குமரன்

2021 ஒக்டோபருக்குள் கொரோனா மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிடும்-அவுஸ்திரேலியா

அடுத்தவருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் கொரோனா வைரஸ் மருந்தினை விநியோகிக்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிடும் என அவுஸ்திரேலிய சுகாதார அமைச்சர் கிரேக் ஹன்ட் தெரிவித்துள்ளார். சுயவிருப்பத்தின் அடிப்படையிலேயே மருந்து வழங்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலியா கொரோனா வைரசிற்கான மருந்துகளிற்கு அனுமதிவழங்கும் நடைமுறையை நோக்கி உரிய வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றது என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் மாத முடிவிற்குள் அவுஸ்திரேலியாவில் கொரோனா மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிடும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலவசமாக, சுயவிருப்பத்தின் அடிப்படையில் அனைவருக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும் என ...

Read More »

இலங்கையில் மிகவும் வயது முதிர்ந்த பெண் ஒருவர் மரணம்

இலங்கையில் மிகவும் வயது முதிர்ந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். களுத்துறை-தொடாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் 117 வயதான ‘வேலு பாப்பானி அம்மா’ என்று அழைக்கப்படும் மூதாட்டி ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். வேலு பாப்பானி அம்மா 1903 ஆம் ஆண்டு மே 03 ஆம் திகதி, களுத்துறை மாவட்டம், தொடங்கொடை பிரதேச செயலக பிரிவில் உள்ள நேஹின்ன கிராமத்தில் பிறந்தார். முதியோருக்கு அரசாங்கம் வழங்கும் அடையாள அட்டையின் மூலம் அவரது வயது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. குறித்த மூதாட்டிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் ...

Read More »

மன்னாரில் கண்வைத்துள்ள அவுஸ்திரேலிய நிறுவனம்

மன்னார் தீவுக்கடலில் பெற்றோல் உண்டு என்ற கதையாடல் மட்டுமல்ல, பெட்ரோலிய ஆய்வுகளுக்கு வெளிநாட்டு நிறுவனங்களை இலங்கை அரசாங்கம் அழைந்திருந்தமை எல்லாம் நாம் அறிந்த செய்தி. ஆனால் மன்னார் தீவின் கனியவளங்கள் மீது வெளிநாட்டு நிறுவனங்கள் குறிப்பாக அவுஸ்திரேலிய நிறுவனமொன்று ‘கண்’ வைத்திருப்பது மட்டுமல்லாது அவ்வளங்களை சத்திமில்லாமல் ஏற்றுமதி செய்துவருவதான தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. 26 கி.மீ நீளமும் 8 கி.மீ அகலமும் கொண்ட மன்னார்தீவின் மணலில் இல்மனைட் என்ற கனிய வளங்கள் உள்ளன. இக்கனிமம், வண்ணப்பூச்சுகள், மை, பிளாஸ்டிக் மற்றும் அழகுசாதனப் ...

Read More »

மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது

தற்போது நிலவும் கொவிட்-19 கொரோனா தொ ற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு மாகாண சபை தேர்தலை ஒத்திவைப்பது என அரச கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் இருப்பினும், நாட்டுக்கு மாகாண சபை அமைப்பு தேவை என்று அரச கட்சியின் பாராளுமன்ற உறுப் பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், மாகாண சபை தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதி தலைமையில் அரச கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதேவேளை மாகாண ...

Read More »

திருக்கேதீஸ்வர ஆலய காணி ‘மாதோட்ட’ விகாரையின் பிக்குவால் அபகரிப்பு

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை ‘மாதோட்ட’ விகாரையின் பிக்கு அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று செவ்வாய்க் கிழமை காலை குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணி சைவ மங்கையர் கழகத்துக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது. குறித்த காணியானது நீண்ட காலமாக திருக்கேதீச்சர ஆலயத்தின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது.இக் காணியானது நாட்டில் ஏற்பட்ட இடப் பெயர்வு காரணமாக இராணுவம் அவ் இடத்தில் நிலை ...

Read More »

கொரோனாவில் இருந்து மீண்ட கமல் பட நடிகை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கமல் பட நடிகை தற்போது குணமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தேவ், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக வந்த ரகுல் பிரீத் சிங் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களில் நடிக்கிறார். கடந்த வாரம் படப்பிடிப்புக்கு ஆயத்தமாகி வந்த ரகுல் பிரீத் சிங்கிற்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். ...

Read More »

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் காலமானார்!

பிரபல இசையமைப்பாளர்  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் (75) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில்  இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read More »

வுகானின் கொரோனா வைரஸ் தெரியப்படுத்திய பத்திரிகையாளருக்கு சிறைத்தண்டனை

கடந்த வருடம் வுகானில் கொரோனா வைரஸ் மிகப் பெரும் பாதிப்பை  ஏற்படுத்திக்கொண்டிருந்த நகரின் நிலை குறித்த செய்திகளை வெளியிட்ட ஒருவருக்கு citizen-journalist    சீனா நான்கு வருட சிறைத் தண்டனையை வழங்கியுள்ளது. ஜாங் ஜான்  என்ற 37 வயது பெண்ணிற்கே  சீனா சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது. அவர் பிரச்சினைகளை உருவாக்கினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே சீனா இந்த தண்டனையை வழங்கியுள்ளது. வுகானில் அவ்வேளை காணப்பட்ட நிலவரத்தை குறிப்பாக மருத்துவமனைகளில் காணப்பட்ட நிலவரத்தினை உடனடியாக நேரடியாக வெளிஉலகிற்கு தெரிவித்த சிலரில் ஜாங் ஜான் ஒருவர் என்பதுடன்  இது தொடர்பில் ...

Read More »

உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு எதிராக பௌத்தமதகுருமார் ஆர்ப்பாட்டம்

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்தமதகுருமார் பலர் இன்று ஜனாதிபதி செயலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். இது தொடர்பில் அவர்கள் மனுவொன்றையும் சுகாதார அமைச்சரிடம் கையளித்தனர். சிங்களராவய உட்பட பல அமைப்புகளை சேர்ந்த பௌத்தமதகுருமார் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பௌத்தபிக்குகளுக்கும் ஜனாதிபதி செயலகத்தி;ன் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸாரிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து பதற்றமானநிலையேற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி வந்ததை தொடர்ந்து கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் ...

Read More »

சம்மந்தன் மக்களை மீண்டும் ஏமாற்ற ஆரம்பித்துள்ளார்

மாகாண சபைக்கான தேர்தல் நெருங்குவதால் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தற்போதும் சமஷ்டித் தீர்வுதான் எனக் கூறி; மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்ற ஆரம்பித்துவிட்டார் என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி இன்று திங்கட்கிழமை (28) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது சமஷ்டி என்ற பதம் சிங்களத் தலைமைகளுக்கும், சிங்கள மக்களுக்கும் பிடிக்காத ஒரு சொல்லாகி விட்டது. ...

Read More »