பப்பு நியூ கினியா மற்றும் நவுரு ஆகிய தீவுகளில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 60 அகதிகள் வேறு ஹோட்டலுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றம் அகதிகள் நல ஆர்வலர்களின் கடும் எதிர்ப்புக்கும் போராட்டத்துக்கும் மத்தியில் நடந்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இந்த அகதிகள் சுமார் ஓராண்டாக தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் மெல்பேர்ன் நகரில் உள்ள ஹோட்டலிலேயே சிறைவைக்கப்பட்டிருந்தனர். முன்னதாக, இவர்களை அடையாளம் குறிப்பிடா இடத்திற்கு ...
Read More »குமரன்
அற்பாயுளில் உதிர்ந்த மலர்
நான் அவுஸ்திரேலியா மெல்பனில் வசிக்கும் புறநகரமான மோர்வெல்லிலிருந்து சுமார் 65 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் மற்றும் ஒரு புறநகரமான சேல் என்ற ஊருக்கு கனத்த மனதுடன் சென்றுகொண்டிருக்கின்றேன். அந்தப்பாதையால் அதற்கு முன்னர் பலதடவைகள் அவுஸ்திரேலியாவின் மாநிலத் தலைநகரம் கன்பராவுக்கு சென்றிருந்தபோது இருந்த மனநிலையில் கடந்த செவ்வாயன்று மேற்கொண்ட அந்தப்பயணம் அமைந்திருக்கவில்லை. இந்த 2020 ஆம் ஆண்டு பிறந்தது முதல் எனக்குத் தெரிந்த சில கலை, இலக்கிய ஆளுமைகள் மறைந்ததையடுத்து அஞ்சலிக்குறிப்புகள் எழுதியிருக்கும் நான், எதிர்பாராதவகையில் எனக்கு என்றைக்குமே அறிமுகமில்லாத ஒரு தமிழ் இளைஞன் குறித்த அஞ்சலிக்குறிப்புகளை எழுதநேர்ந்துவிட்டதும் விதிப்பயனா? அல்லது உலகெங்கும் அகதிகளாக அலைந்துழலும் மனித ...
Read More »மொடர்னா தடுப்பூசிக்கு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஒப்புதல்
ஃபைசரை தொடர்ந்து, மொடர்னா (Moderna) நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கும், அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் ஆலோசனைக் குழு அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியால் சில பிரச்சனைகள் ஏற்படும் என்ற புகார் எழுந்தாலும், தடுப்பூசியால் நன்மைகளே அதிகம் என்பதால் ஒப்புதலை அளிப்பதாக, அதற்கான ஆலோசனைக்குழு தெரிவித்துள்ளது. ஒப்புதல் கிடைத்துள்ளதை தொடர்ந்து முதல்கட்டமாக கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படவுள்ளது. மொடர்னாவிடம் இருந்து 10 கோடி தடுப்பூசி டோசுகளை வாங்க, சுமார் 11,100 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை ...
Read More »போலியான குறுஞ்செய்திகளுக்கு பொதுமக்கள் ஏமாற வேண்டாம்
அமைச்சகங்களில் வேலை வாய்ப்புகளைத் தருவதாகத் தெரிவித்து அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்களுக்கு ஏமாற வேண்டாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. சமூக வலுவூட்டல், நலன்புரி அமைச்சகம், முதன்மை கைத்தொழில், சமூக நல அமைச்சகம் ஆகியவற்றில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுவதாகக் கூறி குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. குறித்த தவறான தகவல்களால் நீங்கள் ஏமாற வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் பொதுமக்களுக்கு தெரி வித்துள்ளது. அமைச்சகம் அத்தகைய தொழில்களை வழங்காததால் அரசாங்கத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பரப்பப்படும் இத்தகைய தவறான பிரசாரங்களுக்கு பொது மக்கள் ஏமாற வேண்டாம் என்று செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Read More »மட்டு.,அம்பாறை மாவட்டங்களில் திட்டமிடப்பட்டுள்ள முன்மொழிவுகள் ஆராய்வு
புதிய அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கமைவாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் அடுத்த ஆண்டில் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள முன்மொழிவுகள் தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது. இவ்விரு மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ள நவீன அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளை ஆராயும் மாநாடு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தலைமையில் நேற்று(17) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல். பண்டாரநாயக்க, கிழக்கு மாகாண திணைக்களங்களின் பணிப்பாளர்கள், மாவட்ட திணைக்களங்களின் பணிப்பாளர்கள், அரச திணைக்களங்களின் ...
Read More »இருமுனைப் போருக்கு தயாராகும் சீன – பாகிஸ்தான் கூட்டணி
சீன-பாகிஸ்தான் உறவை, இரு நாட்டு தலைவர்களும் வழக்கமாக “இமயத்தை விட உயரமானது, கடலை விட ஆழமானது“ என்று வர்ணிப்பார்கள். தற்போது, சீன-பாகிஸ்தான் உறவுகள் வளரும் வேகத்தைப் பார்த்தால், அவை, மேலும் புதிய இமய உச்சியையும், கடல் ஆழத்தையும் எட்டிவிடும் சூழ்நிலையை நெருங்குவது தெரிகிறது. சீன அதிபர் ஷீ ஜின்பிங் 2013ல், சீனாவை ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைக்கும் “21ம் நூற்றாண்டின் சில்க் ரோடு” என்று கூறப்படும் பல்முனை கட்டமைப்பு திட்டத்தை துவக்கிய பின்பு, அதன் வெற்றிக்கு பாகிஸ்தான் இன்றியமையாத அங்கமாக மாறியுள்ளது. ஆகவே, ...
Read More »கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவுமா?
மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றளர்கள் எண் ணிக்கை அதிகரித்துள்ளமையால் பொதுமக்கள் நட மாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேல் மாகாணத்தில் வாழும் மக்கள் நடமாடுவது தொடர் பாக சுய ஒழுக்கம் கொண்டிருக்க வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறு செயற்படா விட்டால் கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவக்கூடும் என்று அரச வைத்திய அதி காரிகள் சங்க (GMOA) செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்ஜே தெரிவித்துள்ளார்.
Read More »யாழ்.பல்கலைக்கழக மருத்துவ அதிகாரியாக மருத்துவர் சத்தியலிங்கம் நியமனம்
யாழ். பல்கலைக்கழக மருத்துவ அதிகாரியாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் நியமனம் பெறுகின்றார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மருத்துவ அதிகாரி பணிநிலை வெற்றிடமாகவுள்ளது. இந்த வெற்றிடத்துக்கு கோரப்பட்டவிண்ணப்பத்துக்கு சத்தியலிங்கம் விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பித்தவர்களில் அவரே தகுதியானவர் எனக் கண்டு நியமனக்கடிதம் வழங்கப்படுகின்றது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அவர் கடமையைப் பொறுப்பேற்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராகவும் சத்தியலிங்கம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைப்பு
ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 8-ந் திகதி முதல் 28-ந் திகதி வரை இந்த போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும். கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு 3 கிராண்ட்சிலாம் போட்டிகள் மட்டுமே நடந்தது. ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் (செர்பியா), சோபியா (அமெரிக்கா) சாம்பியன் பட்டம் பெற்றனர். தள்ளிவைக்கப்பட்டு நடத்தப்பட்ட அமெரிக்க ஓபனில் ...
Read More »ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்கியது- இந்தியா பேட்டிங்
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக பிங்க் பந்து பயன்படுத்தும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. அடுத்து இரு அணிகள் இடையே 4 டெஸ்ட் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி, பகல் ...
Read More »