நியூசிலாந்துக்கு எதிராக கேப்டன் பதவியில் 6-வது சதத்தை (103 ரன்) பதிவு செய்தார். அதாவது கப்டன் பதவியில் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 சதமும், இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்துக்கு எதிராக தலா ஒரு சதமும் அடித்துள்ளார்.
2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய பயணத்தின் போது டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றார். இதை தொடர்ந்து வீராட்கோலி டெஸ்ட் கப்டன் பொறுப்பை ஏற்றார்.
நியூசிலாந்துக்கு எதிராக நேற்று தொடங்கிய 3-வது டெஸ்டில் வீராட் கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 48-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 13-வது செஞ்சுரியாகும். கப்டன் பதவியில் 6-வது சதத்தை (26 இன்னிங்ஸ்) எடுத்தார். இதன் மூலம் கங்குலி, டோனியை முந்தினார். இருவரும் கப்டன் பதவியில் தலா 5 செஞ்சுரி அடித்து இருந்தனர்.
இந்தியகப்டன்களில் டெஸ்டில் அதிக சதம் அடித்தவர்களில் வீராட்கோலி 4-வது இடத்தில் உள்ளார், கவாஸ்கர், அசாருதீன், தெண்டுல்கர் ஆகியோருக்கு அடுத்தப்படியாக உள்ளார்.
கப்டன் பதவியில் 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டு டெஸ்டில் முதல் சதத்தை (115 ரன்) எடுத்தார். 2-வது இன்னிங்சிலும் செஞ்சுரி (141 ரன்) எடுத்தார். கேப்டன் பொறுப்பில் முதல் டெஸ்டிலேயே இரண்டு சதத்தை அடித்து முத்திரை பதித்தார். அதை தொடர்ந்து 2015 ஜனவரியில் சிட்னி டெஸ்டில் 147 ரன்னும், 2015 ஆகஸ்டு மாதம் இலங்கைக்கு எதிரான காலே டெஸ்டில் 103 ரன்னும், கடந்த ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 200 ரன்னும் எடுத்தார்.
தற்போது நியூசிலாந்துக்கு எதிராக கேப்டன் பதவியில் 6-வது சதத்தை (103 ரன்) பதிவு செய்தார். அதாவது கேப்டன் பதவியில் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 சதமும், இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்துக்கு எதிராக தலா ஒரு சதமும் அடித்துள்ளார்.