நச்சு மாலைகளை கழுத்தில் அணிந்து போராடி மடிந்தவர்களின் இலக்கு வெற்றி பெற்று எம்மினத்திற்கு விடிவு கிடைத்த பின்னரே மேடைகளில் மாலை அணிவோம் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்தார்.
யாழில் நேற்றைய தினம் நடைபெற்ற பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்ற முற்பட்ட போது, நிகழ்வினை ஒழுங்கு செய்தவர்களில் ஒருவர் மலர் மாலை அணிவிக்க முற்பட்ட போது கழுத்தில் மாலை போட வேண்டாம் என் கைகளில் தாருங்கள் என வாங்கினார்.
அதன் பின்னர் தான் மாலை அணிந்து கொள்ளாமை பற்றி யாரும் தவறாக நினைக்க வேண்டாம் என தெரிவித்து, தாங்கள் மாலை அணியாததன் நோக்கத்தை தெளிவு படுத்திய போதே அவ்வாறு தெரிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal