தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், நடிகை திரிஷாவின் ராங்கி படத்துக்கு உதவி உள்ளார்.
எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் சரவணன், அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘ராங்கி’. இப்படத்திற்கான கதை மற்றும் வசனத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருக்கிறார். ‘ராங்கி’ என்றால் அடங்காத, துணிச்சல் மிகுந்த பெண் என்று பொருள்.
படத்தில் நிறைய சண்டை காட்சிகள் உள்ளன. இந்த படத்தை லைகா புரொடக்ஷன் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், இந்த படத்தின் சிங்கிள் டிராக்காக ‘பனித்துளி’ எனும் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. சத்யா இசையில் சின்மயி பாடியிருக்கும் இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். மேலும் அவர் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். பாடலை வெளியிட உதவிய நடிகர் சிவகார்த்திகேயனுக்கு டுவிட்டரில் திரிஷா நன்றி தெரிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal