பேருந்துடன் கெப் ரக வாகனம் மோதி கோர விபத்து – 4 பேர் பலி!

வவுனியா – ஓமந்தை – பன்றிக்கெய்தகுளம் ஏ 9 பிரதான வீதியில் பேருந்து ஒன்றும் கெப் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விபத்தில் காயமடைந்த 20 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் பேருந்து தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.