ஆஸ்திரேலியாவில் பற்றி எறியும் தீயின் கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே தன் தொப்பியை ரூ.5 கோடிக்கு ஏலத்தின் மூலம் விற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயால் பலரும் பாதிக்கப்பட்டனர். இந்த காட்டு தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து உதவ முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே, தீயின் கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி வழங்குவதற்காக டெஸ்ட் கிரிக்கெட் ...
Read More »குமரன்
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சிறிலங்கா வருகை!
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோப் எதிர்வரும் 13 ஆம், 14 ஆம் திகதிகளில் சிறிலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின்போது அவர், சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றி கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சீன வெளிவிவகார அமைச்சரும் சிறிலங்கா வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »அடுத்த வாரம் சிறிலங்கா வரும் அலிஸ் வெல்ஸ்!
அமெரிக்காவின், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் எதிர்வரும் 13 – 22 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனவரி 13 – 14 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் அவர் கொழும்பில் தங்கியிருந்த உயர் அரசாங்க அதிகாரிகளையும், சிவில் சமூகத்தின் உறுப்பினர்களையும் சந்தித்து, இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவுள்ளார். அதன் பின்னர் அலிஸ் வெல்ஸ் 15-18 ஆம் திகதி ...
Read More »தென்னாபிரிக்க விமானம் விபத்து!
தென்னாபிரிக்க விமானப் படைக்கு சொந்தமான விமானம் ஒன்று கொங்கா குடியரசில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ளது. கொங்கோ குடியரசில் கோமா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் இடப்பக்க இயந்திரம் ஒன்று தீப் பிடித்ததன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது எனினும் விரைந்து செயற்பட்ட விமான நிலையத்தின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையினால் பாரிய சேத விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. விமானம் விபத்துக்குள்ளானபோது 59 பயணி ஐ.நா.வின் படையணியைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்களும் இருந்துள்ளனர்.
Read More »ஆஸி. தீயணைப்பு வீரர் உயிரிழப்பு! குழந்தைக்கு பதக்கம் சூட்டும் நிகழ்வு!
அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த போராடிய தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தத்தையடுத்து, அவரது 20 மாதம் நிரம்பிய மகளுக்கு தந்தையின் துணிச்சலுக்காக பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ‘O’Dwyer’ என்ற 36 வயதான அவுஸ்திரேலியாவின் தீயணைப்பு படை வீரர் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி அன்று காட்டுத் தீயை அணைப்பதற்காக போராடியபோது மரம் விழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்தார். இந்த நிலையில் O’Dwyer’ இன் உயிர்த் தியாகத்தை கெளரவப்படுத்தும் வகையில், அவரது இறுதி நிகழ்வில் O’Dwyer’ இன் 20 மாதம் நிரம்பிய மகளுக்கு உயரிய கெளரவ ...
Read More »அவுஸ்திரேலிய காட்டுத் தீ- 10,000 ஒட்டகங்களை கொல்வதற்கு உத்தரவு!
அவுஸ்திரேலியாவில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக காட்டுத் தீ வேகமாகப் பரவி வருகின்ற நிலையில் முழு நாடுமே திண்டாட்டத்தை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டிலுள்ள ஒட்டகங்கள் வரட்சியால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் அதிகளவு நீரை அருந்துவதைத் தடுத்து நிறுத்த அங்குள்ள 10,000 க்கு மேற்பட்ட ஒட்டகங்களைக் கொல்லும் நடவடிக்கை இன்று புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அனன்கு பிட்ஜன்ட்ஜட்ஜாரா யன்குனிட்ஜட்ஜாரா பிராந்தியத்தைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்கள் ஒட்டகங்களைக் கொல்வதற்கான இந்த உத்தரவை பிறப்பித்துள்னர். இதற்காக உலங்குவானூர்திகளில் உத்தியோகபூர்வமாக துப்பாக்கிச் சூட்டை நடத்துபவர்களை அனுப்ப ...
Read More »காலத்தின் கட்டாயம்…
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் அது பொலிஸ் பணிகளை அரசியல் மயமாக்குவதற்கு வழிவகுக்கும் என அவர் கருத்து வெளியிட்டுள்ளார். ஆனால் மொழிப்பிரச்சினை காரணமாக வடக்கு–கிழக்கு தமிழ்ப்பிரதேசங்களில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகளும் முறுகல் நிலைமைகளுமே பல்வேறு வன்முறைகளுக்கு கடந்த காலங்களில் வித்திட்டிருந்தன என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் கொள்கை விளக்க உரை தமிழ் அரசியலையும் தமிழ் மக்களையும் கையறு நிலைமைக்குள் தள்ளியுள்ளது. தனி ஒரு சமூகத்தின் பெரும்பான்மை பலத்தின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள அவர் பெரும்பான்மை இன ...
Read More »விருது மட்டும் வேண்டுமா?
பட விழாக்கள் எதிலும் கலந்துகொள்ளாமல் இருக்கும் நயன்தாரா, விருது விழாவில் மட்டும் பங்கேற்பதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நயன்தாரா. இவர் கடந்த ஆண்டு சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்மா ரெட்டி’, விஜய்யுடன் ‘பிகில்’, அஜித்துடன் ‘விஸ்வாசம்‘, தனி கதாநாயகியாக ‘ஐரா’, சிவகார்த்திகேயனுடன் ‘மிஸ்டர்.லோக்கல்’ ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் எந்த படத்தின் நிகழ்ச்சியிலும் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. சீரஞ்சிவி நடித்த ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையாக மாறியது. கோடிகளில் சம்பளம் வாங்குபவர் ...
Read More »பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறும் இளவரசர் ஹரி தம்பதி
பிரிட்டன் நாட்டின் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அவர்களின் இந்த முடிவு பிரிட்டனில் பெரிய பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் குழந்தை ஆர்ச்சியை வளர்ப்பதில் ஐக்கிய இராச்சியத்திற்கும் வட அமெரிக்காவிற்கும் இடையில் தங்கள் நேரத்தை செலவு செய்ய போகிறார்களாம். அதேபோல் இவர்கள் சொந்தமாக வேலை பார்த்து உழைக்க உள்ளனர். பரம்பரை சொத்து வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். சொந்தமாக பொருளாதார ரீதியாக வாழ்க்கையில் நிறைவு பெற வேண்டும் என்று இவர்கள் கூறியுள்ளனர். பிரிட்டன் ...
Read More »புலியின் படத்தை வரைந்த இளைஞர்களை அச்சுறுத்திய புலனாய்வு பிரிவு!
யாழ்.வல்வெட்டித்துறையில் சுவரோவியமாக புலியின் படத்தை வரைந்த இளைஞர்களை புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களும் காவல் துறையினரும் அச்சுறுத்தியதுடன் , கீறிய புலிப்படத்தையும் அழிக்க வைத்துள்ளனர். நாட்டின் பல பாகங்களிலும் சுவரோவியங்களை இளையோர் கீறி வருகின்றனர். அதற்கு பல தரப்பினரும் ஆதரவு நல்கி வருவதுடன் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்நிலையில் வல்வெட்டித்துறை வேம்படி பகுதியில் நேற்று புதன்கிழமை அப்பகுதி இளையோர் ஒன்றிணைந்து புலி ஒன்றின் படத்தினை சுவரோவியமாக வரைய முனைந்துள்ளனர். புலியின் படத்தினை வரைந்து கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு காவல் துறையுடன் வந்த புலனாய்வு பிரிவினர் புலிப்படம் ...
Read More »