முழங்காலில் மாவீரர் துயிலும் இல்லம் கிளிநொச்சி முழங்காலில் மாவீரர் துயிலும் இல்லத்தில் 3000 அதிகமான மக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 1750 ஈகைச் சுடர்கள் ஏற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மாவீரரின் தந்தையான கே.நாகராசா பொதுச்சுடரினை ஏற்றியதை அடுத்து ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலிக்கப்பட்டது. வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதியில் பொலிஸாரின் ...
Read More »குமரன்
அரசியல், போராகப் பேய் வடிவம் எடுத்து நிற்கிறது!
தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008 எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிக்கும் புனித நாள். ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள். எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழவேண்டும் ...
Read More »ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்த விசேட சட்டம் அவசியம் – வலியுறுத்திய மஹிந்த தேசப்பிரிய!
தேர்தல் காலப் பகுதியில் ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்கான விசேட சட்டம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வலியுறுத்தியுள்ளார். நேற்றுமுன்தினம் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற சபாநாயகருடன் சந்திப்பின்போதே மஹிந்த தேசப்பிரிய இதனை வலியுறுத்தியுள்ளார். கடந்த 16 ஆம் திகதி நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் கால கட்டத்தில் சில ஊடக நிறுவனங்கள் பக்கசார்பாக நடந்து கொண்ட விதத்தினை சுட்டிக்காட்டியே அவர் இதனை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்த ...
Read More »தடையை மீறி யாழ் பல்கலையில் எழுச்சியுடன் நினைவேந்தல்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் விடுத்த தடையை மீறி சற்றுமுன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த மாணவர்கள் எழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தலை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் விடுத்த தடையை மீறிச் சற்றுமுன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த மாணவர்கள் எழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தலை முன்னெடுத்துள்ளனர். மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் முன்னெடுத்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நிகழ்வுகளை முன்னெடுக்கவும் மாணவர்கள் உள்நுழைவதற்கும் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியால் நேற்று (26) தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று முற்பகல் 10 மணியளவில் அங்கு கூடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்துள்ளனர். தொடர்ந்து ...
Read More »தமிழ்ல பேசட்டுமா?-நடிகை டாப்சி
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தன்னை இந்தியில் பேச சொல்லி வற்புறுத்திய நிருபருக்கு நடிகை டாப்சி தக்க பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்துகின்றன. சர்வதேச திரைப்பட விழாவில் நடைபெற்ற, பொது அமர்வில் டாப்சி கலந்து கொண்டார். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளித்து வந்த டாப்சியிடம் ...
Read More »விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் அசஞ்சே சிறையில் உயிரிழக்கும் ஆபத்து!
லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘விக்கி லீக்ஸ்’ நிறுவனர் அசஞ்சேக்கு தீவிர சிகிச்சை தேவை என்று 60க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இணைந்து இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரீத்தி பட்டேலுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டு உலகமெங்கும் பிரபலமானவர், ‘விக்கி லீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே. இந்த விவகாரத்தில் ஜூலியன் அசஞ்சேயை கைது செய்ய அமெரிக்கா தீவிரம் காட்டியது. இதற்கிடையே சுவீடனில் இவருக்கு எதிராக 2 பெண்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். இதனால் நாடு கடத்தும் சூழ்நிலை உருவானதால் கடந்த 2012ஆம் ...
Read More »மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு தாயகம் தயார் நிலையில்!
மாவீரர் நினைவு வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் வடக்கில் உணர்வுபூர்வமாக அதனை அனுஷ்டிப்பதற்காக மாவீரர் துயி லும் இல்லங்கள் தயாராகியுள்ளன. 2009 ஆம் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னரும் கூட வடக்கு கிழக்கு மக்களினால் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் வடக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நாளை 27 ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றி மாவீரர்களை நினைவுகூர மக்கள் தயாராகிவருகின்றனர். மாவீரர்நாள் நினைவேந்தல் குழுவினர், பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ...
Read More »எந்த அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இராணுவம் தயார்!- சவேந்திரசில்வா
சிறிலங்கா இராணுவம் எந்தஎதிர்கால அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் உள்ளது என இராணுவதளபதி தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவம் மரபுசாரத ஆபத்துக்களையும் ஏனைய ஆபத்துக்களையும் இனம் கண்டுள்ளது இதன் காரணமாக தயார் நிலையில் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவம் தேசத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளிற்கும் நல்லிணக்க நடவடிக்கைகளிற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியின் தொலைநோக்கிற்கு ஏற்ப இந்த நடவடிக்கைகளை படையினரின் ஆதரவுடன் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார். இராணுவத்தின் அனைத்து ...
Read More »புலம்பெயர்ந்த பெண்! இன்று அவுஸ்திரேலியாவில் முக்கிய பிரபலம்!
அவுஸ்திரேலியாவிலேயே அதிக ஊதியம் பெறும் முதன்மை செயல் அலுவலர் ஒரு காலத்தில் இலங்கையிலிருந்து 200 டொலர்களுடன் புலம்பெயர்ந்த ஒரு இளம்பெண் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், Macquarie குழுமத்தின் முதன்மை செயல் அலுவலரான Shemara Wikramanayake (57), அவுஸ்திரேலியாவிலேயே அதிக ஊதியம் பெறும் முதல் பெண் முதன்மை செயல் அலுவலர் என்ற பெருமையை பெற்றுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. அவர் 2018/19 நிதியாண்டில் 18 மில்லியன் டொலர்கள் ஊதியம் பெற்றுள்ளார். வசதியாக வாழ்ந்த சூழலில், ஒரு நாள் 200 டொலர்களுடன் நாட்டை விட்டு புறப்பட ...
Read More »ஜெயலலிதா வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன்!- நித்யா மேனன்
ஜெயலலிதா வாழ்க்கையை தழுவி உருவாகி வரும் ’த அயன் லேடி’ படத்தில் நடிக்கும் நித்யாமேனன், ஜெயலலிதா வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என கூறியுள்ளார். ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரிலும், த அயன் லேடி என்ற பெயரிலும் சினிமா படமாக தயாராகிறது. தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். த அயன் லேடி படத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பது குறித்து நித்யா மேனன் அடிக்கடி பேசி வருகிறார். தற்போது அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- “ஜெயலலிதாவுக்கும் எனக்கும் ...
Read More »