தேர்தலில் தோற்றால் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவேன் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்த கருத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மணியுடன் ;பேசுங்கள் எனும் நிகழ்ச்சி நேற்றைய தினம் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி வி. மணிவண்ணன் கருத்து தெரிவிக்கும் போது, கடந்த 10 வருடங்களாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்பட்டு வருகிறேன். தமிழ் மக்களின் உரிமைக்காகவும் மண் மீட்புக்காகவும் என்னால் முடிந்த காத்திரமான பங்களிப்பை ...
Read More »குமரன்
ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு நாளை! 196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் களத்தில்
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ளது. ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் இம்முறை வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ;3652 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்களைச் சேர்ந்த ; 3800 வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர். கொழும்பு , கம்பஹா , களுத்துறை , கண்டி , மாத்தளை, நுவரெலியா , காலி , ...
Read More »நகுல் – ஸ்ருதி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது
தமிழில் பல படங்களில் நடித்திருக்கும் நகுல் – ஸ்ருதி தம்பதினருக்கு குழந்தை பிறந்துள்ளது.2003-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் நகுல். பின்னர் 2008-ம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் அவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தது. இவர் கடந்த 2016-ம் ஆண்டு தான் காதலித்து வந்த ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்தார். தனது 35-வது பிறந்தநாளன்று தன் மனைவி கர்ப்பம் தரித்திருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் நகுல் – ஸ்ருதி தம்பதினருக்கு பெண் குழந்தை ...
Read More »விற்பனை செய்யவில்லை என்றால் டிக்டாக் செயலிக்கு தடை
டிக்டாக் உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திடம் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விற்பனை செய்யவில்லை என்றால் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் கெடு விதித்துள்ளார். தென்சீன கடல் விவகாரம், வர்த்தகப்போரில் தொடங்கிய அமெரிக்க-சீன மோதல் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உச்சத்தை அடைந்தது. வைரஸ் தொடர்பாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டி வந்தனர். இந்த மோதலை மேலும் அதிகரிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக சீனா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியது. மேலும், அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள ...
Read More »பொதுத் தேர்தலில் 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்கள்!
நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்கள் என தான் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கின்றார். வாக்களிப்பு நிலையங்கள் அனைத்தும் கொரோனா வைரஸ் அண்டாத வகையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என பொதுமக்களுக்குத் தான் உறுதியளிப்பதாகத் தெரிவித்த அவர், காலநிலை நன்றாக இருந்தால் 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்க முடியும் எனவும் தெரிவித்தார். வாக்காளர்கள் கொரோனா வைரஸ் குறித்து அச்சமடையாமல் தமது வாக்குரிமையைப் பய்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டிருக்கின்றார். இதற்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் ...
Read More »25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் சுதாராணி
தமிழில் வசந்தகால பறவை, தங்கக்கிளி ஆகிய படங்களில் நடித்த சுதாராணி 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடித்துள்ளார். தமிழில் வசந்தகால பறவை, தங்கக்கிளி ஆகிய படங்களில் நடித்தவர் சுதாராணி. இவர் 25 வருடங்களுக்கு பிறகு கோசுலோ என்ற புதிய படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார். கோசுலோ என்கிற படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சந்திரகாந்த் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை பி.ஆர்.ராஜசேகர் தயாரித்துள்ளதுடன் கதை திரைக்கதையையும் அவரே எழுதியுள்ளார். கோபால் இசையமைக்க, ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். “தமிழ், தெலுங்கு, ...
Read More »நஞ்சு மாலைகளை அணிந்தவர்களின் இலக்கு வெற்றி பெற்ற பின்னரே மாலை !
நச்சு மாலைகளை கழுத்தில் அணிந்து போராடி மடிந்தவர்களின் இலக்கு வெற்றி பெற்று எம்மினத்திற்கு விடிவு கிடைத்த பின்னரே மேடைகளில் மாலை அணிவோம் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்தார். யாழில் நேற்றைய தினம் நடைபெற்ற பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்ற முற்பட்ட போது, நிகழ்வினை ஒழுங்கு செய்தவர்களில் ஒருவர் மலர் மாலை அணிவிக்க முற்பட்ட போது கழுத்தில் மாலை போட வேண்டாம் என் கைகளில் தாருங்கள் என வாங்கினார். அதன் பின்னர் தான் மாலை அணிந்து கொள்ளாமை பற்றி யாரும் தவறாக நினைக்க வேண்டாம் என ...
Read More »வாக்களிப்பதற்கு விடுமுறையளிக்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
வாக்காளர்கள் ; வாக்களிப்பதற்காக சொந்த இடங்களுக்கு செல்வதற்கு விடுமுறை ; வழங்காத ; நிறுவனம் மற்றும் வர்த்தக நிலையங்களின் அதிகாரிகளுக்கு எதிராக ; கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும். “பொதுத்தேர்தல் குறித்து மஹிந்த தேசப்பிரியவின் அறிவிப்பு | இதுவரையில் விடுமுறை கிடைக்கப் பெறாத ஊழியர்கள் தேர்தல் ஆணைக்குழுவிலோ அல்லது தொழிற் துறை ஆணைக்குழுவிலே விரைவாக முறைப்பாடு செய்யுங்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ...
Read More »‘எமக்கு ஆணை தாருங்கள்; செய்து காட்டுகின்றோம்’
“கடந்த காலங்களில், ‘அவர்களுக்கு’ வழங்கிய மக்கள் ஆணையை, இம்முறை எமக்கு வழங்கிப் பாருங்கள்; இந்த ஐந்து வருடங்களில் உங்களுக்குச் சரிவரவில்லை என்றால், நிராகரியுங்கள்; ஆனால், எதிர்வரும் ஐந்து வருடங்களை, நாங்கள் எப்படிப் பயன்படுத்துகின்றோம் என்று பார்த்து, மக்கள் எங்களுடன் வருவார்கள். நீங்கள் தொடர்ந்து வாக்களித்தவர்கள், எதையும் செய்யாமல் மீண்டும் வருகின்றனர்; வாக்குக் கேட்கின்றனர். அவர்களின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பில், மக்கள் தீர்மானித்துச் சரியானவர்களைத் தெரிவு செய்து, நாடாளுமன்றம் அனுப்பி வைக்கவேண்டும். இதுதான் முறைமையாகும்” என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் சார்பில் யாழ்ப்பாணத் ...
Read More »ஆஸ்திரேலியாவில் 19 ஆயிரம் அகதிகள் பாதிப்பு
ஆஸ்திரேலியாவில் கொரோனா காரணமாக ஏற்பட்ட மந்தநிலையினால் தற்காலிக விசாக்களில் உள்ள 19,000 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர் என ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சில் தெரிவித்துள்ளது. அத்துடன் 14,000 பேர் வீடற்ற நிலைக்கு செல்லக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் Bridging Visas எனப்படும் இணைப்பு விசாக்களில் உள்ளவர்களும் தற்காலிக பாதுகாப்பு விசாக்களில் உள்ள அகதிகளும் வேலைகளை இழந்தால் அவர்கள் பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடும் எனச் சொல்லப்படுகின்றது. இவர்களுக்கு அரசால் வழங்கப்படும் JobSeeker, JobKeeper பண உதவிகள் எதும் வழங்கப்படுவதில்லை. 2012ம் ஆண்டு ஈரானிலிருந்து ...
Read More »