உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரசை மனிதனால் உருவாக்க முடியாது என்று சர்ச்சைக்குரிய சீன ஆய்வுக்கூடம் சொல்கிறது. உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ், வுகான் நகரில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் சந்தையில் தோன்றியதாக கூறப்பட்டு வந்தது. இதில் திடீர் திருப்பமாக, “இந்த வைரஸ் வுகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது, அது அங்கிருந்து தப்பித்து வந்துள்ளது” என்று அமெரிக்காவின் ‘பாக்ஸ் நியூஸ்’ டெலிவிஷன் வெளியிட்டுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிற கொரோனா ...
Read More »குமரன்
ஜிவி பிரகாஷ் – சைந்தவி தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது
இசையமைப்பாளர் நடிகர் ஜிவி பிரகாஷ், பாடகி சைந்தவி தம்பதியினருக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது. தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஜிவி பிரகாஷ் இசையில் பல பாடல்களையும் சைந்தவி பாடியிருக்கிறார். இந்நிலையில் ஜி பிரகாஷ் சைந்தவி தம்பதியினருக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
Read More »ஆஸ்திரேலிய வீரர்கள் சம்பளத்தை இழக்க வாய்ப்புள்ளது: மார்க் டெய்லர்
கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருப்பதால் ஆஸ்திரேலிய வீரர்கள் சம்பளத்தை இழக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் கடந்த மாதத்தில் இருந்து நடைபெறாமல் உள்ளது. ஆஸ்திரேலிய அரசு ஆறுமாத காலத்திற்கு சர்வதேச எல்லையை மூடியுள்ளது. ஆனால் ஜூன் மாதத்திற்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. கிரிக்கெட் நடைபெறாமல் இருப்பதால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு மிகப்பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டில் வேலை செய்யும் ஸ்டாஃப்களுக்கு ஜூன் மாதம் ...
Read More »சீனாவில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது கொரோனா வைரஸ்!
உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நோபல் பரிசு வென்ற நுண்கிருமி ஆய்வு அறிஞர் லூக் மோன்தக்னர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வவ்வால் உள்ளிட்ட விலங்குகளிடமிருந்து கொரோனா பரவியிருப்பதாக சீனா கூறியிருப்பது கட்டுக்கதை. இதற்கு சாத்தியமில்லை. வூஹானில் உள்ள தேசிய பயோ சேப்டி ஆய்வகத்தில், தற்செயலாக நடந்த விபத்தின் மூலம் கொரோனா பரவியிருக்கும். 2000ம் ஆண்டு துவக்கம் முதல், கொரோனா வைரஸ்களை சீனா ஆராய்ச்சி ...
Read More »‘டாம் அண்ட் ஜெர்ரி’ இயக்குனர் காலமானார்
உலகப்புகழ் பெற்ற டாம் அண்ட் ஜெர்ரி எனும் கார்ட்டூன் தொடரை இயக்கிய ஜீன் டெய்ச் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. துறுதுறுவென சேட்டைகள் செய்யும் குட்டி எலியும், அதை துரத்தி விளையாடும் பூனையின் வேடிக்கைகள் நிறைந்த தொடர் தான் டாம் அண்ட் ஜெர்ரி. வயது வரம்பின்று அனைவரும் பார்த்து ரசிக்கும் இந்த கார்ட்டூன் தொடர், வில்லியம் ஹன்னா மற்றும் ஜோசப் பர்பெரா ஆகியோரால் 1940-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1958-ம் ஆண்டுவரை அவர்கள் இருவரும் இந்த கார்ட்டூன் தொடரை எழுதி, இயக்கி வந்தனர். அவர்களைத் ...
Read More »மகள்கள் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நதியா
சமீபத்தில் சமூக வலைதளத்தில் இணைந்த நடிகை நதியா, முதன்முறையாக தனது மகள்களின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். 1988-ல் சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் குடியேறினார். இவர்களுக்கு சனம், ...
Read More »ஊரடங்கால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு – வீடு வீடாக சென்று உணவு வழங்கிய ஹாரி-மேகன் தம்பதி
இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த ஹாரி-மேகன் தம்பதி ஊரடங்கால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு – வீடு வீடாக சென்று உணவு வழங்கினர். இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த ஹாரி-மேகன் தம்பதி, தங்களது மகன் ஆர்ச்சியுடன் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் குடியேறினர். இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுக்க தொடங்கியதால், இந்த தம்பதி கடந்த மாத இறுதியில் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு மாறினர். அங்கு மேகனின் சொந்த ஊரான கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ...
Read More »தருணிகாவின் பாதுகாப்பு விசா முடிவைப் பொறுத்தே இக்குடும்பத்தின் எதிர்காலம்!
ஆஸ்திரேலியாவிலிருந்து ஈழ தமிழ் அகதி குடும்பத்தை நாடுகடத்தவது தொடர்பான வழக்கில், அக்குடும்பத்திற்கு ஆதரவாக நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது. பிரியா, நடேசலிங்கம் ஆகிய இருவரும் இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய ஈழ தமிழ் அகதிகள். படகு வழியாக தஞ்சமடைந்த இவர்கள், ஆஸ்திரேலியாவில் சந்தித்துக் கொண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களுக்கு அங்கு இரு குழந்தைகளும் பிறந்தன. இவர்கள் ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு விசா கோரி நிலையில், அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களது நாடுகடத்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் ...
Read More »கொரோனா வைரஸ்- சர்வதேச விசாரணைகள் வேண்டும் – அவுஸ்ரேலியா வலியுத்தல்!
சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் பரவி பாரிய மனித அழிவினை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வைரஸானது சீனாவின் பிரதான நகரங்களில் ஒன்றான வூகான் நகரத்தில் உள்ள சந்தை பகுதிகளில் காட்டு விலங்குகள் மற்றும் பறவைகள் விற்பனை செய்து அதனை அந்நாட்டு மக்கள் உணவுப்பொருட்களாக பயன்படுத்துவதன் மூலம் பரவியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் சீனாவின் வூகான் நகரில் உள்ள மருத்துவ ஆய்வு கூடங்களில் இருந்து, சீனாவின் தலையீட்டுடன் குறித்த வைரஸ் பரவியிருப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக ...
Read More »ஊரடங்கு தொடர்பான அறிவித்தல்!
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் நோக்கில் ஊரடங்கு சட்டத்தை இன்று (20) முதல் கட்டம் கட்டமாக தளர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய 18 மாவட்டங்களுக்கு இன்றைய தினம் (20) ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு ...
Read More »