குமரன்

அவுஸ்திரேலியா பிரிஸ்பேர்னில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மரணம்

ஈழத்தில் இருந்து  வந்து புகலிடம்கோரிய தமிழ் இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியா பிரிஸ்பேர்னில் தற்கொலை செய்து மரணமடைந்துள்ளார். மட்டக்களப்பு, பட்டிருப்பு தொகுதி மண்டூரைச் சேர்ந்த கிசோபன் ரவிச்சந்திரன் என்ற 25 வயது இளைஞரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக குயின்ஸ்லாந்து புலம்பெயர் தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது. 2012ம் ஆண்டு படகு மூலம் ஆஸ்திரேலியா வந்து சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ன் நகரங்களில் வாழ்ந்துவந்த கிசோபன், கடந்த டிசம்பர் 2ம் திகதி பிரிஸ்பேர்னில் வைத்து தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக கிசோபனின் நெருங்கிய நண்பரும் குயின்ஸ்லாந்து புலம்பெயர் தமிழர் அமைப்பைச் சேர்ந்தவருமான தயா ...

Read More »

திரிஷாவுக்கு உதவிய சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், நடிகை திரிஷாவின் ராங்கி படத்துக்கு உதவி உள்ளார். எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் சரவணன், அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘ராங்கி’. இப்படத்திற்கான கதை மற்றும் வசனத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருக்கிறார். ‘ராங்கி’ என்றால் அடங்காத, துணிச்சல் மிகுந்த பெண் என்று பொருள். படத்தில் நிறைய சண்டை காட்சிகள் உள்ளன. இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்த ...

Read More »

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைகள் அகதிகளை கொலை செய்கின்றன

மெல்பேர்னில் தமிழ் அகதி தற்கொலை செய்துகொண்டுள்ளமை அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைகள் அகதிகளை கொல்கின்றன என்பதற்கான மற்றுமொரு ஆதாரம் என தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது. வருணிற்கு 18 வயது அவரின் முன்னாள் நீண்டகால முழுமையான வாழ்க்கை காத்திருந்தது, ஆனால் அரசாங்கத்தின் கொள்கைகளே அவர் இனி தான் வாழ்வதில் அர்த்தமில்லை என்ற முடிவிற்கு வரும் நிலையை ஏற்படுத்தின என தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது. இந்த வருடம் மாத்திரம் 9 தமிழ் அகதிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என அறிகின்றோம் என தமிழ் அகதிகள் பேரவையின் பேச்சாளர் ...

Read More »

உடல் தகுதியை எட்டினால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் கேமரூன் கிரீன் விளையாடுவார் – லாங்கர் தகவல்

உடல் தகுதியை எட்டினால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் கேமரூன் கிரீன் விளையாடுவார் என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டரான கேமரூன் கிரீன் இடம் பெற்று உள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிரான 2-வது பயிற்சி ஆட்டத்தில் (பகல்-இரவு) பந்து வீசிய போது பும்ரா அடித்த பந்து தலையில் தாக்கியது. இதனால் நிலை குலைந்த கேமரூன் கிரீன் தரையில் அமர்ந்தார். இதில் அவர் சிறிது அதிர்ச்சியான உணர்வு அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிராக நாளை மறுநாள் ...

Read More »

ஜெனீவா குறித்து தமிழ்க் கட்சிகளிடையே இணக்கப்பாடு வருமா?

கொரோனா அச்சத்துக்கு மத்தியிலும் மார்ச் மாதம் நடைபெறப்போகும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் குறித்து இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்களின் கவனம் திரும்பியிருக்கின்றது. பிரதான தமிழ்க் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி ஒன்று திரைமறைவில் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதும் இதற்குக் காரணம். இதன் ஓரு அங்கமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தயாரிக்கப்பட்ட ஆவணம் ஒன்று அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் ...

