குமரன்

சிவாஜிலிங்கத்திற்கு வாக்களியுங்கள்!

இந்து கோயில்களுக்குள் பௌத்த துறவிகள் உடல் தகனம் செய்யாமல் இருக்க சிவாஜிலிங்கத்திற்கு வாக்களியுங்கள் எனத் தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் தெரிவித்தார். நேற்று வவுனியாவில் காணாமல் போன உறவுகள் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். நாங்கள் 986  ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். நேற்றைய தினம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் எமது போராட்ட களத்திற்கு வந்திருந்தார்கள்.  தமிழ் மக்களை மீன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி நாங்கள் கூறுகின்றோம். தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ...

Read More »

சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடுவேன்!

ஜனாதிபதி செயலகம் பிரதமரின் அலரி மாளிகைக்கு முன்னால் ஒன்றரை மணித்தியாலம் சத்தியாக்கிரக போராட்டத்தில்  ஈடுபடுவேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும்  ஜனாதிபதி வேட்பாளருமாகிய எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில்  தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில் சனிக்கிழமை(2) முற்பகல்  கல்முனையில் மக்கள் சந்திப்பில்  ஈடுபட்ட பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரது கேள்விக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தனது கருத்தில், 90% வீதம் காணி விடுவிக்கப்பட்டுள்ளது என கதைவிட்டுக்கொண்டிருக்க தேவை இல்லை.98 அரசியல் ...

Read More »

ராஜபக்ஷ குடும்பத்தினர் வெற்றி பெறுவதற்காக சஹ்ரான் வெடித்தார்!

சிறுபான்மை மக்களை தள்ளி வைத்துவிட்டு இந்த நாட்டில் ஒரு ஜனாதிபதி வரமுடியாது எனும் உண்மையை இந்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு சொல்லி அவர்களுக்கு நல்லதொரு பாடம் புகட்ட வேண்டும் என்று விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசாவை ஆதரித்து வெள்ளிக்கிழமை இரவு (01) வாழைச்சேனையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில், இந்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷ ...

Read More »

நல்லிணக்கத்தை கொண்டுவருவேன் என்று உறுதி கூற வேட்பளார் எவருமில்லை !

இதுவரை அளிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரசார உறுதி மொழிகளை கணக்கிட்டுப் பார்த்தால் இத்தேர்தலுக்காக வழங்கப்பட்டுள்ள உறுதி மொழிகளே பெருமளவினதாக உள்ளன. ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளர்களுமே ஏனைய வேட்பாளர்களை விட அதிகமான உறுதி மொழிகளை வாக்காளர்களிடம் வழங்க உறுதி கொண்டுள்ளமையினை அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பார்க்கும் போது தெரிய வருகிறது. ஒரு வேட்பாளர் நெல் உற்பத்திக்கு தேவையான பசளைகளை இலவசமாக தருவேன் என்றால் இன்னொருவரோ அனைத்து விவசாய நடவடிக்கைகளுக்குமே இலவசமான பசளையை நான் பதவிக்கு வந்தால் தருவேன் என்கிறார். தொழிலாளர் வகுப்பினரது வேதனங்களை நான் அதிகரிப்பேன் என்று ...

Read More »

ஓவியங்கள் மூலம் சாதனை படைக்க விரும்புகிறேன்!-ஷாம்லி

நடிப்பில் சாதிக்க முடியாவிட்டாலும் தம்மால் ஓவியத்தில் சாதிக்க முடியும் என்கிறார் நடிகை ஷாம்லி. நடிகை ஷாலினியின் தங்கை, நடிகர் அஜித்தின் மைத்துனி என்கிற அடையாளம் தனக்குத் தேவையில்லை என்பதிலும், தன் திறமை மூலம் தனக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்பதிலும் தாம் தெளிவாக இருப்பதாகச் சொல்கிறார். சிறு வயதில் சிறந்த குழந்தை நட்சத்திரம் எனப் பெயர் வாங்கி தேசிய விருது பெற்றவர் ஷாம்லி. சிங்கப்பூரில் திரைத்துறை சார்ந்த படிப்பை முடித்தவர், பின்னர் அமெரிக்கா, ஜெர்மனிக்குப் பறந்து மேற்கத்திய நடனத்தையும் கற்று வந்தார். இடையில் ஒன்றிரண்டு படங்களில் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் கார்களில், சமையலறைகளில் உறங்கும் அகதிகள்!

