உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நோபல் பரிசு வென்ற நுண்கிருமி ஆய்வு அறிஞர் லூக் மோன்தக்னர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வவ்வால் உள்ளிட்ட விலங்குகளிடமிருந்து கொரோனா பரவியிருப்பதாக சீனா கூறியிருப்பது கட்டுக்கதை. இதற்கு சாத்தியமில்லை. வூஹானில் உள்ள தேசிய பயோ சேப்டி ஆய்வகத்தில், தற்செயலாக நடந்த விபத்தின் மூலம் கொரோனா பரவியிருக்கும். 2000ம் ஆண்டு துவக்கம் முதல், கொரோனா வைரஸ்களை சீனா ஆராய்ச்சி செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
விலங்கு சந்தையிலிருந்து கொரோனா பரவியது என்ற சீனாவின் கூற்றை, அமெரிக்கா மறுத்துள்ளது. ‘உலகம் முழுதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள, ‘கொரோனா’ வைரசை, சீனா வேண்டு மென்றே பரப்பியிருந்தால், கடும் விளைவை சந்திக்க நேரிடும்’ என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்கா தீவிர விசாரணையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.