20வது திருத்தத்தின் நகல்வடிவம் நாளை அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் ஜிஎல்பீரிஸ் 20வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜனவாக்கெடுப்பு அவசியமில்லை மூன்றில் இரண்டு போதும் என தெரிவித்துள்ளார். 20வது திருதத்தத்தில் காணப்படுகின்ற விடயங்களை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதும் மக்களின் கருத்து அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக 20வது திருத்தம் சில வாரங்களில் நிறைவேற்றப்பட்டுவிடும் என அவர் தெரிவித்துள்ளார் . புதிய திருத்தங்கள் நாட்டின் முதல்பிரஜையின் அதிகாரங்களை வலுப்படுத்தும், பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை வலுப்படுத்தும் என ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ...
Read More »குமரன்
சிறைச்சாலைகளில் 444 பேர் இன்று விடுதலை!
சிறைச்சாலையில் உள்ள நெருக்கடியினை குறைப்பத ற்கு நாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் 444 பேர் வரையிலான கைதிகளை விடுதலை செய்வதற்கு ஜனா திபதியின் தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் இவ்வாறு விடு தலை செய்யப்படவுள்ளனர். அத்துடன், புதிய கொரோனா வைரஸ் பரவுவதாலும், சிறைகளில் தற்போது ஏற்படும் நெரிசல் காரணமாகவும், கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கத் தீர்மானித் துள்ளதாக சிறசை்சாலை கள் ஆணை யாளர் துஷார உப் புல் தெனிய தெரிவித்துள்ளார். இந்நிலையில், 444 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் இன்று செவ்வாய்கிகழமை விடுதலை செய்யப்பட ...
Read More »அதிநவீன கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உருவாகும் போக்கோ ஸ்மார்ட்போன்
அதிநவீன கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உருவாகும் போக்கோ ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. போக்கோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. போக்கோ எக்ஸ்2 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக வெளியாக இருக்கும் புது ஸ்மார்ட்போன் போக்கோ எக்ஸ்3 பெயரில் அழைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய போக்கோ எக்ஸ்3 சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இதுபற்றிய டீசர்களை பொருத்தவரை விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்கோ நிறுவன விளம்பர பிரிவு ...
Read More »இணையத்தள ஆசிரியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!
இணையத்தள ஆசிரியரான டெஸ்மன்ட் சதுரங்க டி அல்விஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மடிக்கணினியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் இவர் கைதானதாகவும், நீதித்துறையை அவமதிக்கும் வகையில் செய்தி ஒன்றை வெளியிட்டமைக்காகவே இவர் கைதானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. லங்காநியுஸ்வெப் என்ற இணையத்தள ஆசிரியராக இவர் பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Read More »ஒற்றையாட்சியை அதிகரிப்பது ஆரோக்கியமானதல்ல! -ஞா.ஸ்ரீநேசன் நேர்காணல்
கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறியது போன்று இருக்கின்ற அதிகாரங்கள் போதாது என்று ஆயுத போராட்டம் நடந்து முடிந்தும், ஜனநாயக போராட்டம் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றபோது, இருக்கின்ற அதிகாரங்களை பறிக்கின்ற செயற்பாடுகள் காணப்படுகின்ற படியால் அரசாங்கம் கொண்டு வருகின்ற 19 ஆவது திருத்தத்தை அகற்றுவதென்பது ஒரு அரசின் மேலாதிக்கத்தை உயர்த்துகின்ற செயற்பாடாக அமைவதோடு மட்டுமல்லாமல் 13 ஆவது திருத்தத்தில் கை வைப்பதென்பது இருக்கின்ற அதிகாரங்களையும் இல்லாமல் செய்து ஒற்றையாட்சி முறையின் வலுத்தன்மையை அதிகரிக்கின்ற போக்காக அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற ...
Read More »இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்
மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (வயது 84) காலமா னார். பிரணாப் முகர்ஜி காலமானதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தனது கட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி (84) தொடா்ந்து ஆழ்ந்த மயக்க (கோமா) நிலையிலேயே இருந்து வந்த நிலையில், நினைவு திரும்பாமலேயே புது டில்லியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. மூளையில் இரத்தக் கட்டியை அகற்றுவதற்காக கடந்த ஆகஸ்ட் 10ஆம் ...
Read More »முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக் கல்லறை இடித்து சேதம்
முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் கல்லறையை சேதப்படுத்தியவர்களை லண்டன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழக கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் கர்னல் ஜான் பென்னிகுவிக். இவர் தனது சொத்துக்கள் முழுவதையும் இந்த அணையை கட்டுவதற்காக செலவழித்தார். இதனால் 5 மாவட்ட விவசாயிகள் இவரை கடவுளாக வழிபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இன்றும் கூட பல வீடுகளில் தங்களது குழந்தைகளுக்கு பென்னிகுவிக் பெயரை வைத்து ...
Read More »விக்னேஷ் சிவனுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா
முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் அவ்வப்போது சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த சில மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர்கள் இருவரும் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் தற்போது ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளாவுக்கு சென்றுள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கேரளாவுக்கு சென்றனர். ...
Read More »புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்கிறார் விமல்
19 ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு பதி லாக, 2/3 பெரும்பான்மை செல்வாக்கின் கீழ் 1978 ஆம் ஆண்டு முதல் பழுதுபார்க்கப்பட்டு வரும் இந்த அரசி யலமைப்பை மாற்றுவதற்காக நாட்டை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். நாட்டை பாதுகாக்கவும் , ஒரே சட்டத்தின் கீழ் நாட்டை கொண்டுவரும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தி ற்கு மக்கள் 2/3 பெரும்பான்மை பலத்தை வழங்கியுள் ளனர் என ...
Read More »சர்வதேசம் மௌனம் காப்பது ஏன்?
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அனுஸ்ரிக்கப்பட்டது. மன்னார் பிரஜைகள் குழுவின் அனுசரனையுடன்,மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை(31) காலை 9.30 மணியளவில் மன்னார் பஸார் பகுதியில் இடம் பெற்றது. இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்று கூடி பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை ...
Read More »