அதிநவீன கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உருவாகும் போக்கோ ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
போக்கோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. போக்கோ எக்ஸ்2 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக வெளியாக இருக்கும் புது ஸ்மார்ட்போன் போக்கோ எக்ஸ்3 பெயரில் அழைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய போக்கோ எக்ஸ்3 சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இதுபற்றிய டீசர்களை பொருத்தவரை விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்கோ நிறுவன விளம்பர பிரிவு மேலாளரின் ட்விட்டர் பதிவின் படி புதிய போக்கோ ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த கேமரா சென்சார் பிக்சல் பின்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 16 எம்பி ரெசல்யூஷனில் புகைப்படங்களை வழங்கும் என கூறப்படுகிறது.
கேமரா விவரங்களுடன், அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதில், போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனில் ப்ரோ மோட், அப்ரேச்சர், எக்ஸ்போஷர், ஐஎஸ்ஒ மற்றும் வைட் பேலன்ஸ் உள்ளிட்டவற்றை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதி வழங்கப்படுகிறது.