குமரன்

அமைச்சரவையில் இன்று ணில் முன்வைக்கவுள்ள யோசனை!

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­தொ­ழிக்கும் “20”ஆம் திருத்­தத்தை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்து அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரத்தைக் கோர­வுள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இன்று காலையில் அமைச்­ச­ரவை கூடு­கின்­றது. இந்­நி­லையில் இன்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லாது செய்யும் 20ஆம்  திருத்த சட்ட யோசனை  அமைச்­ச­ரவை  அங்­கீ­கா­ரத்­துக்­காக சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரிய வரு­கின்­றது. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்கும் பிர­தான கார­ணியை உள்­ள­டக்கி ஏனைய சில விட­யங்­க­ளுடன் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜித ...

Read More »

மாற்றமா ஏமாற்றமா?

ஜனாதிபதி தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் தடாலடியாக செயற்பட ஆரம்பித்துள்ளன. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டு அவர் தனது பரப்புரைகளை வெவ்வேறு வடிவங்களில் முன்னெடுத்து வருகின்றார். மக்கள் விடுதலை முன்னணியும் தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணியில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கி பரப்புரைகளை மெல்ல நகர்த்திக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நாட்டின் பழம்பெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினுள் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதில் முரண்பாடுகள் வலுத்துள்ளமையால் இழுபறியான நிலைமைகள் தொடருகின்றன. ...

Read More »

ஆஸி.யில் பறவையின் தாக்குதலுக்கு ஆளானவர் மரணம்!

பறவையிடமிருந்து தப்பிக்க முயல்கையில், வேகமாக துரத்திவந்த பறவை தாக்கியதில், தலையில் காயம்பட்டு 73 வயது சைக்கிள் பயணி ஒருவர் இறந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளதாக ஆஸ்திரேலிய வானொலி தெரிவித்துள்ளது. இயக்குநர் ஆல்பர்ட் ஹிட்ச்காக் படத்தில் வருவது போன்று பறவை தாக்கி மனிதன் இறந்த இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து ஊடகங்கள் கூறியுள்ளதாவது: சிட்னிக்கு தெற்கே ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், வொல்லொங்கொங்கின் வடக்கு புறநகர்ப் பகுதியான வூனோனாவில் இச்சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது. அங்குள்ள நிக்கல்சன் பூங்காவின் வேலியை ஒட்டியப் பகுதியில் இந்த பயணி ...

Read More »

தலைவி படத்தில் 4 தோற்றங்களில் கங்கனா!

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்படும் தலைவி படத்தில் கங்கனா ரணாவத் 4 தோற்றங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் படமாகிறது. விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. கங்கனா ரணாவத்தால் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்தியில் ஜெயலலிதா வாழ்க்கை படத்துக்கு ஜெயா என்று தலைப்பு வைத்தனர். அதனை கங்கனா ரணாவத் ஏற்காமல் தலைவி பெயரையே வைக்கும்படி ...

Read More »

இறந்த பின்னரும் ஓராண்டுக்கு புரண்டு படுக்கும் மனித உடல்!

இறந்தபின் உடல்களில் நகர்வு இருக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஒருவர் இறந்துவிட்டால், அவரை அமைதியாக இளைப்பாறுங்கள் என்கிறோம் (Rest in peace). ஆனால் இறந்த உடல்கள் இளைப்பாறுவதில்லை என ஆய்வு ஒன்றை மேற்கொண்ட ஆய்வாளர்கள் சிலர் கண்டறிந்துள்ளார்கள். சிட்னிக்கு அருகில் ஒரு இடத்தில், 17 மாதங்கள் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், ஆய்வாளர்கள் இறந்த உடல்களை பெட்டிக்குள் வைத்து அவற்றை கமெராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்கள். உடல் அழுகும்போது, குறிப்பிடத்தக்க அளவில் உடல் நகர்வதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த ஆய்வின் முக்கிய பயன் என்னவென்றால், ...

Read More »

இங்கிலாந்தின் ஆதரவை கோரி ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டம்!

