அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சொந்த மகளை குடியிருப்பில் இருங்து வெளியேற்ற தந்தை ஒருவர் 8 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார். மகளை குடியிருப்பில் இருந்து வெளியேற்றும் பொருட்டு, அந்த தந்தை இதுவரை சுமார் 70,000 டொலர்கள் செலவிட்டுள்ளார். நியூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்த 84 வயதான பீற்றர் கிரண்டி, எஞ்சிய தமது காலத்தை முதியோர் இல்லத்தில் செலவிட திட்டமிட்டுள்ளார். அரசு சார்ந்த ஓய்வூதியம் பெறும் தகுதி அவருக்கு இல்லை என்பதால் முதியோர் காப்பகத்திற்கான செலவுகளை இவரே ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ...
Read More »குமரன்
ரவிராஜின் 58 ஆவது ஜனனதினத்தில் ரவிராஜ் பற்றிய கண்ணோட்டம்
பரந்துபட்ட இவ்வுலகில் மரணம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. பிறந்தவர்கள் அனைவரும் இறக்க வேண்டும் என்பது நியதியாகும். ஆனால் ஒரு சிலர் மட்டுமே தாம் இறந்த பின்பும் மக்களின் மனதில் நிலைத்து இவ்வுலகில் என்றும் வாழ்வார்கள்; வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை மரணம் என்றும் வென்றுவிட முடியாது. அந்த வரிசையில் மிக முக்கியமானவர் தமிழ் மக்களின் குரலாய் பாராளுமன்றத்தில் ஒலித்து இறுதியில் தமிழ் மக்களின் நீதிக்காக தன் உயிரையும் தியாகம் செய்த “மாமனிதர் நடராஜா ரவிராஜ்” அவர்கள் அந்த வகையில் மாமனிதரின் சில குறிப்புகளையும் அவர் இறந்த ...
Read More »தென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை ஒத்திவைப்பு
தென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ஒத்திவைக்க வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். கொரிய தீபகற்பத்தில் வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் பல ஆண்டுகளாக பகைமை நிலவி வந்தது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேசிய பிறகு பகைமையை தணிந்து இணக்கமான சூழல் உருவானது. தற்போது மீண்டும் வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் மோதல் வலுக்கத் தொடங்கியுள்ளது கடந்த சில மாதங்களாக வடகொரியாவில் இருந்து தப்பி தென்கொரியா சென்ற வட கொரிய எதிர்ப்பாளர்கள் சிலர், வட ...
Read More »லசந்தவின் மகளின் கடிதத்தினை அரசமைப்பு பேரவை கவனத்தில்எடுத்துள்ளது
லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க பொலிஸ் ஆணைக்குழுவிற்கு எழுதிய கடிதத்தினை அரசமைப்பு பேரவை கருத்திலெடுத்துள்ளது. அரசமைப்பு பேரவையின் தலைவரான கருஜெயசூரிய குறிப்பிட்ட கடிதம் குறித்து பேரவையின் உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் என நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது. இந்த கடிதம் குறித்து கருத்துக்களை பெறவேண்டும் என தெரிவித்துள்ள அரசமைப்பு பேரவை குறிப்பிட்ட கடிதம் குறித்த பொலிஸ் ஆணைக்குழுவின் பதில் இன்னமும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. சிஐடியின் புதிய இயக்குநர் தொடர்பில் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க சமீபத்தில் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். ...
Read More »கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் – விசாரிக்க இடைக்கால தடை
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரணாகொடவிற்கு எதிரான விசாரணைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கொழும்பு உயர்நீதிமன்றம் டிரையல் அட் பார் விசாரணைகளை முன்னெடுப்பதற்கே மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. முன்னாள் கடற்படை தளபதி தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த பின்னரே மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Read More »ராதிகா ஆப்தே இயக்கிய முதல் குறும்படம் – சர்வதேச விருது வென்றது
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே, தான் இயக்கிய முதல் குறும்படத்திற்கு சர்வதேச விருது வென்றுள்ளார். தமிழில் கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. மேலும் ஆல் இன் ஆல் அழகுராஜா, தோனி, வெற்றிச்செல்வன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ‘தி ஸ்லீப் வாக்கர்ஸ்’ என்ற குறும்படத்தை இயக்கினார். சஹானா கோஸ்வாமி உள்ளிட்ட சிலர் இந்த குறும்படத்தில் நடித்திருந்தனர். தூக்கத்தில் நடக்கும் பிரச்சினைகளை இதில் காட்சிப்படுத்தி இருந்தார். இந்த குறும்படம் தனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றும் தொடர்ந்து படங்கள் ...
Read More »உலக நாடுகளிடம் ஒத்துழைப்பு இல்லை’: ஐ.நா பொதுச்செயலர் விரக்தி
கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளின் தலைவர்களிடையே ஒத்துழைப்பு இல்லையென ஐ.நா சபை பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் விமர்சித்துள்ளார். கொரோனா தொற்று பரவ துவங்கியதில் இருந்து இரண்டாம் உலக போருக்கு பின் உலக நாடுகள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் என கூறிய குட்டரெஸ், சர்வதேச நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். மார்ச் 23ம் தேதி அனைத்து சண்டை சச்சரவுகளை விடுத்து கொரோனாவை எதிர்த்து போராட உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை. தற்போது உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ...
Read More »செக்கு மாடு ஊர் போய்ச் சேராது’
சமஷ்டி ஆட்சிமுறைமை உள்ளடங்காதவாறு, அரசமைப்பில் திருத்தம் செய்யப்பட்டு, அதனூடாகத் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படும். சமஷ்டி ஆட்சி முறைமையின் கொள்கைகளை உள்ளடக்காத வகையிலும் எத்தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும், அரசமைப்பில் திருத்தம் செய்யப்படும். தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு, அரசியல் நோக்கங்களைப் பின்னணியாகக் கொண்டிராத வகையில் வழங்கப்படும். பொருளாதாரத்தை மேம்படுத்தினால், இனங்களுக்கிடையே எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறாது என்பதே, அரசாங்கத்தின் கொள்கை ஆகும். இவ்வாறு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்து உள்ளார். இவ்வாறாகக் கருத்துத் தெரிவிப்பவர்கள், முதலில் ...
Read More »ஆஸ்திரேலியாவில் ஒரு மாதத்திற்கு பிறகு கரோனாவுக்கு ஒருவர் பலி
ஒரு மாதத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் கரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில் ஒன்றான விக்டோரியாவில் மீண்டும் கரோனா பரவ தொடங்கியுள்ளது. சுமார் ஒரே நாளில் 20 பேருக்கு அங்கு கரோனா உறுதிப்படுத்தபட்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் ஒரு மாதத்திற்கு பிறகு கரோனோவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை விக்டோரியாவில் 241 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விக்டோரியா மாகாணத்தில் கரோனா இரண்டாம் ...
Read More »சினமன் கிராண்டில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டவர் குறித்து சிஐடியினர் தெரிவித்திருப்பது என்ன?
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் தாக்குதலை மேற்கொண்ட நபர் ஜனவரி முதல் ஏப்பிரல் வரையிலான காலப்பகுதியில் 45 மில்லியனை செலவு செய்தார் என சிஐடி அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சினமன் கிராண்டில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட இன்சாவ் இப்ராஹிம் முதல் நான்கு மாதங்களில் 45 மில்லியனை செலவிட்டுள்ளார், தீவிரவாதத்தினை ஊக்குவிப்பதற்காக இந்த பணத்தினை அவர் செலவிட்டுள்ளார் என சிஐடி அதிகாரியொருவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட ...
Read More »
Eelamurasu Australia Online News Portal