குமரன்

உலகில் முதல் தடவையாக கறுப்பினப் பெண்கள் வசமாகிய ஐந்து அழகிப் பட்டங்கள்!

வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு ஐந்து அழகிப் பட்டங்கள் கறுப்பினப் பெண்கள் வசமாகியுள்ளது. மிஸ் யுஎஸ்ஏ, மிஸ் டீன் யுஎஸ்ஏ, மிஸ் அமெரிக்கா, மிஸ் யுனிவர்ஸ் மற்றும் மிஸ் வேர்ல்ட் என 2019 ஆம் ஆண்டின் அழகிப் பட்டங்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள் கறுப்பின அழகிகள். கடந்த சனிக்கிழமை (14.12.2019), லண்டனிலுள்ள கண்காட்சி மையத்தில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் மிஸ் ஜமைக்கா, டோனி ஆன் சிங் 69 ஆவது உலக அழகியாக முடிசூட்டப்பட்டார். மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்ற நான்காவது ஜமைக்கா அழகி ...

Read More »

அவுஸ்திரேலியாவில் அவசரகால நிலை பிரகடனம்!

அவுஸ்திரேலியா – நியூ சவுத் வேல்ஸில் ஒரு வாரத்திற்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. குறித்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் வெப்ப சூழல் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து இதன் நெருக்கடியை தவிர்க்கும் பொருட்டு இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று குறித்த பகுதியில் வெப்பநிலை சராசரியாக அதிகபட்சம் 40.9 சி வரை காணப்பட்டது. ஆனால் இதனைவிட இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 7 நாட்களுக்கு குறித்த ...

Read More »

மன்னார் அருட்தந்தை காவல் துறையால் தாக்கப்பட்ட சம்பவம் – மறைமாவட்ட பொது நிலையினர் பேரவை கண்டனம்

மன்னார் மறைசாட்சியர் இராக்கினி திருத்தலப் பகுதியில் அதன் பரிபாலகரும் பங்குத்தந்தையுமான  அருட்தந்தை. அலெக்சாண்டர் சில்வா (பெனோ) அடிகளார்  மன்னார் காவல் துறை  நிலைய காவல் துறை உத்தியோகத்தரால் தாக்கப்பட்டதும், அவமதித்து நடத்த எத்தனித்ததையும் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க சமுகம் வன்மையாக கண்டிக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் மறைமாவட்டப் பொது நிலையினர் பேரவையின் பொதுச் செயலாளர் எஸ்.சதீஸ் கண்டன அறிக்கை ஒன்றை இன்று (19)  விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், குறித்த பகுதியில் திட்டமிட்ட வகையில் மண் அகழ்வு நடை பெறுவதாகவும், அதனால் ...

Read More »

காதலரை கரம் பிடித்தார் ஒஸ்தி நடிகை!

தமிழில் ஒஸ்தி, மயக்கம் என்ன போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய், இவர் தனது நீண்ட நாள் காதலனை கரம் பிடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் 2010-ல் வெளிவந்த ‘லீடர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மயக்கம் என்ன’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே வருடத்தில் சிம்பு ஜோடியாக ‘ஒஸ்தி’ படத்திலும் நடித்தார். அதன்பின் சில தெலுங்கு படங்களில் நடித்தவர் அமெரிக்காவிற்கு படிக்கச் சென்றுவிட்டார். அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து முடித்தார். ...

Read More »

சென்னை தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் !

சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அங்கு மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஆட்சியாளர்களை விமர்சித்தும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பலர் கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர். இந்நிலையில், சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஒரு மர்ம நபர், ‘முதல்வர், துணை முதல்வர் மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும்’ என மிரட்டல் ...

Read More »

சஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்றதாகக் கைதுசெய்யப்பட்ட 64பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீக் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 31ஆம்  திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாகச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான் குடியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். 26.9.2019-அன்று -மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது ஒக்டோபர் 10ஆம்  திகதி ...

Read More »

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்!

தமிழகத்தில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு எனத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க தி.மு.க.விற்கு மனமே வரவில்லை. மக்களைச் சந்திக்கும் எண்ணமே இல்லை. தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை மிரட்டும் விதமாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து நீதிமன்றம் சென்று வருகிறார்கள். மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த, மற்றவர்கள் எழுதிக் கொடுத்ததை ...

Read More »

நாமல் குமாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஊழல் எதிர்ப்பு படையணியின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் நாமல் குமாரவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹெட்டிபொல நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வட மேல் மாகா­ணத்தில் குரு­ணாகல் மாவட்டம், குளி­யாப்­பிட்டி மற்றும் நிக்­க­வ­ரட்டிய பகு­தி­களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம் கிரா­மங்­களை இலக்­கு­வைத்து திட்­ட­மிட்ட குழு­வொன்று முன்­னெ­டுத்த  தொடர் தாக்­கு­தல்கள் தொடர்­பி­லேயே அவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

சிறிலங்கா மீண்டும் குடும்ப ஆட்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருகிறது!

சிறிலங்கா  மீண்டும் குடும்ப ஆட்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருகிறது என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். இன்று புதன்கிழமை காலை கிண்ணியாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அமைச்சர்களின் பிரத்தியேக உத்தியகத்தர்களாக குடும்ப உறுப்பினர்களை நியமிக்க முடியாது, அமைச்சுக்களின் திணைக்களங்களின் உயர் பதவிகளுக்கு அமைச்சர்கள் தமக்கு நெருங்கியவர்களை நியமிக்க முடியாது என ஜனாதிபதி கூறுகிறார். ஆனால் இது ராஜபக்ஷ குடும்பத்துக்கு மட்டும் பொருந்தாது என்பதை அவர் வெளியில் சொல்லவில்லை. ...

Read More »

அவுஸ்திரேலியாவில் வரலாறு காணாதளவு வெப்ப நிலை உயர்வு!

அவுஸ்திரேலியாவின் சராசரி வெப்ப நிலையானது 40.9 செல்சியஸ் ஆக உயர்வடைந்துள்ளதாக அந் நாட்டு வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியா வரலாற்றிலேயே பதிவான ஆகக் கூடுதலான வெப்ப நிலை இது எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிதுள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் வெப்ப நிலையானது 40.3 ஆக பதிவாகியிருந்தது. இந் நிலையிலேயே நேற்றைய தினம் 40.9 என்ற ஆகக்கூடுதலான வெப்பநிலை பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் நிலவும் கடும் வறட்சி மற்றும் காட்டுத் தீ ஆகியவையே இந்த வெப்ப நிலை ...

Read More »