ஹாங்காங்கை சீனாவிடம் இருந்து மீட்க இங்கிலாந்து உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹாங்காங்கில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங் 1997-ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதல் ‘ஒரு நாடு இரண்டு நிர்வாகம்’ என்கிற கொள்கையில் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்து வருகிறது. இந்த சூழலில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்போது சீனாவிடம் இருந்து ஜனநாயக உரிமைகள் கோரும் போராட்டமாக உருவெடுத்து ...

Read More »

இராணுவச் சிப்பாய் கைது! வீட்டிலிருந்தவர்களை தாக்கி கொள்ளை!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீட்டிலிருந்தவர்களை தாக்கி கொள்ளையிட்டார் என்ற சந்தேகத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவரை கைது செய்துள்ளதாக சுன்னாகம் காவல் துறையினர்  தெரிவித்தனர். இந்தக் கொள்ளைச் சம்வம் இணுவில் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இணுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் சத்தம் கேட்டமையினால் வீட்டின் குடும்பத் தலைவர் கதவை திறந்துள்ளார் அப்போது முகத்தை முழுமையாக மூடியவாறு கூரிய ஆயுதங்களுடன் நின்ற ஐந்து பேர் கொண்ட கும்பல் குடும்பத் தலைவரை கடுமையாக தாக்கியதுடன் வீட்டுக்குள் ...

Read More »

யாழ்ப்பாணத்தில் மர்மக்கும்பல் தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் இரு வேறு இடங்களில் மர்மக்குழுவின் தாக்குதல்களினால் ஐந்து பேர் படுகாயமடைந்ததுடன் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் முகங்களை மூடியவாறு சென்ற ஆறுபேர் கொண்ட கும்பல் வீட்டிலிருந்து பொருட்களை அடித்து நொருக்கியது. அத்துடன் வீட்டிலிருந்த வயோதிபத்தம்பதியினரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் இருவரும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த ரவீந்திரன் வயது 70 செல்வராசாத்தி வயது 65 ...

Read More »

3வது முறையாக அஜித்துக்கு மகளாக நடிக்கும் அனிகா!

என்னை அறிந்தால், விஸ்வாசம் படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்துக்கு மகளாக நடிக்க அனிகா ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தவர் அனிகா. இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. உனக்கென்ன வேணும் சொல்லு என்ற பாடல் பெரும்பாலான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது. இந்த படத்தை அடுத்து அப்பா – மகள் பாசத்தை மையப்படுத்தி உருவான விஸ்வாசம் படத்திலும் அனிகா அஜித்துக்கு மகளாக ...

Read More »

அதிகாரப் போட்டியின் விளைவு..!

அரச தொலைக்காட்சி ரூப­வா­ஹி­னியை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  அதி­ர­டி­யாகப் பாது­காப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்­துள்ளார். நிறை­வேற்று அதி­காரம் கொண்ட அவ­ரு­டைய இந்தத் திடீர் நட­வ­டிக்கை ஊடக சுதந்­தி­ரத்தை அச்­சு­றுத்­த­லுக்குள்ளாக்­கி­யுள்­ளது. இதனால் பல­த­ரப்பிலிருந்து கவ­லையும் கண்­ட­னமும் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. அர­சாங்­கத்­தினால் நடத்­தப்­ப­டு­கின்ற அல்­லது அதன் பொறுப்பிலுள்ள ஒரு நிறு­வனம் அரச சார்­பு­டை­ய­தா­கவே இருக்கும். அரச சார்­பு­டை­ய­தா­கவே செயற்­படும் என்ற பொது­வான கருத்­தியல்  நாட்டில் நீண்ட கால­மா­கவே நில­வு­கின்­றது. அரச சார்­பு­டை­ய­தாகக் கரு­தப்­ப­டு­கின்ற அல்­லது அர­சுக்கு ஆத­ர­வாகச் செயற்­ப­டு­கின்ற ஒரு நிறு­வனம் பாது­காப்பு அமைச்சின் கீழ் இருந்தால் ...

Read More »