தமிழில் வசந்தகால பறவை, தங்கக்கிளி ஆகிய படங்களில் நடித்த சுதாராணி 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடித்துள்ளார்.
தமிழில் வசந்தகால பறவை, தங்கக்கிளி ஆகிய படங்களில் நடித்தவர் சுதாராணி. இவர் 25 வருடங்களுக்கு பிறகு கோசுலோ என்ற புதிய படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார்.
கோசுலோ என்கிற படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சந்திரகாந்த் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை பி.ஆர்.ராஜசேகர் தயாரித்துள்ளதுடன் கதை திரைக்கதையையும் அவரே எழுதியுள்ளார். கோபால் இசையமைக்க, ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
“தமிழ், தெலுங்கு, கன்னடம் என மும்மொழிகளில் தயாராகியுள்ளது இந்தப்படம்.. கதையின் தன்மை கருதி தமிழ் பதிப்புக்கு கோசுலோ என்கிற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகை லட்சுமி, சுதாராணி, சாது கோகிலா, அச்சுதா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் கன்னட திரையுலகில் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவரும் சமூக ஆர்வலருமான சுரேஷ் ஹெப்லிகர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.