குமரன்

ஊர்காவற்துறையில், கடற்படையினரின் ஆக்கிரமிப்பில் தொல்லியல் சின்னங்கள்!

தொல்லியல் திணைக்களத்திற்குச் சொந்தமான ஊர்காவற்துறை கடற்கோட்டையினை காரைநகர் கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளதுடன், அதில் உல்லாச விடுதியினையும் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தொல்லியல் திணைக்களத்திற்கு இருக்கின்ற நிலையில் மேற்படிச் சின்னங்களை சேதப்படுத்தல், அதன் வடிவங்களை மாற்றி அமைத்தல், அதனை உரிமை கோரல் என்பன தண்டனைக்குரிய குற்றங்களாகும். இந்நிலையில் தொல்லியல் திணைக்களத்திற்குச் சொந்தமான ஊர்காவற்துறைக் கடற்கோட்டையானது போர்த்துக்கேயரினால் 17ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பழமை வாய்ந்த கோட்டையாகும். இக்கடற்கோட்டையினை கடற்படையினர் அடாத்தாக கையகப்படுத்தியதுடன், தற்போது உல்லாச விடுதியினை நடத்துவதன் மூலம் அதிகளவிலான ...

Read More »

‘மகாநதி’ படத்துக்காக உடல் எடையைக் கூட்டுகிறார் கீர்த்தி சுரேஷ்

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநதி’க்காக தன் உடல் எடையைக் கூட்ட உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். இதுகுறித்து, ”சாவித்ரியின் இளமைக்காலக் காட்சிகளில் தற்போது கீர்த்தி நடித்து வருகிறார். எடை அதிகரிப்பு பிரச்சினையால் பின்னாட்களில் சாவித்ரி அவதிப்பட்டு வந்தார். அந்தக் காட்சிகளுக்காக கீர்த்தி தனது உடல் எடையை அதிகரிக்க உள்ளார்” என்று தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் படம் ‘மகாநதி’. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் படம் வெளியாக ...

Read More »

அவுஸ்ரேலியா கடற்படையுடன், பயிற்சியில் ஈடுபடுவதற்கு இந்தியா மறுப்பு

அவுஸ்ரேலியா கடற்படையுடன், பயிற்சியில் ஈடுபடுவதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. மலபார் கூட்டுப்படை போர் ஒத்திகை பயிற்சிற்கு இந்தியா ஏற்னவே இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், மறுப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இந்துசமுத்திர எல்லையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஜப்பானும் இணைந்து கடல்தள போர் ஒத்திகைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மலபார் கூட்டு கடற்படை போர் ஒத்திகை என பெயரிடப்பட்டது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இந்தப் பயிற்சியானது இந்துசமுத்திர கடல் பகுதியின் கிழக்கே பசுபிக் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் அதிகமாக மது அருந்துவது யார் ?

அவுஸ்ரேலியாவில் மது அருந்துவது, போதைப்பொருள் மற்றும் புகைத்தல் ஆகியவற்றில் அதிகமாக ஈடுபடுவது யார் என அண்மையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஆய்வில் 12 முதல் 24 வயது வரையானோர் மிகக் குறைந்தளவே மது அருந்துகின்றனர் என்றும் அதேவேளை 50 தொடக்கம் 60 வயதுக்கிடைப்பட்டோர் சுமார் இரு மடங்கு அதிகம் மது அருந்துவதாக தெரியவந்துள்ளது. மேலும் பெண்களைவிட ஆண்கள் இரண்டு மடங்கு அதிகம் மது அருந்துவதாக குறித்த ஆய்வு தெரிவித்துள்ளது.

Read More »

ஏசி கண்ட்ரோல்

ஏசி அறைகளின் குளிரை கட்டுப்படுத்த ஒவ்வொரு முறையும் ரிமோட்டை பயன்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக இந்த சிறிய கருவியை வைத்தால் தானாகவே ஏசியை கட்டுப்படுத்தும். செயலி மூலம் குரல் வழியும் கட்டுப்படுத்தலாம்.

Read More »

அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தகவல் பரிமாற்றம் + கேள்வி பதில்

புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை அவுஸ்திரேலிய அரசு அண்மையில் கொண்டுவந்திருந்தது. இதுவரை விண்ணப்பிக்காத புகலிடக் கோரிக்கையாளர்கள் பற்றிய முடிவுகள் துரிதமாக எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த மாற்றங்களால் தமிழ்ப் பின்னணி கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் பலர் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைமை உள்ளது. இவை பற்றிப் பேசுவதற்காக அவுஸ்திரேலியத் தமிழர் பேரவை தகவல் மாலை ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த மாற்றங்கள் குறித்து விளக்கம் தரவும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும் என சிட்னியின் பிரபல சட்ட ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் பட்டிமன்றமாக மாறிவிட்டது!

காணாமல் ஆக்கப்பட்டோர் என்று சொல்லப்படுபவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஐயப்படுவதும், இது விடயத்தில் இவரது விரல் தமக்குப் பின்னால் வந்த ஜனாதிபதி மகிந்தவை நோக்கி நீளுவதும் சாதாரணமான ஒரு செய்தியாகப் பார்க்க முடியாதது. காணாமற் போனோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நூறு நாட்களைத் தாண்டிவிட்டது. இதனை ஒரு விளையாட்டாக அரசாங்கம் கருதி வருகின்றதென்றால், அவர்கள் மொழியில் ஒரு ஷசெஞ்சரி போடப்பட்டுவிட்டது எனலாம். நூறாவது நாள் போராட்டத்தையொட்டி ஏ-9 பிரதான வீதியை மறித்த மக்கள் அன்றைய நாளை குத்துப் போராட்டமாக ...

Read More »

டுபாயில் காவல் துறையாக பணிபுரியும் ‘ரோபோ’

டுபாயில் காவல் துறை பணியில் ஈடுபட்டுள்ள ரோபோ தெருக்களில் ரோந்து செல்கிறது. தற்போது சோதனை முறையில் ரோபோ காவல் துறை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ‘ரோபோ’ எனப்படும் எந்திர மனிதனின் செயல்பாடு அனைத்து துறைகளிலும் பரவிவருகிறது. முன்பு மருத்துவம், மற்றும் ஓட்டல் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டது. தற்போது காவல் துறை வேலையிலும் ‘ரோபோ’ ஈடுபட்டுள்ளது. உலகில் முதன் முறையில் துபாயில் ரோபோ காவல் துறை பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த ரோபோ துபாய் காவல் துறை சீருடை அணிந்துள்ளது. அது போலீஸ் அதிகாரிகளுடன் கைகுலுக்குகிறது. ராணுவ வீரர்கள் போன்று ...

Read More »

அவுஸ்ரேலியா- சிறிலங்கா விமானச்சேவை அக்டோபர் 29ம் நாள் ஆரம்பம்!

கொழும்புக்கும் மெல்போர்ணுக்குமிடையில் நேரடி விமான சேவைக்கு ஏர்பஸ் A330-200 விமானங்ககளைப் பயன்படுத்தப் போகிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர்பஸ் A330-200 களுடன் மெல்பேர்ண்-கொழும்பு விமான சேவையை அக்டோபர் மாதம் முதல் ஆரம்பித்த பின்னர், ஆஸ்திரேலியாவிற்கும் இலங்கைத் தீவிற்கும் இடையில் பயணம் செய்பவர்கள் நேரடியாகப் பயணிக்க முடியும். ஆஸ்திரேலியாவில் வாழும் அதிகப்படியான இலங்கையர்கள் விக்டோரிய மாநிலத்தில் வசிப்பதால், மெல்பேர்ணில் இருந்து இந்த சேவையை ஆரம்பிக்கப் போவதாகவும் இந்த ஆண்டு, அக்டோபர் 29ம் நாள் சேவை ஆரம்பமாகிறது என்றும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாகி கேப்டன் ...

Read More »

சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை: சுருதிஹாசன்

சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:- “சினிமாவில் எல்லா முடிவுகளையும் நானே எடுக்கிறேன். எனது தந்தை உனக்கு எது பிடிக்கிறதோ அதை சுதந்திரமாக செய் என்று கூறியிருக்கிறார். அவர் சொன்னதுபோல் சுதந்திரமாக இருக்கிறேன். அதற்காக கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவது இல்லை. சுதந்திரத்தை நல்லபடியாகவே பயன்படுத்துகிறேன். இந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்பதும் நான் எடுத்த முடிவுதான். தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். சினிமாவில் எனது ...

Read More »