குமரன்

ஆஸ்திரேலிய கேளிக்கை விடுதியில் கொரோனா….!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள Crossroads கேளிக்கை விடுதிக்கு சென்ற பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சூழலில், வில்லாவுட் குடியேற்ற தடுப்பு முகாமில் பணியாற்றிய ஊழியர்கள் சுய-தனிமைப்படுத்தலில் இருப்பதாக அகதிகள் நல அமைப்பு ஒன்று தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், இதை உறுதிப்படுத்தும் விதமாக கொரோனா பரவியதாகக் கூறப்படும் கேளிக்கை விடுதிக்கு சென்ற தடுப்பு முகாம் ஊழியர் தனிமைப்படுத்திக்கொண்டதாக ஆஸ்திரேலிய எல்லைப்படை தெரிவித்துள்ளது. “அண்மையில், விடுதிக்குச் சென்ற வில்லாவுட் ஊழியர்கள் நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை அறிவுரையின்படி சுய-தனிமைப்படுத்தலில் இருக்கின்றனர்,” எல்லைப்படையின் பேச்சாளர் ...

Read More »

தந்தையைப்போல் இசையமைத்து அசத்திய ஏ.ஆர்.ரகுமான் மகள்

சுஷாந்த் சிங்கின் தில் பெச்சாரா பட பாடலுக்கு தனது மகள் இசையமைக்கும் காணொளியை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் திகதி தற்கொலை செய்து கொண்டது, இந்திய திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் கடைசி படமான தில் பெச்சாரா வருகிற ஜூலை 24-ந் திகதி நேரடியாக ஓடிடி தளத்தில்வெளிவர உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக டைட்டில் பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. இதனால் பிரபலங்களும், ரசிகர்களும் சுஷாந்த் சிங்கிற்கு ...

Read More »

கூட்டமைப்பை உடைப்பதற்கான ஆரம்ப புள்ளி விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கட்சியை வன்னி நிலம் முற்றாக புறக்கணிக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூடதமிழ் மக்களுக்கு செய்தது துரோகமே என அவர் தெரிவித்துள்ளார். எம்மை உடைப்பதற்கான ஆரம்பபுள்ளியாக விக்னேஸ்வரன் பாவிக்கமுற்பட்டுள்ளனர் என சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் பொருளாதார மத்தியநிலையம் இழுத்தடிக்கப்பட்டது,இறுதியில் அவரது கையில் விடப்பட்டவேளை அவர் சரியான தீர்வை முன்வைக்கவில்லை என சிவமோகன் தெரிவித்துள்ளார்.

Read More »

பெண்களின் தார்மீகக் குரலாக ஒலித்த பத்மா சோமகாந்தன்

ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் சிறந்த பங்களிப்பை வழங்கியவரும், தனது பள்ளிப் பருவத்திலிருந்தே இலக்கிய எழுத்தூழியத்தில் ஈடுபட்டவருமான சகோதரி திருமதி பத்மா சோமகாந்தன் நேற்றையதினம் ஜூலை 15 ஆம் திகதி கொழும்பில் மறைந்தார் என்ற துயரமான செய்தி எம்மை வந்தடைந்தது. இறுதியாக கடந்த ஆண்டு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடந்த எனது “ இலங்கையில் பாரதி “ நூலின் வெளீயீட்டு அரங்கில்தான் சந்தித்தேன். ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக அவரை நன்கு அறிவேன். நெருங்கிய உறவொன்றை இழந்த உணர்வோடு, இந்த அஞ்சலிக்குறிப்பினை கனத்த மனதுடன் எழுதுகின்றேன். அவர் ...

Read More »

யாழ்ப்பாணத்த்தில் போட்டியிடும் இரு வேட்பாளர்கள் ஒரே நாளில் மரணம்

பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினத்திலேயே இவர்கள் இருவரும் உயிரிழந்ததாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து காரணமாக ஒருவரும் மாரடைப்பால் மற்றவரும் நேற்று புதன்கிழமை உயிரிழந்தனர். விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை சார்பாக சுயேச்சைக் குழு 14 இல் போட்டியிடும் வேட்பாளர் அகஸ்தீன் மக்டொனால்ட் என்ற 58 வயதுடைய நபர் மாரடைப்பால் காலமானார். கடந்த 8ஆம் திகதி பூநகரியில் இடம்பெற்ற டிப்பருடனான விபத்தில் சிக்கிச் சிகிக்சை பெற்றுவந்த பிரியதர்சன் என்ற சுயேச்சைச்குழு 3 ...

