நிக்கேய் ஏசியன் ரிவியு தமிழில் ரஜீபன் கொழும்பிலிருந்து 400 கிலோமீற்றர் தூரத்தில் யாழ்ப்பாணத்தில் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமானநிலையம் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பூகோள அரசியல் அதிகார போட்டியில் இலங்கையின் முன்னர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி சிக்குப்பட்டுள்ளது. ஒக்டோபர் 17 ம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் திறக்கப்பட்டமை ,ஜனாதிபதி தேர்தலில் மக்களின் வாக்குகளை பெறுவதற்கான ஒரு முயற்சியே என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த தேர்தல் கொழும்பிற்கும் அதன் இரு கொடையாளர்களிற்கும் இடையிலான உறவுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. நவம்பர் 16 ...
Read More »குமரன்
தஞ்சக்கோரிக்கையாளர்களை கடத்தியவருக்கு பிணை மறுத்துள்ள ஆஸ்திரேலிய நீதிமன்றம்!
ஆஸ்திரேலியா: இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக குழந்தைகள் உள்பட 353 தஞ்சக்கோரிக்கையாளர்களை கடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மேதெம் ரதி என்ற 43 வயது ஈராக்கியருக்கு பிணை (ஜாமீன்) மறுத்துள்ளது ஆஸ்திரேலிய நீதிமன்றம். பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இவர் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறக்கூடிய வாய்ப்புள்ளதாகக் கூறி பிணை மறுக்கப்பட்டுள்ளது. 2001ம் ஆண்டு நடந்த இந்த ஆட்கடத்தல் சம்பவத்தில் 353 பேரும் கடல் மூழ்கி இறந்தது, அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்னர், இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்த ...
Read More »இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் ராணுவம் எதிர்ப்பு!
கர்தார்பூருக்கு வர சீக்கியர்களுக்கு பாஸ்போர்ட் வேண்டாம் என கூறிய இம்ரான்கான் முடிவுக்கு பாகிஸ்தான் ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்தார்பூருக்கு வர இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை, அடையாள அட்டை போதுமானது என கூறிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அந்த நாட்டின் ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பிலும், இறையாண்மையிலும் சமரசம் இல்லை என ராணுவம் திட்டவட்டமாக கூறி உள்ளது. சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக், தனது வாழ்வின் கடைசி 18 ஆண்டுகளை பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அங்கு அவரது நினைவாக கர்தார்பூர் சாகிப் ...
Read More »இரத்மலானை – யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை ஆரம்பம்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை Fits Air இன்று பரிட்சார்த்தமாக மேற்கொள்கின்றது. இரத்மலானையில் இருந்துபுறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை ஆரம்பித்தது FitsAir விமானம். இதில் இந்த விமான சேவை அதிகாரிகள் பயணிக்கின்றனர்.இது யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து இடம்பெறும் முதலாவது விமான சேவையாக பதிவாகியுள்ளது. மீண்டும் இந்த விமானம் பி.ப.2.20 மணிக்கு சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு இரத்மலானையைச் ...
Read More »11ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு!
விளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளைத் தடுத்தல்’ சட்டமூலத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்ற காரணத்தை அடிப்படையாக வைத்து நவம்பர் 11 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு விசேடமாக நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலையியற் கட்டளை இலக்கம் 16ற்கு அமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு விசேடமாக பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று பிற்பகல் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் ...
Read More »நடிகராக அறிமுகமாகும் அலெக்ஸாண்டர் பாபு!
இணையத்தில் கலக்கி வரும் அலெக்ஸாண்டர் பாபு, மாதவன் நடிக்கவுள்ள படத்தில் காமெடியனாக நடிக்க ஒப்பந்தமானார். அமோசன் ப்ரைமில் ‘அலெக்ஸ் இன் வுண்டர்லேண்ட்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அலெக்ஸாண்டர் பாபு. மேலும், யூடியூப் பக்கத்தில் தனியாக சேனல் ஒன்றும் நடத்தி வருகிறார். இவர் தனியாகச் செய்யும் காமெடி நிகழ்ச்சிகள் யாவுமே இணையத்தில் மிகவும் பிரபலம். தற்போது புதுமுக இயக்குநர் திலீப் இயக்கத்தில் மாதவன் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். ‘ராக்கெட்டரி’ படத்தின் பணிகள் அனைத்தையும் மாதவன் முடித்தவுடன் இப்புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கும் எனத் தெரிகிறது. இந்தப் ...
Read More »கண்களுக்குள் பச்சை குத்திக்கொண்ட அழகிய இளம்பெண்!-அவுஸ்ரேலியா
பச்சை குத்திக்கொள்வதில் தீராத வெறிகொண்ட ஒரு பெண், கண்களில் பச்சை குத்திக்கொண்டதால் பார்வை இழக்கும் நிலைக்கு சென்றார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ’டிராகன் பெண் ’ என்று அழைக்கப்படும் Amber Luke (24)க்கு பச்சை குத்திக்கொள்வது என்றால் அப்படி ஒரு ஆசை. சுமார் 26,000 டொலர்கள் செலவு செய்து, தலை முதல் பாதம் வரை 200 இடங்களில் பச்சை குத்திக்கொண்டுள்ள Amber, தனது கண்களையும் நிறம் மாற்றிக்கொள்ள முடிவு செய்தார். அதன்படி கண்களில் பச்சை குத்திகொள்வது என தீர்மானித்தார் Amber. அவரது கண்களுக்குள் 40 நிமிடங்கள் ...
Read More »தீர்க்கமில்லாத தீர்மானங்கள் !
இழுத்தடிப்பு நிலைமைகளுக்கு மத்தியில் தமிழ்க்கட்சிகள் தமது நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றன. தனித்தனி அறிவிப்புக்களாகவே இவைகள் வெளிவந்துள்ளன. ஐந்து கட்சிகள் இணைந்த கூட்டு, மக்கள் தங்கள் விருப்பப்படி வாக்களிக்கலாம் என்று கூறியிருந்தது. தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு முழுமையான ஆதரவளிப்பது என்று உறுதி யாகத் தீர்மானித்து, ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது. ஆனாலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கட்சி என்ற வகையில் ஏனைய இரு பங்காளிக் கட்சிகளுடனும், தமிழரசுக் கட்சி கலந்தாலோசித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முடிவு என்ன என்பது அறிவிக்கப்படும் என்றும், அந்தப் பொறுப்பு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய ஆர்.சம்பந்தனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது ...
Read More »மிதவைப் படகில் அலைக்கழிந்த நியூஸிலாந் பெண்!
மிதவைப் படகொன்றில் கடலில் சுமார் இரு நாட்களாக அலைக்கழிந்த பெண் சுற்றுலாப் பயணியொருவர் இனிப்புகளை உண்டு உயிர்பிழைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். நியூஸிலாந்தைச் சேர்ந்த குஷிலா ஸ்டெயின் என்ற 45 வயதுப் பெண்ணே கிரேக்கத் தீவான கிரெட்டிற்கு அப்பால் ஏஜியன் கடலில் அலைக்கழிந்து கொண்டிருந்த படகிலிருந்து 37 மணி நேரம் கழித்து மீட்கப்பட்டுள்ளார். அவர் இதன்போது தன்னிடமிருந்த லொலி என அழைக்கப்படும் வேகவைத்த இனிப்பு தின்பண்டங்களை உண்டும் கடும் குளிரைத் தாங்கிக்கொள்வதற்கு பிளாஸ்டிக் விரிப்பால் உடலைப் போர்த்தியிருந்தும் உயிர் பிழைத்திருந்துள்ளார். இந்நிலையில் தன்னை மீட்புப் பணியாளர்கள் ...
Read More »அடுத்த வாரமளவில் நாட்டில் குண்டு வெடிக்கலாம்!
அடுத்த வாரங்களில் நாட்டில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடத்தும்படி தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவினால் இந்த முறைப்பாடு நேற்று புதன்கிழமை செய்யப்பட்டுள்ளது. மேலும், குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றை தேர்தல் நலனுக்காக மேற்கொள்ள சதி திட்டமொன்றை செய்து வருவதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
Read More »