Read More »

புற ஊதா எல்.இ.டி.க்கள் கொரோனாவை எளிதில் கொல்லும்

புற ஊதா எல்.இ.டி.க்கள் (ஒளி உமிழும் டயோட்கள்) கொரோனாவை விரைவாகவும் எளிதாகவும் கொல்லும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றின் ஒளிவேதியியல் மற்றும் ஒளிஉயிரியல் இதழ் நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த ஆய்வின் இணை ஆசிரியரான ஹதாஸ் மமனே கூறுகையில், “கொரோனா வைரஸ் கிருமி நீக்கம் செய்வதற்கு உலகம் முழுவதும் தற்போது பயனுள்ள தீர்வுகளை தேடுகிறது. அந்த வகையில் புற ஊதா எல்.இ.டி.க்கள் கொரோனாவை ஒழிப்பதில் பயனளிக்க வல்லது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். புற ஊதா ஒளியை வெளிப்படுத்தும் ...

Read More »

யாழ். ஊர்காவற்றுறையில் காய்கறிக்குத் தட்டுப்பாடு

யாழ். மருதனார்மட காய்கறிச் சந்தையில் கொரோனா தொற்று இனங்காணப் பட்டதையடுத்து ஊர்காவற்றுறை பொதுச்சந்தை மூடப்பட்டுள்ளதால் காய்கறி வகைகளுக்கு அங்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஊர்காவற்றுறையில் காய்கறி வியாபாரம் செய்வோர் மருதனார் மட சந்தையிலிருந்தே காய்கறிகளைக் கொள்வனவு செய்வதால் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதனால் பிரதேச மக்கள், காய்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் மீன் சந்தை மட்டுமே இயங்குவதாகவும் காய்கறிக் கொள்வனவுக்காக புளியங்கூடல் போன்ற நீண்ட தூரத்துக்கே செல்ல வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட வியாபாரிகளுக்கு இன்று பிசிஆர் சோதனை நடத்தப்படவுள்ளதாக பிரதேச வாசி ஒருவர் ...

Read More »

யாழில் தொற்றில்லாத நபரையும் கொவிட்-19 சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள்!

கொவிட்-19 வைரஸ் தொற்று இல்லாத ஒருவரை கொரோனா சிகிச்சை நிலையத்தில் சேர்ரத்த உடுவில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் செயலால் குடும்பஸ்தர் ஒருவர் மனநலப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். மருதனார்மடம் பொதுச்சந்தையில் வெற்றிலைக் கடை நடத்தும் குடும்பஸ்தர் ஒருவர், சுன்னாகம் பகுதியில் வசித்து வருகின்றார். அவரிடமும் மாதிரி பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்குக்கு உட்படுத்தப்பட்டது. இருப் பினும் அதன் பெறுபேறை நேற்று வரை அவருக்குத் தெரியப்படுத்தாத நிலையில் நேற்று அவரது வீட்டுக்குச் சென்ற சுகாதார அதிகாரிகள் குழுவினர் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு உடன் வாருங்கள் எனக் கூறி அழைத்தனர். ...

Read More »

இரண்டு கதாநாயகிகளுக்கு ஜோடியாகும் சசிகுமார்

சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்கள். இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் சசிகுமார். இவர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவர் கைவசம் கொம்புவச்ச சிங்கம்டா, எம்ஜிஆர் மகன், ராஜவம்சம், நாநா, முந்தானை முடிச்சு 2 ஆகிய படங்கள் உள்ளன. பிசியான நடிகராக வலம்வருகிறார். தற்போது அனிஸ் இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் பிந்து மாதவி மற்றும் ...

Read More »

13 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த ‘காதல்’ ஜோடி

பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்தில் ஜோடியாக நடித்து பிரபலமான பரத், சந்தியா 13 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர். படங்களை தயாரிப்பதிலும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில் அவர் முதல்முதலாக தயாரித்த படம் காதல். கடந்த 2004-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ...

Read More »