வட மாகாணத்தில் விரைவில் மேலும் 4 நியதிச் சட்டங்கள் நிறைவேறவுள்ளதாக வட மாகாண இறைவரித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பிரகாரம் வட மாகாணத்திற்குட்பட்ட கனிப் பொருட்களிற்கான வரிக்கான ஏற்பாடுகள் இடம்மெறுவதோடு அடகு பிடிப்போர் அனுமதிக்கான வரி விதிப்பிற்கும் வட மாகாண இறைவரித் திணைக்களம் தயாராகிவருகின்றதுடன் வியாபார பெயர்ப் பதிவுக் கட்டணம் என்பவற்றோடு மருந்து மற்றும் இரசாயன விநியோகம் மீதான வரிகளிற்கான ஏற்பாட்டினையும் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த வரிகள் ஏற்கனவே நாட்டின் ஏனைய மாகாணங்கள் சில வற்றில் நடைமுறையில் உள்ளது இதன் பிரகாரம் விரைவில் வடக்கிலும் அதற்கான நியதிச் சட்டங்கள் உருவாக்கப்பட்டு குறித்த வரிகள் அறவிடப்படவுள்ளது.
இதன் பிரகாரம் குறித்த வரிகளும் வடக்கில் அறவிடப்படும் சந்தர்ப்பங்களில் வடக்கு மாகாண சபையின் உள்ளூர் வருமானங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 2015ம் ஆண்டில் வட மாகாண சபையின் இறைவரித் திணைக்களத்திற்கு கிடைத்த வரியானது 219.4 மில்லியன் ரூபாவாக இருந்தபோதிலும் அது 2016ம் ஆண்டின் செப்ரெம்பர் மாதம் வரைக்கும் 540 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளதாகவும் இறைவரித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.