புகழ்பெற்ற புலனாய்வுப் பத்திரிகையாளரான நிக் டேவீஸ் நல்ல நாவலாசிரியரும்கூட. அரசும் ஆட்சியாளர்களும் மறைக்க நினைக்கும் ரகசியங்களைத் தேடிக் கண்டுபிடித்து அம்பலப்படுத்தும் இவர், ‘விக்கி லீக்ஸ்’ பல உண்மைகளை அம்பலப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவர். பிரிட்டனில் ரூபர்ட் முர்தோச்சின் ஊடக சாம்ராஜ்யம் தொடர்பான தகவல்களுடன், ‘நியூஸ் ஆஃப் த வேர்ல்ட்’ பத்திரிகை ஒட்டுக்கேட்பு விவகாரத்தையும் எழுதினார். தான் வழங்கிய புலனாய்வுச் செய்திகளை அடிப்படையாகக்கொண்டு நூல்களையும் எழுதுவது இவருடைய வழக்கம். ஒவ்வொரு முறை புத்தகம் எழுதும்போதும் பெரிய போராட்டமாகத்தான் இருக்கிறதா? புத்தகம் எழுதுவது கடினமான வேலை தான்; ...
Read More »குமரன்
வட மாகாணத்தில் விரைவில் மேலும் 4 நியதிச் சட்டங்கள்
வட மாகாணத்தில் விரைவில் மேலும் 4 நியதிச் சட்டங்கள் நிறைவேறவுள்ளதாக வட மாகாண இறைவரித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பிரகாரம் வட மாகாணத்திற்குட்பட்ட கனிப் பொருட்களிற்கான வரிக்கான ஏற்பாடுகள் இடம்மெறுவதோடு அடகு பிடிப்போர் அனுமதிக்கான வரி விதிப்பிற்கும் வட மாகாண இறைவரித் திணைக்களம் தயாராகிவருகின்றதுடன் வியாபார பெயர்ப் பதிவுக் கட்டணம் என்பவற்றோடு மருந்து மற்றும் இரசாயன விநியோகம் மீதான வரிகளிற்கான ஏற்பாட்டினையும் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த வரிகள் ஏற்கனவே நாட்டின் ஏனைய மாகாணங்கள் சில வற்றில் நடைமுறையில் உள்ளது இதன் பிரகாரம் விரைவில் ...
Read More »அவுஸ்ரேலியா தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் தொடர்பாக கருத்தமர்வு
புகலிடக் கோரிக்கைக்கான விண்ணப்பத்தை கையாள்வது எப்படி? தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் தொடர்பாக கருத்தமர்வு நிகழ்வு தமிழ் ஏதிலிகள் கழகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. புகலிடக் கோரிக்கைக்கான விண்ணப்பம் குறித்த தகவல்களை பரிமாறுவதற்க்கு தமிழ் சட்ட வல்லுனரான அவனிதா செல்வராஜா கலந்து கொள்ள இருக்கிறார். தமிழ் ஏதிலிகள் கழகத்தின் குமார் நாராயணசாமியும் பங்குபற்றுகிறார். தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள், அவர்களது நலன் விரும்பிகள், மற்றும் புகலிடக் கோரிக்கைக்கான விண்ணப்பம் பற்றிய தகவல்களை அறிய விரும்புவோர் இந்தக் கருத்தமர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காலம்: 4PM Saturday ...
Read More »குழந்தைகளை கவர்ந்த சிவகார்த்திகேயன்
‘ரெமோ’வில் சிவகார்த்திகேயன் நடிப்பு குழந்தைகளை மிகவும் கவர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ரெமோ’. இப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் லாரன்ஸ் நடத்திவரும் அறக்கட்டளையில் பயிலும் குழந்தைகளுக்கு இப்படத்தை பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்துள்ளனர். காஞ்சிபுரம் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றத்தின் சார்பில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. படம் பார்த்த குழந்தைகள் அனைவரும் சிவகார்த்திகேயனின் நடிப்பை விரும்பி ரசித்ததாக தெரிவித்தனர். இப்படத்தில் ...
Read More »அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது ஆட்டத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி
அவுஸ்ரேலியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அவுஸ்ரேலியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் நேற்று நடந்தது. தொடரை ஏற்கனவே வென்று விட்டதால் தென்ஆப்பிரிக்க அணியில் ஸ்டெயின், ரபடா, இம்ரான் தாஹிருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த அவுஸ்ரேலிய அணி 36.4 ஓவர்களில் 167 ரன்களில் சுருண்டது. மிட்செல் மார்ஷ் (50 ரன்), மேத்யூ வேட் (52 ரன்), டிரைமைன் (23 ரன்), ...
Read More »விடுதலைப் போராட்டத்தில் தமிழீழப் பெண்கள்!!!
எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை – 2ஆம் லெப். மாலதி 28 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள். பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள்.நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை ...
Read More »கப்டன் பதவியில் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 சதம் அடித்துள்ளார்
நியூசிலாந்துக்கு எதிராக கேப்டன் பதவியில் 6-வது சதத்தை (103 ரன்) பதிவு செய்தார். அதாவது கப்டன் பதவியில் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 சதமும், இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்துக்கு எதிராக தலா ஒரு சதமும் அடித்துள்ளார். 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய பயணத்தின் போது டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றார். இதை தொடர்ந்து வீராட்கோலி டெஸ்ட் கப்டன் பொறுப்பை ஏற்றார். நியூசிலாந்துக்கு எதிராக நேற்று தொடங்கிய 3-வது டெஸ்டில் வீராட் கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 48-வது டெஸ்டில் ...
Read More »‘மாவீரன் கிட்டு’ படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் – சுசீந்திரன்
‘மாவீரன் கிட்டு’ படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன் என்று இயக்குநர் சுசீந்திரன் குறிப்பிட்டார். விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி, ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிக்க சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மாவீரன் கிட்டு’. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு காசி விஸ்வநாதன் எடிட்டிங் பணிகள் கவனித்து வருகிறார். சந்திரசாமி, தாய் சரவணன் மற்றும் ராஜீவன் மூவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். இப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியீட்டு விழா லயோலா கல்லூரியில் ...
Read More »ஆப்பிள் வாட்ச் 2
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் தனது புதிய தயாரிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தும். இந்த வருடம் ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7பிளஸ் போன்களை அறிமுகப்படுத்தியது. இதனுடன் இரண்டாம் தலைமுறை ஆப்பிள் வாட்சுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வை-பை, புளூடூத் என அனைத்து வசதிகளும் இந்த ஸ்மார்ட் வாட்சில் உள்ளன. மேலும் தண்ணீர் உள்புகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிபிஎஸ் வசதி உள்ளது. நாம் பயணம் மேற்கொள்ளும் சாலையில் எவ்வளவு டிராபிக் இருக்கிறது என்பதையும் தெரிவிக்கிறது.
Read More »2017 வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதி!
அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் அடுத்த மாதம் 10ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அரச வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2017ஆம் ஆண்டில் 1,819 billion ரூபா, (1,819,544,000,000 ரூபா) மொத்த செலவினம் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் கடன் வரம்பு, 1,489 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பாதுகாப்பு செலவினங்களுக்கான ஒதுக்கீடு சுமார் 284 பில்லியன் ரூபாவாக ...
Read More »