உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை துரிதப்படுத்த சிறப்பு பணிக்குழு!

250 இற்கு மேற்பட்டோர் உயிரிழப்பிற்கு காரணமான உயிர்த் ஞாயிறு சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் முன்னேற்றத்தை கண்டறிவதற்காக பாதுகாப்பு அமைச்சினால் சிறப்பு பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

6 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சிறப்பு பணிக்குழுவில் பல்வேறு புலனாய்வு பிரிவின் சிரேஸ்ட அதிகாரிகள் உள்ளடங்கியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரி ஜெகத் அல்விஸ் இந்த குழுவிற்கு தலைமை தாங்குகின்றார்.

இது தொடர்பான அறிக்கை வாரத்திற்கு ஒருமுறை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்னவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு , நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் முக்கிய கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டலை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த குழு அமைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.