குமரன்

கலையின் உயரத்துக்கு ரசிகன் வர வேண்டும்: வைரமுத்து விருப்பம்

கலையின் உயரத்துக்கு ரசிகன் வர வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து விருப்பம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 64-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் சினிமா சார்பில் தேசிய விருதுகளை வென்ற கவிஞர் வைரமுத்து, இயக்குநர் ராஜூமுருகன், விமர்சகர் தனஞ்செயன், தயாரிப்பாளர் பிரபு, பாடகர் சுந்தரயர் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். இச்சந்திப்பில் இயக்குநர் வைரமுத்து பேசியதாவது: “‘எந்தப் பக்கம் காணும் போதும் வானம் உண்டு’ என்ற பாடல் வழியே இளைஞர்களுக்கு நம்பிக்கையை கொடுத்திருப்பதாகவே கருதுகிறேன். ஒரு கிராமத்தில் இருந்து திரைப்படக் கனவுகளோடு ...

Read More »

அவுஸ்ரேலியாவில் 10 ஆண்டுகள் தங்க பெற்றோர் விசா தயார்!

பெற்றோர்களுக்கான புதிய விசா அறிமுகமாகிறது. இவ்வருட நவம்பர் மாதத்திலிருந்து இப்புதிய விசாக்கள் வழங்கப்படும். $20,000 செலுத்தினால் 10 ஆண்டுகள் இங்கே தங்கலாம். அறிமுகப்படுத்தப்படவுள்ள ஒரு புதிய விசாவின் கீழ், பெற்றோர்கள் 10 வருடங்கள் வரை அவுஸ்ரேலியாவில் தங்கலாம். ஆனால் அவர்கள் அவுஸ்ரேலியாவில் நிரந்தரமாகக் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்துடன் அவர்களின் பிள்ளைகள் தமது பெற்றோர்களுக்கான தனியார் சுகாதார காப்பீடு (private health cover) எடுக்கவேண்டும். Turnbull அரசாங்கத்தின் சமீபத்திய குடிவரவுகள் மீதான மாற்றங்களில் ஒன்றாகப் பெற்றோர்களுக்கான இப் புதிய விசா அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன் படி ...

Read More »

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலை

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான கொள்கை மற்றும் சட்ட வரைவுக்கான அமைச்சரவை அங்கிகாரத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.   கூட்டமைப்பின், நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனால், நேற்று (04) அனுப்பிவைக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,   பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கான அங்கிகாரத்தை, கடந்த மாதம் 25ஆம் திகதியன்று, அமைச்சரவை வழங்கியுள்ளது. இது தொடர்பில் எங்களிடம் எவ்விதமான ஆலோசனையும் பெறப்படவில்லை. இதன் மூலம் சிவில் உரிமைகள் குறைக்கப்படுவதுடன், துஷ்பிரயோகத்துக்கும் சித்திரவதைக்கும் இந்தச் சட்டம் வழிவகுக்கும்.   அடிப்படை உரிமைகள் மற்றும் சட்டத்தின் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இந்திய ‘கேசர்’ மாம்பழங்களுக்கு அமோக வரவேற்பு!

இந்தியாவின் புகழ்பெற்ற ‘கேசர்’ வகை மாம்பழங்கள் முதன்முறையாக அவுஸ்ரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றின் இனிய சுவைக்கு அங்குள்ள மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குளுமைப் பிரதேசமாக அறியப்படும் ஆஸ்திரேலியா நாட்டுக்கு மெக்சிகோ, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் மாம்பழங்களை ஏற்றுமதி செய்து வருகின்றன. மாம்பழ சாகுபடியில் படிப்படியாக முன்னேறிவரும் இந்தியாவும் உள்நாட்டு தேவைக்குப் போக மிஞ்சியுள்ள மாம்பழங்களை அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில், நமது நாட்டில் ‘கனிகளின் ராஜா’ என்றழைக்கப்படும் மாம்பழங்களை முதன்முறையாக அல்போன்ஸா, கேசர் வகை மாம்பழங்களை ...

Read More »

அவுஸ்ரேலியா செல்லும் அகதிகள் மத ரீதியான புறக்கணிப்பு!

அவுஸ்ரேலியா செல்லும் அகதிகள் மத ரீதியான புறக்கணிப்புக்கு உள்ளாவதாக த நியுயோர்க் டைம்ஸ் இணைத்தளம் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளது. இதற்கமைய இலங்கையை சேர்ந்த பல அகதிகளின் விண்ணப்பங்களும் அவுஸ்ரேலியாவில் பரிசீலிக்கப்படாமல், நீண்டகாலமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியாவில் அதிக அளவில் சிரியா மற்றும் ஈராக்கைச் சேர்ந்த ஏதிலிகளுக்கு துரிதமாக அகதி அந்தஸ்த்து வழங்கப்படுகின்றது. இருந்தபோதும், இவற்றுள் 78 சதவீதமானவர்கள் கிறிஸ்த்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அகதி அந்தஸ்த்து வழங்கப்படும் போது ஏனைய மதத்தினருக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை கூறப்பட்டுள்ளது. இதனால் தாய்நாட்டில் பல்வேறு இன்னல்களுக்க உள்ளான ஏனைய ...

Read More »

ரஜினி படத்தில் நடித்ததால் நல்ல கதைகள் தேடி வருகின்றன

ரஜினி படத்தில் நடித்ததால் நல்ல கதைகள் தன்னை தேடி வருகின்றன என்று ரஜினியுடன் ‘கபாலி’ படத்தில் நடித்திருந்த தன்ஷிகா தெரிவித்திருக்கிறார். ‘தன்ஷிகா’ நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘எங்க அம்மா ராணி’. இதில் 2 குழந்தைகளின் அம்மாவாக தன்ஷிகா நடிக்கிறார். இதுபற்றி தன்ஷிகாவிடம் கேட்டபோது… “இந்த படத்தில் நடிக்க சிபாரிசு செய்தவர் இயக்குனர் சமுத்திரக்கனி. கதை கேட்டேன், பிடித்தது. இளையராஜா இசை என்றார்கள். நடிக்க ஒப்புக் கொண்டேன். மலேசியாவில் கதை நடக்கிறது. 2 குழந்தைகளின் அம்மாவாக எப்படி வாழ்க்கையை சமாளிக்கிறேன் என்பது கதை. படம் நன்றாக ...

Read More »

கொழும்பு – அவுஸ்ரேலியா இடையே நேரடி விமான சேவை விரைவில்!

இலங்கையர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், கொழும்பு – மெல்போர்ன் இடையிலான விமான சேவைகளை இவ்வாண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கவிருப்பதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போன் ஆகிய நகரங்களுக்கும் இலங்கைக்குமான விமான சேவைகள் பல ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்டதாகவும், கைவிடப்பட்ட சேவைகளை மீளத் தொடங்க இரு நாடுகளும் இணங்கியிருப்பதாகவும், இதன்படி ஏ330 எயார்பஸ் ரக விமானம் மூலமான சேவைகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், கொழும்பு ...

Read More »

அவுஸ்ரேலியாவில் முதன் முதலாக வீடு வாங்குவோருக்கு அரசு உதவி!

அவுஸ்ரேலியா நாட்டின் முக்கிய நகரங்களில் வீடுகளின் விலை மிகவும் அதிகரித்திருப்பதையடுத்து முதன்முதலாக வீடு வாங்குவோர் பெரும் நிதி நெருக்கடியை சந்திப்பதால் அவர்களுக்கு உதவும் வகையில் புதிய திட்டமொன்றை அரசு அடுத்த மாதம் Budget -நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. ஒருவர் ஈட்டும் வருமானத்திற்கு வரி விதிக்கும் முன்பே அந்த சம்பளத்தின் அல்லது வருமானத்தின் ஒரு பகுதியை வீடுவாங்க அவர் சேமிக்கவும், அந்த சேமிப்பிற்கு அரசு வரி வசூலிப்பதில்லை என்பதாகவும் புதிய திட்டமொன்றை அரசு அறிவிக்கலாம் என்று தெரிகிறது.

Read More »

அதிவேக ‘கமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஒளி பயணம் செய்யும் வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக கமராவை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். சுவீடனில் உள்ள லுண்டு பல்கலைக்கழகத்தின் எலியாஸ் கிறிஸ் டென்ஸ்சன் தலைமையிலான குழுவினர் அதிவேக ‘கேமரா’வை உருவாக்கியுள்ளனர். இந்த கேமரா மூலம் ஒளியின் பயணத்தை போட்டோ எடுக்க முடியும். இந்த கேமரா மூலம் ஒரு வினாடிக்கு 1 லட்சம் போட்டோக்கள் எடுக்க முடியும். ஒளியின் பயணத்தை போட்டோ எடுக்கும் போது அதில் இருந்து வெளியாகும் பல ஒளிகள் ஒன்றிணைந்து ஒரு போட்டோ ஆக வெளியாகிறது. விலங்குகளின் மூளை செயல்பாடு, குண்டு ...

Read More »

சாய் பல்லவிக்கு போட்டியாக தங்கை பூஜா!

சாய் பல்லவிக்கு போட்டியாக அவரது தங்கை பூஜா தமிழ் சினிமாவில் களமிறங்கிய இருக்கிறார். அதன் முன்னோட்டமாக அவர் நடித்துள்ள குறும்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு சிறிய பட்ஜெட்டில் உருவாகி வசூலில் கலக்கிய படம் ‘பிரேமம்‘. இந்த படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தமிழ் பெண்ணாக நடித்து புகழ் பெற்ற நடிகை சாய் பல்லவி. தற்போது மிகவும் பிஸியான நடிகை யாக உள்ளார். மலையாள ரசிகர்களின் மனங்களை கவர்ந்த சாய் பல்லவி, இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ் திரைப்படம் ஒன்றில் ...

Read More »