ஆஸ்திரேலியாவில் அகதிகளாக உள்ளவர்கள் மிகவும் நெருக்கமான தங்குமிடங்களில், கார்களில், ஹோட்டல் சமையலறைகளில் இரவில் தூங்க வேண்டிய வீடற்ற அவலநிலை இருந்து வருவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய கத்தோலிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், முறையான மீள்குடியேற்ற வசதிகள் இல்லாததால் இந்த வீடற்ற நிலை அகதிகளிடையே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக 24 இளம் அகதிகளை பின் தொடர்ந்த ஆய்வாளர் டாக்டர் ஜென் கெளச், இந்த காலக்கட்டத்தில் அகதிகள் பல மோசமான, பாதுகாப்பற்ற, தற்காலிக இடங்களில் தூங்கியதைக் கண்டறிந்துள்ளார். சிலர் பள்ளியிலோ பணியிடங்களிலோ தங்கியுள்ளனர், ...

Read More »

சந்திரிகா புதிய கூட்டணியில் இணைந்தமை ஜனநாயக ஆட்சிக்கு முக்கியமானதொரு விடயம்!

புதிய ஜனநாயக முன்னணியின் அங்கத்துவக் கட்சிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான குழுவினர் ஒன்றிணைந்து நாட்டில் ஜனநாயக அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு உறுதியளித்திருப்பது மிக முக்கியமான விடயமாகும். நாட்டில் அபிவிருத்தி, சமத்துவம், சுயாதீனத்துவம் என்பவற்றை ஏற்படுத்தி, சௌபாக்கியமானதொரு இலங்கையை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு பயணிப்பதே எமது இப்புதிய கூட்டணியின் முக்கிய இலக்கு என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு முழுமையான ஆதரவை வழங்கி, அவரை தேர்தலில் வெற்றி பெறச்செய்வதை ...

Read More »

அமெரிக்க உடன்படிக்கைக்கு எதிராக நீதிமன்றில் மனுத் தாக்கல்!

அமெரிக்காவுடன் இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக் கொள்ளவுள்ள மிலேனியம் சலன்ஞ் கோப்ரேசன் வேலைத்திட்ட ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   இந்த அடிப்படை மனு சட்டத்தரணி தர்ஷன வேரதுவகேவால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். இதேவேளை, அமெரிக்காவுடன் எக்ஸா, எம்சீசீ, சோபா ஆகிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திட ...

Read More »

ஐந்து கட்சிகளின் கூட்டு: அடுத்தது என்ன ?

ஜனாதிபதித் தேர்தலில் முழு அளவிலான தமிழ் பேரத்தை பிரயோகிப்பது என்றால் ஒரே தெரிவு ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர்தான். ஆனால் அதற்கு எந்த ஒரு தமிழ்க் கட்சியும் தயாராக இருக்கவில்லை. அப்படி ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று சிந்தித்த சுயாதீனக் குழுவும் மிகவும் பிந்தி விட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் அதைவிட பிந்தி விட்டார்கள். சுயாதீன குழு கட்சித் தலைவர்களை சந்தித்தபோது அவர்கள் என்ன சொன்னார்கள்? ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு காலம் பிந்தி விட்டது என்றுதானே சொன்னார்கள்? அப்படி என்றால் அதை ...

Read More »

85 வயது பாட்டியாக காஜல் அகர்வால்!

இந்தியன் 2’ திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் 85 வயது அமிர்தவள்ளி பாட்டியாக நடிக்கிறார். சினிமாவில் அறிமுகமானதில் இருந்து இன்றுவரையிலும் கவர்ச்சி மற்றும் குறும்புத்தனமான வேடங்களில் மட்டுமே நடித்தவர் காஜல் அகர்வால். இவருக்கு இதற்கு முன்பு எந்த படத்திலும் வயதான தோற்றத்தில் நடித்த அனுபவம் கிடையாது. ‘இந்தியன் 2’ படத்தில் வயதான மூதாட்டியாக நடிக்கப்போகிறார். தனக்கு இந்தப் படத்தில் நடிப்பது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருக்கும் என்று கூறுகிறார் காஜல் அகர்வால். இயக்குநர் சங்கர் இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.சங்கர் படத்தில் மட்டும்தான் ...

Read More »