சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அரசியலமைப்பில் காணப்படும் அதிகாரங்களின் பிரகாரம் கொரோனா வைரஸ் தொற்றை இலங்கையிலிருந்து ஒழிப்பதில் அனைத்து மக்களினதும் இயல்பு வாழ்க்கையை சுமுகமாக பேணுவதற்கான நெறிப்படுத்தல் அதிகாரம் தற்போது தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி பசில் ராஜபக்ஷ செயலணியின் தலைவராகவும் பிரதமரின் மேலதிக செயலாளர் என்டன் பெரேரா செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாகாண ஆளுநர்கள், பல்வேறு அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படை தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை தலைவர்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அதிகார சபைகளின் ...
Read More »குமரன்
எப்படி இருக்கிறது ஜெர்மனி?
மரணமடைந்த ஜெர்மானியர் ஒருவரின் இறுதிக் கிரியைகள் எப்படி நடந்தன என்பதை ஜெர்மானியத் தொலைக்காட்சியில் காட்டினார்கள். இது வழக்கத்துக்கு மாறானது. ஆனால், ஏன் காட்டினார்கள்? ‘அந்த மனிதர் கரோனா தொற்றால் இறந்ததால் தொலைக்காட்சி இடமளித்திருக்கிறது’ என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி அல்ல. அவர் கரோனா தொற்றால் இறக்கவில்லை; இயற்கையான மரணம். அப்படியென்றால், இறந்தவர் அவ்வளவு பிரபலமா? ம்ஹூம். அதுவும் கிடையாது. பிறகு, எதற்காகத் தொலைக்காட்சி இவ்வளவு முக்கியத்துவம் தந்தது? ஏன் தந்தது என்பதில்தான் இன்றைய ஜெர்மனியின் முழு நிலையும் தெரியவரும். கரோனா பாதிப்பு எந்த அளவுக்கு ஜெர்மனியைப் பாதித்திருக்கிறது ...
Read More »கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது- உலக சுகாதார அமைப்பு தகவல்
கொரோனா வைரசை ஒழிக்க ஊரடங்கு உத்தரவு போட்டு மக்களை முடக்குவது மட்டுமே பலன் தராது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மனித குலத்திற்கு பெரும் சவாலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கி உள்ளது. மனிதர்கள் மூலமாக வேகமாக பரவி வருவதால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளிலேயே முடக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தனித்திருப்பதாலும், சமூக விலகலை பின்பற்றுவதாலும் வைரசை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவத்துறை அறிவுறுத்தி உள்ளது. ...
Read More »சகல வணிக வங்கிகளையும் திறந்து வைக்குமாறு உத்தரவு!
கொடுக்கல் வாங்கல்களையும், அத்தியாவசிய தேவைகளையும் கருத்தில் கொண்டு நாடு தழுவிய ரீதியில் உள்ள சகல வணிக வங்கிகளையும் திறந்து வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வங்கிகளின் பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதேவேளை ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்கும் செயற்பாடு இன்று ஆரம்பமாகியது. லங்கா சதோச மற்றும் பிக் மீ சேவையின் ஊடாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. நுகர்வோர் பிக் மீ செயலியின் மூலம் சதோச நிறுவனங்களுக்கு தமக்கு தேவைப்படும் பொருட்கள் தொடர்பில் அறிவித்தால் அவற்றை வீடுகளிலேயே ...
Read More »24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை!
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இவரும் இனங்காணபடவில்லை காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More »அம்மாவுடன் ஊறுகாய் போட்ட நடிகர்
தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் தன்னுடைய அம்மாவுடன் இணைந்து ஊறுகாய் செய்திருக்கிறார். தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நாகசவுரியா. இவர் தமிழ் சினிமாவில் விஜய் இயக்கிய தியா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும் பல படங்களையும் தயாரித்துள்ளார். கொரோனா எதிரொலியால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், நடிகர்-நடிகைகள் அனைவரும் தங்கள் குடும்பங்களுடன் நேரங்களை செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் நாக சவுரியா தனது அம்மாவுடன் சேர்ந்து ஊறுகாய் போட்டுள்ளார். மேலும் இந்த காணொளி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ...
Read More »பணியாளர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் கொடுத்த பிரகாஷ் ராஜ்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனது பணியாளர்கள் அனைவருக்கும் முன்கூட்டியே சம்பளம் கொடுத்திருக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல துறைகளும் முடங்கி இருக்கிறது . இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ், தனது பணியாளர்கள் அனைவருக்கும் மே மாதம் வரை முன்கூட்டியே சம்பளம் கொடுத்திருக்கிறார். இது குறித்து அவர் டுவிட்டரில், எனது பண்ணை வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் வீட்டுப் பணியாளர்கள் என அனைவருக்கும் மே மாதம் வரைக்குமான சம்பளத்தை முன்கூட்டியே வழங்கி விட்டேன். கட்டுப்பாடு காரணமாக நின்று போயிருக்கும் எனது ...
Read More »”அம்மா நான் மரணித்து விடுவேனா?”
முழு உலகையே நடுநடுங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தாயொருவர் தனது மகனை நினைத்து கண்ணீர் வடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தனது ஐந்து வயது மகன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, மரண விளிம்பில் இருப்பதால் தான் மிகுந்த வேதனையுடன் இருப்பதாகவும், இதனால் ஒவ்வொரு தாய்மாரும் தனது குழந்தைகள் தொடர்பில் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். குறித்த தாய் மேலும் குறிப்பிடுகையில், 30 வயதான தனக்கு, ஐந்து வயதுடைய மகனொருவர் இருப்பதாகவும், குறித்த குழந்தை மிகுந்த ...
Read More »வைரஸ் எவ்வேளையிலும் தாக்கலாம் எங்களை விடுதலை செய்யுங்கள்!
அவுஸ்திரேலியாவின் விலாவூட் தடுப்பு முகாமில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்கொட் மொறிசனிற்கு நூற்றிற்கும் மேற்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர். கொரோனாவைரஸ் பரவிவரும் இவ்வேளையில் தங்களை விடுதலை செய்யுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா எந்த தருணத்திலும் எங்கள் சூழலிற்குள் நுழையலாம் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாங்கள் இலகுவாக பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளோம்,மோசமாக நோய்வாய்படக்கூடிய நிலையில் உள்ளோம் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ள அவர்கள் மரணம் கூட ஏற்படலாம் என தெரிவித்துள்ளனர். அரசாங்கம் எங்களை எங்கள் குடும்பத்தவர்கள் ...
Read More »அவுஸ்திரேலிய மருத்துவமனைகளில் சத்திரகிசிச்சைகளிற்கு புதிய கட்டுப்பாடு!
அவுஸ்திரேலியாவில் அவசியமான சத்திரசிகிச்சைகள் தவிர ஏனைய சத்திரசிகிச்சைகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதமர் ஸ்கொட் மொறிசன் இதனை அறிவித்துள்ளார் . தனியார் அரச மருத்துவமனைகள் இரண்டும் இந்த உத்தரவை பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையிலேயே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மோசமானதாக நிலைமை மாறி ஆபத்தானதாக மாறக்கூடிய நிலையில் உள்ள 30 நாட்களிற்குள் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிற்கும் 90 நாட்களிற்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட ஆனால் அவசர நிலையில் உள்ள நோயாளர்களிற்கும் சத்திரசிகிச்சை செய்யலாம் என பிரதமர் தெரிவித்துள்ளார். ...
Read More »