குமரன்

கூகுளின் மின்னஞ்சல் சேவையில் புதிய பாதுகாப்பு!

கூகுளின் மின்னஞ்சல் சேவையில் ஜாவாஸ்க்ரிப்ட் அட்டாச்மென்ட்களை தடுக்க போவதாக கூகுள் குறிப்பிட்டுள்ளது. இந்த நடவடிக்கை அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் ஜாவாஸ்க்ரிப்ட் அட்டாச்மென்ட்களை (JavaScript attachment) தடுத்து நிறுத்த போவதாக ஜிமெயில் தெரிவித்துள்ளது. மால்வேர் தாக்குதல்களை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூகுள் வலைபக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பிப்ரவரி 13, 2017 முதல் ஜிமெயிலில் .js தரவுகளை பரிமாற்றம் செய்ய முடியாது. தற்சமயம் .js தரவுகள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே .exe, .msc, மற்றும் .bat ...

Read More »

பணத்தை விட ரசிகர்களே முக்கியம்

பணத்தை விட ரசிகர்களை சம்பாதிப்பதே முக்கியம் என்று நடிகை ஹன்சிகா கூறியுள்ளார். மஞ்சு விஷ்ணு ஜோடியாக ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஹன்சிகா, ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:- “தெலுங்கு படங்களில் ரொம்ப நாட்கள் நடிக்காமல் இருந்தது ஏன்? என்று கேட்கிறார்கள். தமிழில் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வந்ததால் அங்கு ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டு இருந்தேன். இதனால் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. இப்போது மஞ்சு விஷ்ணுவுடன் நடிக்கும் தெலுங்கு படம் நல்ல கதை. வாய்ப்புகள், போட்டி, மார்க்கெட் இவற்றிலெல்லாம் எனக்கு ...

Read More »

5 மணி நேரம் போராடி போட்டிக்குள் நுழைந்தார் நடால்

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் 4 மணி நேரம் 56 நிமிடங்கள் போராடி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார் நடால். அவுஸ்ரேலிய ஓபன் டென்னிசின் 2-வது அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 9-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால், 15-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொண்டார். முதல் செட்டை நடால் 6-3 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் டிமிட்ரோ ஆக்ரோஷமான விளையாடினார். இதனால் 2-வது செட்டை 7-5 எனக் கைப்பற்றினார். 3-வது செட்டில் இருவரும் ...

Read More »

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – மகுடம் யாருக்கு?

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் சகோதரிகள் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், வீனஸ் வில்லியம்சும் மோதுகிறார்கள். அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் இன்று ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறுகிறது. மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் சகோதரிகள் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், வீனஸ் வில்லியம்சும் மோதுகிறார்கள். இருவரும் இதற்கு முன்பு கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியில் சந்தித்த 8 ஆட்டங்களில் 6-ல் செரீனாவே வென்று ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார். அக்கா வீனசை விட தங்கை செரீனா தான் தற்போது வலுவான வீராங்கனையாக திகழ்கிறார். ஆனாலும் 36 ...

Read More »

இந்திய வம்சாவளியினருக்கு அவுஸ்ரேலிய அரசின் மிக உயரிய விருது

அவுஸ்ரேலியா நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினர் மூன்று பேருக்கு அந்நாட்டு அரசின் மிக உயரிய விருது வழங்கப்படுகிறது. அவுஸ்ரேலிய நாட்டில் சிறப்பான முறையில் சமூகத்துக்கு தொண்டாற்றிவரும் பொதுமக்களுக்கு ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற விருதுப் பதக்கம் அளிக்கப்படுகிறது. அவுஸ்ரேலியா நாட்டின் தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் 2017-ம் ஆண்டுக்கான ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற விருதுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த மூன்று பேர் தேர்வாகியுள்ளனர். மருத்துவ துறையில் சிறப்பான சேவை ஆற்றியமைக்காக புருஷோத்தம் சவ்ரிக்கார், நரம்பியல் கதிர்வீச்சு, கல்வித்துறை மற்றும் மருத்துவம்சார்ந்த பிறதுறைகளில் ...

