சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் 1985 ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்துக் கொண்டார்.
இவர் சிறிலங்காவின் 24 ஆவது கடற்படை தளபதியாவார்.
நேற்றைய தினம் அட்மிரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்ட கடற்படைத் தளபதி அட்மிரல் பியல் டி சில்வா இன்று ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal