செல்லும் “செவன்” !- விமர்சனம்
நந்திதா தனது கணவர் ஹவிஷை காணவில்லை என்று உதவி கமிஷனர் ரகுமானிடம் புகார் கொடுக்கிறார். இருவரும் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறார். நந்திதாவின் கணவர் புகைப்படத்தை பார்த்த ரகுமானுக்கு அதிர்ச்சி. ஏற்கனவே அனிஷா அம்புரோஜும் ஹவிஷ் தனது கணவர் என்றும், காணாமல் போய்விட்டார் என்றும் புகார் அளித்து இருக்கிறார். இதுபோல் வாய்பேச முடியாத இன்னொரு பெண்ணும் ஹவிஷ் தனது கணவர் என்கிறார். இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று உறுத்த ஹவிஷ் மீது பெண்களை ஏமாற்றி மோசடி ...
Read More »உத்தரபிரதேசத்தில் எருதுகளுக்கு பதிலாக ஏர்கலப்பையில் பெண்கள் !
உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏர்கலப்பையில் எருதுகளுக்கு பதிலாக பெண்கள் நிலத்தை உழுதனர். இதற்கான காரணம் என்ன? என்பதை பார்ப்போம். தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பல்வேறு கிராமங்களிலும், முக்கிய நகரங்களிலும் தண்ணீர் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அரசு சார்பிலும், சமூக ஆர்வலர்கள் சார்பிலும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோவில்களில் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள கோபால்பூர் கிராமத்தில் வித்தியாசமான முறையில் பெண்கள் மழை வேண்டி பூஜைகள் நடத்தினர். எருதுகள் ...
Read More »தனியார் ஊடகங்களை வெளியேற்றிய வடக்கு ஆளுநர்!
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்துக்குழு கூட்டம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது . குழுவின் இணைத்தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் , பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களை பார்த்து ஆளுநர் சுரேன் இராகவன் தனியார் ஊடகங்கள் யார் என கேட்டு தனியார் ஊடகங்களை வெளியேறுமாறும் ,பின்னர் கூட்ட தீர்மானங்களை வழங்குவதாகவும் அரச ஊடகங்கள் மட்டும் இருக்குமாறும் கேட்டுகொண்டார். இது அரச ...
Read More »சஹ்ரானுடன் எவ்வித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை!-ரோஹித்த அபே குணவர்தன
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஹ்ரானுடன் எவ்வித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை என காங்கிரஸின் காத்தான்குடி பிரதான அமைப்பாளர் யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்கொலைக் குண்டுதாரி சஹ்ரானுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்ததாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியமளித்த முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மேற்படி எந்த ஒப்பந்தத்தையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஹ்ரானுடன் செய்தது என்பதை முற்றாக நிராகரிப்பதாகவும் அதனை மறுப்பதாகவும் குறிப்பிட்டார். கடந்த 2015 நாடாளுமன்றத் ...
Read More »அவுஸ்திரேலியாவில் அகதிபெண்களுக்கு தொடர்ந்து இறந்து பிறக்கும் குழந்தைகள்!
அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த மற்றும் அகதிப்பின்னணி கொண்ட பெண்களுக்கு கருக்கலைவு மற்றும் குழந்தைகள் இறந்து பிறப்பது அதிகரித்துள்ளது. இதற்கு அவர்களிடையே காணப்படுகின்ற மொழிப்பிரச்சினைதான் பிரதானமானது என்று Medical Journal of Australia தெரிவித்துள்ளது. மேலும் அகதிப் பின்னணிகொண்ட பெண்களின் வாழ்க்கை சித்திரவதை மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றுடனும் தொடர்புடையதாக இருக்கும்போது கர்ப்பகாலம் மிகக்கடினமானதாக காணப்படும். இதுவும் இன்னொரு பொதுவான பிரச்சினையாகியுள்ளது என்று Medical Journal of Australia சுட்டிக்காட்டியுள்ளது. ஆசிய நாடுகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்துள்ள பெண்களுக்கு ...
Read More »வெஸ்ட்மினிஸ்டர் முறைமையே ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும்!
தேர்தலொன்றுக்குச் செல்வதாலோ அல்லது அரசியலமைப்பில் மீண்டும் திருத்தத்தினை கொண்டுவருவதாலோ நாட்டில் உருவெடுத்துள்ள அரசியல் ஸ்திரத்தன்மையற்ற போக்கினை மாற்றியமைக்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார். அனைத்து பெரும்பான்மை கட்சிகளினது அரசியல் உறுதிப்பாட்டுடனும்,சிறுபான்மை கட்சிகளின் பங்கேற்புடனும் நாட்டின் தேவைக்கேற்ப சரிசெய்யப்பட்டதும் காலத்தால் பரீட்சிக்கப்பட்டதுமான வெஸ்ட்மினிஸ்டர் முறைமைக்கு திரும்பிச் செல்வதன் நெருக்கடிகளுக்கு தீர்வினைக் கண்டு அரசியல் ரீதியான ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். 18ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டமை ஜனநாயகமயமாக்கலின் அடிப்படையில் எழுந்த மக்கள் கோரிக்கையின் விளைவான ஒரு செயற்பாடு ...
Read More »சிட்னி விமான நிலையத்தில் திருடிய ஏர் இந்தியா அதிகாரி பணி நீக்கம்!
சிட்னி விமான நிலையத்தில் உள்ள ஒரு கடையில் திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட உயரதிகாரியை ஏர் இந்தியா நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் இருந்து நேற்று (22-ம் தேதி) காலை டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தை ஓட்டும் விமானிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டிருந்த ரோஹித் பஷின் என்ற விமானி முன்னதாக சிட்னி விமான நிலையத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்றார். அங்கு இன்னொருவரின் பணப்பையை அவர் திருடி விட்டதாக ஆஸ்திரேலேசியா விமானச்சேவை நிறுவனத்தின் சார்பில் ஏர் இந்தியா அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. ...
Read More »அமெரிக்காவில் விமான விபத்தில் 9 பேர் பலி!
அமெரிக்காவில் விமான விபத்தில் 9 பேர் பலியாகினர். வானில் வீர சாகசத்தில் ஈடுபட்டபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்தது. அமெரிக்க நாட்டில் ஹவாய் தீவில் இரட்டை என்ஜின் கொண்ட ‘தி கிங் ஏர்’ விமானத்தில் 9 பேர் நேற்று முன்தினம் மாலை வானில் வீர சாகச சுற்றுலா சென்றனர். ஆனால் வானில் வீர சாகசம் செய்து கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் அந்த விமானம், ஹோனோலுலு நகருக்கு அருகே டில்லிங்ஹாம் விமான தளம் அருகே மோதி தீப்பிடித்தது.விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் ...
Read More »தெரிவுக்குழு விசாரணைக்கு ரணிலை அழைக்க தீர்மானம்!
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன மற்றும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர்களான சாகல ரத்னாயக்க , ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரை நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் பிரதமர் உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட அமைச்சர்களையும் விசாரணைக்கு அழைப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விருப்பம் தெரிவித்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசாரணைக்கு ...
Read More »
Eelamurasu Australia Online News Portal