Read More »

நாவற்குழி சிங்கள குடியேற்றத்திற்கு மாவை அனுமதி!

சர்ச்சைக்குரிய நாவற்குழி சிங்கள குடியேற்றத்திட்டத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள சிங்கள குடும்பங்களிற்கு வீடுகளை ஒதுக்கி வழங்க மாவை சேனாதிராசா சம்மதித்திருந்தமை அம்பலமாகியுள்ளது. தேசிய வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகள் இதனை அம்பலப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே அங்கு குடியமர்ந்துள்ள 200 இற்கும் அதிகமான தமிழ் குடும்பங்கள் வீடுகளோ காணிகளோ இல்லாதுள்ள நிலையில் அவர்களிற்கு வீடு காணி வழங்குவதானால் சிங்கள குடியேற்றவாசிகளிற்கும் அவை வழங்கப்பட வேண்டுமென்ற நிபந்தனை தென்னிலங்கை அரசியல்வாதிகளால் தேசிய வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகளிற்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாவை சேனாதிராசா இதற்கு சம்மதித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் அங்கு குடியமர்த்தப்பட்டுள்ள சிங்கள குடும்பங்களில் ...

Read More »

வவுனியா உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக அவுஸ்ரேலியாவில் போராட்டம்!

மூன்று அம்ச கோரிக்கையினை முன்வைத்து நான்காவது நாளாக உண்ணா நோன்பிருந்து போராடிவரும் உறவுகளுடன் கைகோர்க்கும் வகையில்நேற்று(26) பெர்த் நகரில் அமைந்திருக்கும் இலங்கை துணை தூதரகத்திற்கு முன்னாள் அமைதி வழி போராட்டம் ஒன்று மேற்கு அவுஸ்ரேலியா தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டது.

Read More »

ஐபால் ஸ்லைடு நிம்பிலே 4GF குரல் அழைப்பு டேப்லட்

ஐபால் நிறுவனம் ஸ்லைடு தொடரை விரிவாக்கம் செய்து அதன் புதிய ஸ்லைடு நிம்பிலே 4GF என்ற குரல் அழைப்பு டேப்லட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.9,999 விலையுடைய இந்த ஐபால் ஸ்லைடு நிம்பிலே 4GF குரல் அழைப்பு டேப்லட் 4ஜி VoLTE ஆதரவுடன் வருகிறது. இந்த டேப்லட் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து முன்னணி சில்லறை விற்பனையாளர்கள் வழியாக கிடைக்கும். டூயல் சிம் ஆதரவு கொண்ட ஐபால் ஸ்லைடு நிம்பிலே 4GF டேப்லட்டில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இயங்குகிறது. ஐபால் ஸ்லைடு நிம்பிலே 4GF டேப்லட்டில் ...

Read More »

நியூசிலாந்து சுற்றுப்பயணம்: அவுஸ்ரேலிய கப்டன் சுமித் விலகல்

அவுஸ்ரேலிய கப்டன் ஸ்டீவன் சுமித் காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் வருகிற 30-ந்திகதி ஆக்லாந்தில் நடக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து அவுஸ்ரேலிய கப்டன் ஸ்டீவன் சுமித் விலகி உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியின் போது ஸ்டீவன் சுமித் கணுக்காலில் காயம் அடைந்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாத ...

Read More »

விஜய் ஆண்டனி நடிக்கும் `எமன்’

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘சைத்தான்’ படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக  விஜய் ஆண்டனி தற்போது ‘எமன்’ படத்தில் நடித்து வருகிறார். `நான்’ படத்திற்கு பின்னர் ஜீவா சங்கர் மீண்டும் விஜய்  ஆண்டனியை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்து வருகிறார். மேலும் முக்கிய  கதாபாத்திரத்தில் தியாகராஜன், சங்கிலி முருகன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில்,  `எமன்’ படம் ...

Read More »