குமரன்

அவுஸ்ரேலிய கடல்பகுதியில் காணாமல் போனவர்களை தேடுகிறது அமெரிக்க கடற்படை!

அவுஸ்ரேலிய கடல்பகுதியில் அமெரிக்காவின் ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் அமெரிக்க கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். அவுஸ்ரேலியஎல்லைப்பகுதியில் அமெரிக்காவிற்கு சொந்தமான ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளதாக அமெரிக்க கடற்படையினர் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் ஒக்கினாவாவில் உள்ள ராணுவ தளத்தில் இருந்து கிளம்பிய அமெரிக்க விமானம், அவுஸ்ரேலியாவின் கிழக்கு கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்திற்கான காரணம் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில், விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் அமெரிக்க கடற்படையினர் ...

Read More »

அவுஸ்ரேலிய கடலில் அமெரிக்க ராணுவ விமானம் விழுந்தது!

கூட்டு பயிற்சியின்போது அவுஸ்ரேலிய கடல் பகுதியில் அமெரிக்க ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் மாயம் ஆனார்கள். அவுஸ்ரேலியா வின் குவின்ஸ்லேண்ட் கடல் பகுதியில் அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா  கடற்படையினர் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அதில் அமெரிக்காவின் எம்.வி.-22 ஆஸ்பிரே என்ற போர் விமானங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த பயிற்சியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் ஒரு போர் விமானம், விமானம் தாங்கி கப்பலில் தரை இறங்க முயன்றது. அப்போது அந்த விமானம் ...

Read More »

தலைவர் பிரபாகரனின் வரலாற்று சிறப்புமிக்க சுதுமலை பிரகடனத்தின் 30-ஆவது ஆண்டு!

இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலை கோவிலடியில் வரலாற்று சிறப்புமிக்க பிரகடனத்தை வெளியிட்ட 30-வது ஆண்டு இன்றுதான். 1987-ம் ஆண்டு இலங்கையுடன் திடீரென அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஒப்பந்தம் போட முடிவு செய்துவிட்டார். ஆனால் களத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் முதலில் ஆலோசிக்கவில்லை. பின்னர் டெல்லி அசோகா ஹோட்டலில் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்கள் சிறை வைக்கப்பட்ட நிலையில் ஒப்பந்தத்தை ஏற்றாக வேண்டும் என மிரட்டல் ...

Read More »

குடிவரவு கொள்கையில்; என்னை விட நீங்கள் மோசமானவர் –டிரம்ப்

குடிவரவு கொள்கையை பொறுத்தவரை நீங்கள் என்னை விட மோசமானவர் என அமெரிக்க ஜனாதிபதி  டெனால்ட் டிரம்ப் அவுஸ்திரேலிய பிரதமரிற்கு தெரிவித்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது கடந்த ஜனவரியில் இருவரிற்கும் இடையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் குறித்தே புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட தொலைபேசி உரையாடலை டிரம்ப் இடைநடுவில் துண்டித்துக்கொண்டார் என்பதும்  குறிப்பிடத்தக்கது இந்த தொலைபேசி உரையாடல் குறித்த புதிய தகவல்களை வோசிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட தொலைபேசி உரையாடலின் போது மனஸ் மற்றும் நவ்று முகாம்களில் உள்ள அகதிகளை அமெரிக்காவில் ...

Read More »

செல்லப் பிராணிகளுக்கான செயற்கை நகங்கள்!

அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த காலி லோரிடாஸ், செல்லப் பிராணிகளுக்கான சலூன் நடத்திவருகிறார். சமீபத்தில் செல்லப் பிராணிகளுக்கான செயற்கை நகங்களை விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார். “பூனை, நாய் போன்றவற்றின் நகங்கள் சோஃபா குஷன்களைக் கிழித்துவிடுகின்றன. மனிதர்கள் மீது படும்போது காயம் ஏற்படுகிறது. இதற்காக மருத்துவரிடமும் செல்ல நேரிடுகிறது. அதனால்தான் செல்லப் பிராணிகளின் நகங்களை வெட்டிவிட்டு, செயற்கை நகங்களை மாட்டிவிடுகிறேன். இதனால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் கிடையாது. 40 வண்ணங்களில் கிடைக்கும் இந்த நகங்களுக்கு 8 வாரங்கள் வரை உத்திரவாதம் அளிக்கிறேன்” என்கிறார் காலி லோரிடாஸ்.

Read More »

டைப் செய்ய கீபோர்டு தேவையில்லை கண் அசைவே போதும்.!

சீனாவின் சாங்கிங் பல்கலைக்கழகம் மற்றும் சீன தேசிய நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பமையம் ஆகியவை இணைந்து ஒரு புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளன, இந்த தொழில்நுட்பம் அனைத்துவகையிலும் அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்துப் பகுதிகளிலும் பெரும்பாலும் டைப் செய்யப் பயன்படுகிறது, இதை மாற்றும் விதமாக இப்போது சீனாவின் சாங்கிங் பல்கலைக்கழகம் கண் தசைகளின் அசைவுகளை எலெக்ட்ரானிக் கட்டளைகளாக மாற்றும் ஒரு புதிய கண்ணாடிகளை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். தற்போது தொழில்நுட்பம் மிக விரைவாக வளரந்து வருகிறது என்பதற்க்கு விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இந்த கண் ...

Read More »

சமந்தா – நாக சைதன்யா திருமண ஏற்பாடுகள் தீவிரம்

நடிகை சமந்தா-நாக சைதன்யா திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபற்ற வருகிறது. கோவாவில் 3 நாட்கள் திருமண சடங்குகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். நாக சைதன்யா பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். இவர் தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தெலுங்கு படமொன்றில் ஜோடியாக நடித்தபோது இருவரும் காதல் வயப்பட்டனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. அக்டோபர் மாதம் திருமணத்தை முடிக்க திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளில் இரு வீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டு ...

Read More »

அவுஸ்ரேலியாவில் குடியுரிமைச் சட்டம் மாற்றம்: அகதிகளுக்கு சிக்கல்?

அவுஸ்ரேலிய குடியுரிமைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கான அரசின் சட்டமுன்வடிவில், மாற்றங்களைச் செய்வது தொடர்பில், அவுஸ்ரேலிய செனட்டர்கள் ஆலோசிக்க வேண்டுமென ஐ.நா சபை தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலிய அரசு முன்மொழிந்துள்ள மாற்றங்கள், அகதிகளுக்கு பாதகமாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை சர்வதேச விதிமுறைகளை மீறும் வகையில் அமையக்கூடுமென ஐ.நா வின் அகதிகளுக்கான அமைப்பான UNHCR சுட்டிக்காட்டியுள்ளது. குடியுரிமைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கான அரசின் சட்டமுன்வடிவினை ஆராயும் செனட் குழுவிடம், 500 தனிநபர்கள் மற்றும் அமைப்புக்கள் தமது கருத்துக்களைச் சமர்ப்பிக்கின்ற நிலையில், UNHCR-உம் இதில் அடங்குகிறது. Permanent Residency எனப்படும் நிரந்தர ...

Read More »

அவுஸ்ரேலியாவில் குழந்தைகளுக்கான கட்டாயத் திருமணம் அதிகரிப்பு

அவுஸ்ரேலியாவில், குழந்தைகளுக்கான கட்டாயத் திருமணங்கள் மீண்டும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்ரேலியாவில், கட்டாய மற்றும் குழந்தைத் திருமணங்கள் ஒரு குற்றச் செயலாக 2013இல் சட்டமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை 175 கட்டாயத் திருமணங்கள் பற்றி புகார் செய்யப்பட்டிருந்தன. 2014-15ம் ஆண்டுகளில் 33ம், 2016/17இல் 61 கட்டாயத் திருமணங்கள் தொடர்பாக பொலிசாரிடம் புகார் செய்யப்பட்டுள்ளன. அதிகமான சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களைக் காப்பாற்ற முயல்வதனால் இக் குற்றச் செயலை முற்றாக நிறுத்துவது கடினமாக இருப்பதாக AFP பேச்சாளர் Dan Evans தெரிவித்துள்ளார்.

Read More »

ஈழ கலைஞர் பொன். கணேசமூர்த்தி யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நாள்: 4-8-2006

பொன். கணேசமூர்த்தி தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக சாத்வீக வழியில் தன் சிறுவயது முதல் அயராது உழைத்து வந்து விடுதலை வரலாற்றில் இடம்பிடித்தவர். பல்துறை கலை ஆற்றல் கொண்ட இவர் இலங்கை மண், வைகறை ஆகிய தொடர் நாடகங்களையும் தனி நாடகங்களையும் உருவாக்கி வழங்கியிருந்தார். விடுதலைக் கருத்துக்களை விதைப்பதற்காக அரங்க நாடகங்களும் பொன். கணேசமூர்த்தியினால் பாடசாலைப் பருவம் முதல் அரங்கேற்றப்பட்டுள்ளன. இன எழுச்சி சஞ்சிகையின் ஆசிரியராக செயற்பட்டவர். வரலாறு சொல்லும் பாடம் என்ற நூலை உருவாக்குவதில் தீவிரமாக உழைத்து வந்தார். மண்ணுக்காக என்ற காணொளி  திரைப்படத்தையும் ...

Read More »