குமரன்

வசந்த கரன்னாகொடவுக்கு அழைப்பாணை!

குறிப்பிட்ட தினத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகாமை தொடர்பில், அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு, இன்று (24) நான்காவது முறையாகவும் அழைப்பாணை அனுப்புமாறு, மூன்று நீதிபதிகள் அடங்கிய மேல் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டது. 2008 – 2009ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், கொழும்பில் சன நெரிசல்மிக்க பகுதிகளிலிருந்து 11 இளைஞர்களைக் கடத்திக் காணாமலாக்கியமை தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் 14ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட, நேற்றைய தினமும் நீதிமன்றத்தில் ஆஜரா​கி இருக்கவில்லை. இந்நிலையிலேயே, நீதிபதிகள் குழு, மேற்கண்ட உத்தரவைப் ​பிறப்பித்தது.

Read More »

தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐ.நா வலியுறுத்த வேண்டும்!

ஐ.நா பரிந்துரைகள் மற்றும் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகினாலும், எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐ.நா வலியுறுத்த வேண்டும் என தமிழரசு கட்சி மத்திய குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நேற்று (23) எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக சந்திப்பு நேற்று மாலை 6.30 மணி அளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மத்திய குழு கூட்டம் கிளிநொச்சி தமிழரசு கட்சி அலுவலகத்தி ...

Read More »

குத்துச்சண்டை வீரனாக களமிறங்கும் ஆர்யா!

பா.ரஞ்சித் இயக்க உள்ள புதிய படத்தில் தான் குத்துச்சண்டை வீரனாக  நடிக்க உள்ளதாக நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். ‘காலா’  திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது இந்தப் படத்துக்கு முன்பாக தமிழில் புதிய படம் ஒன்றை இயக்க பா.ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாக பேசப்பட்டது. இந்நிலையில், ...

Read More »

பேருந்துடன் கெப் ரக வாகனம் மோதி கோர விபத்து – 4 பேர் பலி!

வவுனியா – ஓமந்தை – பன்றிக்கெய்தகுளம் ஏ 9 பிரதான வீதியில் பேருந்து ஒன்றும் கெப் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்தில் காயமடைந்த 20 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தில் பேருந்து தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை துரிதப்படுத்த சிறப்பு பணிக்குழு!

250 இற்கு மேற்பட்டோர் உயிரிழப்பிற்கு காரணமான உயிர்த் ஞாயிறு சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் முன்னேற்றத்தை கண்டறிவதற்காக பாதுகாப்பு அமைச்சினால் சிறப்பு பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 6 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சிறப்பு பணிக்குழுவில் பல்வேறு புலனாய்வு பிரிவின் சிரேஸ்ட அதிகாரிகள் உள்ளடங்கியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரி ஜெகத் அல்விஸ் இந்த குழுவிற்கு தலைமை தாங்குகின்றார். இது தொடர்பான அறிக்கை வாரத்திற்கு ஒருமுறை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ...

Read More »

ஆஸ்திரேலியாவிற்கு விசா மறுப்பு!

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க செல்லவிருந் போட்ஸ்வானா நாட்டின் இளம் கிரிக்கெட் வீராங்கனையான ஷமீலா மோஸ்வியூக்கு விசா மறுக்கப்பட்டுள்ளமை பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இவருக்கு ஆஸ்திரேலிய விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. “நீங்கள் ஆஸ்திரேலியாவில் தற்காலிகமாக தங்க நினைக்கிறீர்கள் என்பதில் எமக்கு திருப்தி இல்லை” என விசா மறுக்கப்பட்டுள்ள நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. FairBreak எனும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் அமைப்பு அணியின் சார்பாக அவர் விளையாட இருந்த நிலையில் ஷமீலாவுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. “ஷமீலா இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் ...

Read More »

ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அனுபமா!

மலையாளத்தில் பிரேமம் படத்திலும், தமிழில் கொடி படத்திலும் நடித்த அனுபமா பரமேஸ்வரனின் செயலால் ரசிகர்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளனர். சினிமா உலகத்தைப் பொறுத்தவரையில் ஹாலிவுட்டாக இருந்தாலும் சரி, கோலிவுட்டாக இருந்தாலும் சரி நடிகைகள் அவர்களது வயதை வெளியில் சொல்ல மாட்டார்கள். இளமையாக இருந்தால் தான் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்பது ஒரு காலத்தில் வழக்கமாக இருந்தது. ஆனால், இந்தக் காலத்தில் திருமணம் முடிந்த நடிகைகள் கூட முன்னணியில் இருக்கும் காலமாக மாறிவிட்டது. தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ படத்தில் அறிமுகமானவரும், தற்போது அதர்வா நாயகனாக ...

Read More »

கேலி கிண்டலுக்குள்ளான சிறுவன் : அவுஸ்திரேலிய ரக்பி அணியினருடன் கம்பீரமாக மைதானத்தில் வரவேற்பு!

அவுஸ்திரேலியாவில் பாடசாலை ஒன்றில் மாணவர்களால் கேலி கிண்டலுக்குள்ளான குவாடன் பெல்ஸின் மனதை உருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலானதை அடுத்து உலக நாடுகளில் அச் சிறுவனுக்கு ஆதரவாக குரல் எழுப்பட்டு வருகிறது. வளர்ச்சியின்மை காரணமாக குறித்த சிறுவன் பாடசாலையில் எதிர்கொண்ட துன்பங்களை தனது தாயிடம் தெரிவித்து, தான் தற்கொலை செய்துக்கொள்ளப் போகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு ;தெரிவித்ததை அவரது தாய் காணொளி ஒன்றை எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். அதனை தொடர்ந்து சிறுவனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சர்வதேச ரீதியில் பிரபலங்கள் உள்பட விளையாட்டு ...

Read More »

கொரோனோ : கண்காணிப்பிற்கு பிறகு வீடு திரும்பிய 200 ஆஸ்திரேலியர்கள்!

கொரோனோ வைரஸ் தாக்கம் பெருமளவில் உள்ள சீனாவின் Hubei மாகாணத்திலிருந்து அழைத்து வரப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள், 14 நாட்கள் கண்காணிப்பில் கிறிஸ்துமஸ் தீவில் வைக்கப்படிருந்தனர். இக்கண்காணிப்பில் அவர்களிடையே வைரஸ் தொற்று எதுவும் கண்டறியப்படாத நிலையில், இவர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவில் உள்ள தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆஸ்திரேலியாவின் பெரும் நிலப்பரப்பிலிருந்து சுமார் 3000 கி.மீ. அப்பால் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் தீவு, ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான தீவாகும். சீனாவில் ஏற்பட்ட கொரோனோ வைரஸ் குறித்த அச்சம் உலகெங்கும் பரவியுள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 1 முதல் ...

Read More »

4 மாணவர்களின் உயிரிழப்பு – விசாரணை செய்ய மூவர் கொண்ட குழு நியமனம்!

திருகோணமலை – கோமரங்கடவல மதவாச்சி குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவர்களின் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை செய்ய மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. கல்வி சுற்றுலா மேற்கொண்ட போது நீரில் மூழ்கி குறித்த 4 மாணவர்களும் உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழந்த மாணவர்கள் பதுளை ஹாலி எல பகுதியைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல காவல் துறையினர்  முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன், மாணவர்களின் இறப்பு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள மூவர் ...

Read More »