‘மாவீரன் கிட்டு’ படத்­துக்கு தேசிய விரு­து கிடைக்கு­ம் – சுசீந்­திரன்

‘மாவீரன் கிட்டு’ படத்­துக்­காக எனக்கு தேசிய விருது கிடைக்கும் என நான் உறு­தி­யாக நம்­பு­கிறேன் என்று இயக்­குநர் சுசீந்­திரன் குறிப்­பிட்டார். விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்­திபன், சூரி, ஹரீஷ் உத்­தமன் உள்­ளிட்ட பலர் நடிக்க சுசீந்­திரன் இயக்­கத்தில் உரு­வாகி இருக்கும் படம் ‘மாவீரன் கிட்டு’.

இமான் இசை­ய­மைத்­தி­ருக்கும் இப்­ப­டத்­துக்கு காசி விஸ்­வ­நாதன் எடிட்டிங் பணிகள் கவ­னித்து வரு­கிறார். சந்­தி­ர­சாமி, தாய் சர­வணன் மற்றும் ராஜீவன் மூவரும் இணைந்து தயா­ரித்து இருக்­கி­றார்கள்.

 

இப்­ப­டத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளி­யீட்டு விழா லயோலா கல்­லூ­ரியில் நடை­பெற்­றது.’மாவீரன் கிட்டு’ பெர்ஸ்ட் லுக் போஸ்­டரை சமுத்­தி­ர­கனி வெளி­யிட, டீஸரை இயக்­குநர் ரஞ்சித் வெளி­யிட்டார்.இவ்­வி­ழாவில் சுசீந்­திரன் பேசி­யது, “நான் இயக்கி , தயா­ரித்த 2 திரைப்­ப­டங்­களின் பெர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர்­களை இங்கு தான் வெளி­யிட்டேன்.அதை தொடர்ந்து இப்­போது மீண்டும் நான் தயா­ரித்து இயக்­கி­யுள்ள ‘மாவீரன் கிட்டு’ படத்தின் டீஸரை இங்கு வைத்து வெளி­யி­டு­கிறேன்.எனக்கு மகிழ்ச்­சி­யாக உள்­ளது. ஏனென்றால் எனக்கு லயோலா கல்­லூரி மிகவும் பிடித்த இடம். முதலில் என்­னு­டைய தந்­தைக்கு நன்றி கூற வேண்டும்.ஏனென்றால், அவர் மூல­மாக தான் இப்­ப­டத்தின் தயா­ரிப்­பாளர் சந்­தி­ர­சாமி எனக்கு நண்­ப­ரானார்.

‘அழ­கர்­சா­மியின் குதிரை’ படத்­துக்­காக எனக்கு தேசிய விருது கிடைத்­தது. அதே போல் ‘மாவீரன் கிட்டு’ படத்­துக்­காக எனக்கு தேசிய விருது கிடைக்கும் என நான் உறு­தி­யாக நம்­பு­கிறேன்” என்று தெரி­வித்தார்.இயக்­குநர் பா.ரஞ்சித் பேசும் போது, “இப்­ப­டத்தின் டீஸரை பார்க்கும் போது சமூ­கத்­துக்கு தேவை­யான முக்­கி­ய­மான ஒரு படைப்பை இயக்­குநர் சுசீந்­திரன் இயக்­கி­யுள்ளார் என்­பது தெரி­கி­றது.

 

இல்­லா­த­வர்கள் ஒரு விட­யத்­துக்­காக போராடும் போது தான் அது புரட்­சி­யாக மாறு­கி­றது. இப்­ப­டத்தை பார்க்கும் போது நாயகன் ஏதோ ஒரு முக்கிய சமூக பிரச்சினைக்காக போராடுவது போல் தோன்றுகிறது” என்று தெரிவித்தார்.