Read More »

மரினாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி

தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு, 7 வயதில் இருந்து வளர்த்து வந்த வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட ரஷிய பெண், கர்ப்பிணியாக உள்ளார். ரஷியாவைச் சேர்ந்த பெண் மரினா பால்மாஷேவா. இவரை இன்ஸ்டாகிராமில் 4,20,000 பேர் பின்தொடர்கிறார்கள். கடந்த மே மாதம் 7 வயது சிறுவனுடன் இருக்கும் படத்தையும், அதன்பின் 20 வயதாகிய அந்த பையனை கட்டிப்பிடித்து நிற்பது போன்ற படத்தையும் வெளியிட்டிருந்தார். இன்ஸ்டாகிராமில் இந்த படத்திற்கு ஆதரவான கருத்து வரும் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால் எதிர்மறையான கருத்துகளே வந்தன. என்றாலும் ...

Read More »

கவலைகளில் இருந்து மீள இதைச் செய்யுங்கள் – இலியானா யோசனை

தமிழ்,தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் நடிகை இலியானா, கவலைகளில் இருந்து மீள யோசனை கூறியுள்ளார். தமிழில் நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் கூறியதாவது: “எனக்கு சில நேரங்களில் மனதில் தாங்க முடியாத அளவு வருத்தங்களும் கவலைகளும் ஏற்படும். அந்த நேரத்தில் நான் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தால் போதும் எல்லாமே மாயமாக மறைந்து விடும். எனவே எல்லோரும் இந்த யுக்தியை கையாண்டு கவலைகளில் இருந்து மீளுங்கள். உடற்பயிற்சிகள் செய்யும்போது லட்சியத்தை ...

Read More »

ஜூலை 19ம் திகதி ஆஸ்திரேலியாவின் பல இடங்களில் போராட்டம் !

ஆஸ்திரேலியாவைப் படகு வழியாக அடைய முயன்ற அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள், கடல் கடந்த தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைய இருக்கின்ற அகதிகளை விடுவிக்கக்கோரி வரும் ஜூலை 19ம் திகதி ஆஸ்திரேலியாவின் பல இடங்களில் போராட்டம் நடைபெற இருக்கின்றது. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயல்பவர்கள் ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள், அவர்கள் கடல் கடந்த தடுப்பு முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் எனும் கொள்கையினை 7 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்தார் . ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ரூட். அதன்படி, இன்று வரையிலும் நூற்றுக்கணக்கான அகதிகள் ...

Read More »

சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதி நியமனம்

சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் 1985 ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்துக் கொண்டார். இவர் சிறிலங்காவின் 24 ஆவது கடற்படை தளபதியாவார். நேற்றைய தினம் அட்மிரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்ட கடற்படைத் தளபதி அட்மிரல் பியல் டி சில்வா இன்று ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More »

இராணுவத்தினரிடம் கைமாறும் சிவி்ல் நடவடிக்கைகள்

சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம் வழங்குவது அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த வருடம் முதல் இந்த நடவடிக்கையை இராணுவத்தினரிடம் ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் ஆராயந்து வருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இது குறித்;து விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. வாகனசாரதி அனுமதிப்பத்திரமொன்றிற்காக 1340 ரூபாயை கட்டணமாக செலுத்தவேண்டியுள்ளது,வாகனச்சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரித்து வழங்கும் நடவடிக்கையை வெளிநாட்டு நிறுவனமொன்றிடம் வழங்கியுள்ளதால் நாட்டுக்கு கிடைக்கவேண்டிய பணம் வெளிநாட்டுக்கு செல்கின்றது என நேற்றைய சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் ...

Read More »