கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கமல் பட நடிகை தற்போது குணமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தேவ், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக வந்த ரகுல் பிரீத் சிங் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களில் நடிக்கிறார்.
கடந்த வாரம் படப்பிடிப்புக்கு ஆயத்தமாகி வந்த ரகுல் பிரீத் சிங்கிற்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், தற்போது ஒரு வார சிகிச்சைக்கு பின் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என்பது என தெரியவந்தது. இதுகுறித்த தகவலை டுவிட்டரில் பகிர்ந்துள்ள ரகுல் பிரீத் சிங் “எனக்கு கொரோனா நெகடிவ் என்ற ரிசல்ட் வந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நான் முழுமையாக குணமடைந்து விட்டதாக உணர்கிறேன்.
எனக்காக வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 2021-ம் ஆண்டை நல்ல பாசிடிவ் எண்ணத்துடனும், நல்ல உடல்நலத்துடனும் தொடங்க விரும்புகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal