இசையமைப்பாளர் நடிகர் ஜிவி பிரகாஷ், பாடகி சைந்தவி தம்பதியினருக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது.
தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஜிவி பிரகாஷ் இசையில் பல பாடல்களையும் சைந்தவி பாடியிருக்கிறார்.
இந்நிலையில் ஜி பிரகாஷ் சைந்தவி தம்பதியினருக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal