SBS வானொலி ஆஸ்திரேலியா முழுவதும் நடத்திய மொழிப் போட்டியில் சுமார் 700 பள்ளிக்கூடங்களிலிருந்து 4 வயது முதல் 18 வயதுவரை என்று மொத்தம் சுமார் இருபதாயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். பல பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றியாளர்கள் ஆறு பேரில் மெல்பன் நகரில் வாழும் வைகா கார்த்திக் மற்றும் கதிர் ஜானகி சக்திவேல் என்று இரு தமிழ் குழந்தைகள் வெற்றிபெற்றனர். இவர்களுக்கு நேற்று(8) சிட்னி பல்கலைக்கழத்தில் நடைபெற்ற விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
Read More »குமரன்
டென்மார்க் உளவு அமைப்பின் முன்னாள் தலைவரின் பேட்டி புத்தத்தை விற்க தடை
டென்மார்க் நாட்டின் உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் ஜேகப் சாஃப்பின் பேட்டிகளை கொண்ட புத்தத்தை விற்க தடை டென்மார்க் நாட்டின் உளவு அமைப்பு, தேசிய அளவிலான ஒரு செய்தித்தாள் மற்றும் வானொலி நிலையத்தை ஒரு புத்தகத்தின் பகுதிகளை வெளியிட தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஏனெனில், அந்தப் புத்தகம் ரகசியங்களை கொண்டிருக்கலாம் என்பதால் தடைசெய்யப்பட்டுள்ளது டென்மார்க் நாட்டின் உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் ஜேகப் சாஃப்பின் பேட்டிகளை அடிப்படையாகக் கொண்டுள்ள அந்தப் புத்தகத்தை டென்மார்க்கில் உள்ள 40 கடைகள் விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ...
Read More »பெண்கள் மட்டுமே நடித்துள்ள திரைக்கு வராத கதை
ஆண் நடிகர்களே இல்லாமல் திரைக்கு வராத கதை என்ற படம் உருவாகியிருக்கிறது. 90களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நதியா திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்த நதியா, சிறிது காலமாக வாய்ப்பில்லாமல் இருந்தார்.தற்போது சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கவந்துள்ளார். இவர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘திரைக்கு வராத கதை’ என்று பெயர் வைத்துள்ளனர். நதியாவுடன் இனியா, ஈடன், கோவை சரளா, ஆர்த்தி, சபிதா ஆனந்த் உள்ளிட்ட ...
Read More »வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்புவது எப்படி?
வாட்ஸ்ஆப் மூலம் பணம் பிறருக்கு அனுப்பவும் முடியும் பிறரிடமிருந்து பெறவும் முடியும். அது எப்படி என்பதை கீழே காண்போம். ஆப்பிள், கூகுள், சாம்சங் போன்ற நிறவனங்கள், மொபைல் வேலெட்களை ஆப்பிள் பே, கூகுள் வேலெட் மற்றும் சாம்சங் பே என பணத்தை டிஜிட்டல் வடிவத்தில் பரிமாற உதவுகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்ஆப் மூலமும் பணம் அனுப்பும் புதிய வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. * கூகிள் ப்ளே ஸ்டோரில் ப்ரீசார்ஜ் ஆப்பை (Freecharge App) பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் நம் மொபைல் எண் கொண்டு ...
Read More »புதிய கட்சியை பதிவு செய்ய வேண்டாம் என எழுத்துமூலம் கோரிக்கை!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இணையான பொருள்படும் அல்லது பெயருடன் கூடிய புதிய கட்சிகளை பதிவு செய்ய வேண்டாம் என இந்த கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் தேர்தலை ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர ஆகியோர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை நேரில் சந்தித்து எழுத்து மூலம் ...
Read More »அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் பொதுநலவாய விளையாட்டு
2017ம் ஆண்டு இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியை அம்பாந்தோட்டையில் நடத்துவதற்காக 2011ம் ஆண்டு இடம்பெற்ற வாக்கெடுப்பிற்கான ஆரம்ப நடவடிக்கைகளில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது அரச பணம் மற்றும் நன்கொடையாளர்களின் 680 மில்லியன் ரூபாய் பணம் இலங்கை வங்கியின் கொழும்பு பெரு நிறுவன கிளையின் 71199250 என்ற இலக்கத்தில் பொதுநலவாய விளையாட்டு என்ற பெயருடனான கணக்கில் வைப்பு செய்யப்பட்டிருந்தது. எனினும் தற்போது அந்த கணக்கில் 246 மில்லியன் ரூபாய் மாத்திரமே மீதமாக உள்ளதென ...
Read More »அலுவலகத்தில் விதிமுறைகளை மீறி ஆபாசப்படம் பார்த்தவர் பணிநீக்கம்
அவுஸ்திரேலியா நாட்டில் அலுவலகம் ஒன்றில் ஆபாசப்படம் பார்த்த குற்றத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு ரூ 14 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிட்னி நகரில் பெயர் வெளியிடப்படாத நபர் ஒருவர் தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த மேலாளருக்கு அலுவலகம் பிரத்யோகமான மடிக்கணிணி ஒன்று வழங்கியிருந்தது. இந்நிலையில், அலுவலகத்தில் இருந்தபோது அந்த மடிக்கணிணியில் ஆபாசப்படம் பார்த்ததும், ஆபாசப்படங்களை பதிவிறக்கம் செய்ததும் தெரியவந்தது. அலுவலகத்தில் விதிமுறைகளை மீறி ஆபாசப்படம் பார்த்த குற்றத்திற்காக நிறுவனம் அவரை கடந்த ஜனவரி மாதம் அதிரடியாக ...
Read More »‘மினிமெட் 670ஜி’ -சர்க்கரை நோயாளிக்கு உற்ற தோழன்
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கண்காணிப்பது ஒரு பெரிய வேலை. அவர்களது விரலில் ஊசியைக் குத்தி, ரத்தத்தை எடுத்து, சர்க்கரை அளவை பார்க்கும் வலியும், சலிப்பும் மிக்க முறைதான், இப்போது பரவலாக இருக்கிறது. இந்த முறைக்கு பல மாற்று முறைகள் வந்தாலும், அவை பரவலாக பயன்பாட்டுக்கு வரவில்லை. சமீபத்தில், ‘செயற்கை கணையம்’ போல செயல்படும் ஒரு கருவிக்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை அனுமதி வழங்கியிருக்கிறது. ‘மெட்ரானிக்’ நிறுவனம் தயாரித்துள்ள, ‘மினிமெட் 670ஜி’ என்ற இந்த சிறிய கருவியை, ...
Read More »சசிகுமார் ஜோடியாக ரவிச்சந்திரன் பேத்தி
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகள் வழி பேத்தி தன்யா. திரைப்படத்தில் நடிக்கும் ஆர்வம் கொண்ட தன்யா இதற்காக முறைப்படி நடனம், நடிப்பு பயிற்சி பெற்றுள்ளார். தனியாக போட்ஷ¨ட் நடத்தி அதனை முன்னனணி இயக்குனர்களுக்கு அனுப்பி வைத்தார். அதைப்பார்த்த இயக்குனர் மிஷ்கின் தான் அடுத்து இயக்கும் படத்தின் நாயகியாக தன்யாவை தேர்வு செய்தார். இந்த நிலையில் உப்புகருவாடு படத்திற்கு பிறகு ராதாமோகன் இயக்கும் பிருந்தாவனம் என்ற படத்தில் அருள்நிதி ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். தற்போது சசிகுமார் அடுத்து தயாரித்து நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ...
Read More »முதலமைச்சரின் வருகைக்காக காத்திருக்கும் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள்!
பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் (Kingston upon Thames) என்ற மாநகரம் யாழ்ப்பாண நகரத்துடன் வரலாற்றுமுக்கியத்துவம் மிக்க ஒரு இரட்டை நகர உடன்படிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி செய்துகொள்ளவிருக்கிறது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் ஆட்சி, சுகாதரம், கல்வி மற்றும் தொழில் துறைகளில் அறிவுப்பரிமாற்றம் மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றை இரு நகரங்களுக்கும் மேம்படுத்துவதற்கு வழி ஏற்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக இதுதொடர்பில் வட மாகாண சபை முதலமைச்சர் எடுத்துவந்த முயற்சி தற்போது கைகூடி உள்ளது. இதுதொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கிங்ஸ்ரன் கவுன்சிலின் ...
Read More »