குமரன்

சமுத்திரகனிக்கு குவியும் வில்லன் வேடங்கள்!

பிரபல இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனிக்கு, தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து வில்லன் வேடங்கள் கிடைத்துள்ளதாம். தமிழ் படங்களில் போராளியாகவும், நல்ல ஆசிரியராகவும், விவசாயியாகவும் நடித்து தனக்கென ஒரு நல்ல இமேஜை உருவாக்கி வைத்திருக்கும் சமுத்திரகனி, தெலுங்கில் அடுத்தடுத்து வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். பாகுபலி படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் சமுத்திரகனி வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் ராம்சரணும், ஜுனியர் என்.டி.ஆரும் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்திற்காக சமுத்திரகனி 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். சமுத்திரகனி நடிக்க வேண்டிய பெரும்பாலான காட்சிகள் ...

Read More »

வடமாகாண பெண்­களும் அவர்­க­ளது தேவை­களும்!

இலங்­கையில் இடம் பெற்ற 30 வருட போர் நேர­டி­யாக பல்­வே­று­பட்ட பொரு­ளா­தார, அர­சியல் மாற்­றங்கள் மற்றும் சமய சமூக பிரச்­சி­னை­களை தோற்­று­வித்­தது. யுத்­தத்தின் அதி­யுச்ச பாதிப்பை தன்­ன­கத்தே கொண்ட வடக்கு கிழக்கு பகு­தி­களில் யுத்­தத்தின் பின்னர் பாரிய அளவு இல்­லா­விட்­டாலும் ஒரு அள­விற்கு யுத்­தத்தின் வடுக்­களை குறைப்­ப­தற்­கான அபி­வி­ருத்தி செயற்­பா­டுகள் இடம் பெற்­றாலும் வடக்கு கிழக்கு பகு­தியில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் உள ரீதி­யான பாதிப்பு இது­வரை சரி செய்­யப்­பட முடி­யா­த­தா­கவே காணப்­ப­டு­கின்­றது.   மனி­தர்­க­ளா­கிய நாம் ஏதேனும் பிரச்­சி­னை­க­ளுக்கு அல்­லது கசப்­பான சம்­ப­வங்­க­ளுக்கு ...

Read More »

கார்த்தி – ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்த சூர்யா

ஜித்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி – ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் தலைப்பை நடிகர் சூர்யா அறிவித்திருக்கிறார். பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நாயகனாக நடித்து வருகிறார். கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், அன்சன் பால், நிகிலா விமல், சவுகார் ஜானகி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். திரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு ‘தம்பி’ என்று ...

Read More »

பளையில் எந்த வீதித் தடையும் இல்லை!

கிளிநொச்சி – பளையில் எந்தவொரு வீதித் தடையும் ஏற்படுத்தப்படவில்லை என்று தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. பளையில் புதிய வீதித் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று போலிச் செய்திகள் பரவியது. இந்நிலையிலேயே குறித்த நிலையம் அது தொடர்பில் ஆய்வுகளை செய்து வீதித் தடைகள் எதுவும் அமைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.

Read More »

17ம் திகதி அதிகாலை முதலாவது முடிவு வெளியாகும்!

நாளைய தினம் தபால் மூல வாக்களிப்பின் முதலாவது முடிவை நாளை (16) நள்ளிரவிற்கு முன்னதாக வழங்க முடியும் எனவும் பெரும்பாலும் அது இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவாக இருக்கக்கூடும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தொகுதிவாரியான முடிவுகளின் முதலாவது முடிவை (17) அதிகாலை 2 மணிக்காவது வழங்க முடியும் என்றும் காலை 8 மணியாகும்போது அரைவாசிக்கும் மேல் முடிவுகளை வௌியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Read More »

விடை வழங்கவில்லை; விடை பெறுகின்றார்!

எட்டாவது ஜனாதிபதித் தேர்தலை, இன்னும் ஐந்து நாள்களில் இலங்கை எதிர்கொள்ள உள்ளது. கடந்து வந்த ஏழு ஜனாதிபதித் தேர்தல்களில், 1994 முதல் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்கள், தமிழ் மக்களின் பார்வையில் மாறுபட்டு நோக்கப்பட்டவைகள் ஆகும். நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த காலம் தொடக்கம், இருட்டுக்குள் வாழும் தங்களுக்கு,விடியலும் வெளிச்சமும் கிடைக்கப் போகின்றன என, தமிழ் மக்கள் உள்ளூர மிகப் பாரிய எதிர்பார்ப்புகள், நம்பிக்கைக் கோட்டைகளைக் கட்டிய ஜனாதிபதித் தேர்தல்கள் ஆகும். 1983ஆம் ஆண்டு, தெற்கில் வெடித்த இனக்கலவரம், 1987இல் இந்தியப் படைகளின் வருகையும் இந்தியா ...

Read More »

தவம்! -விமர்சனம்

நடிகர் வசி ஆசிப் நடிகை பூஜா ஸ்ரீ இயக்குனர் ஏ.ஆர்.சூரியன், ஆர்.விஜயானந்த் இசை ஸ்ரீகாந்த் தேவா ஓளிப்பதிவு வேல்முருகன் பூஜாஸ்ரீ தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர். நிறுவனத்தின் நிர்வாகி வீட்டு திருமணத்துக்காக அன்னவயல் கிராமத்துக்கு அலுவலக நண்பர்களுடன் செல்கிறார். அங்கு ஏடூஇசட் என்ற நிறுவனம் நடத்தி திருமண ஏற்பாடுகள் செய்து வரும் வசியை சந்திக்கிறார். ஊரில் சமூக விரோத செயல்களை செய்துவரும் விஜயானந்தை பார்த்து கிராமமே பயப்படுகிறது. பூஜாஸ்ரீயோ துணிந்து அவரை போலீசில் சிக்க வைக்கிறார். இதனால் பூஜாஸ்ரீயை கொல்ல வில்லன் கும்பல் துரத்துகிறது. இந்நிலையில் ...

Read More »

ஆஸ்திரேலிய சிறையை விட ஈரானே மேலானது !

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர், ஆஸ்திரேலியாவில் புதிய வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆறு ஆண்டுகளாக மனுஸ்தீவு தடுப்பு முகாமில் சிறைப்பட்டு இருந்துள்ளார். பப்பு நியூ கினியா என்ற தீவு நாட்டில் உள்ள மனுஸ்தீவு முகாம் அண்மையில் மூடப்பட்டு, தலைநகர் Port Moresby அருகே Bomana குடிவரவுத் தடுப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நிதி உதவியுடன் கட்டியெழுப்பப்பட்டது இம்மையம். கடந்த 9 வாரங்களாக இத்தடுப்பு மையத்தில் மோசமான சிறை வாழ்க்கையை எதிர்கொள்ளும் ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர்  மீண்டும் ஈரானுக்கு செல்லவே ஒப்புக்கொண்டுள்ளார். இங்குள்ள ...

Read More »

ஆயிரம் நாளை எட்டிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் !

வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 1000 நாட்களை எட்டியது. இதனை முன்னிட்டு அவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.         இதன்போது கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கபட்ட உறவினர்களின் இணைப்பாளர் ராஜ்குமார், சுழற்சி முறையில் உணவு தவிர்க்கும்  1000 ஆவது நாளை  இன்று நாங்கள் அனுஷ்டித்து வந்துள்ளோம். இதில் அனைத்து தமிழ் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ; மூன்று வாரங்கள் நீடிக்கலாம்!

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ இன்னும் மூன்று வாரங்கள் நீடிக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ குறித்து ஊடகங்கள், “ ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பயங்கரமான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. சுமார் 150க்கும் அதிகமான வீடுகள் காட்டுத் தீயால் நாசமாகியுள்ளன. 2.5 மில்லியன் ஏக்கர் விவசாய நிலங்கள் தீக்கு இரையாகின. காட்டுத் தீ ஏற்பட்ட இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. காட்டுத் தீ காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குவின்ஸ்லாண்ட் ...

Read More »