புதிதாக உருவாக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதை விடவும் ஆபத்தானது என்று தெரிவித்துள்ளது முன்னிலை சோசலிசக் கட்சி. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது அந்தக் கட்சியின் பேச்சாளர் புபுது ஜகொட இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்தாவது- நாட்டின் பயங்கரவாத செயல்களுக்கு எதிராகவும், பயங்கரவாதத்துடன் இணைந்த செயற்பாடுகளை தடுப்பதற்காகவும், 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதைப் பார்க்கிலும் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது நீதிக்கு எதிரானது. பயங்கரவாத தடைச்சட்டத்தை தடை செய்தல் ...
Read More »குமரன்
“றோ” குறித்து வாய்த்திறந்தார் மஹிந்த!
இந்தியப் புலனாய்வு அமைப்பான “றோ” தொடர்பில், கருத்துமோதல்களில் இலங்கை அரசியலில் சூடுபிடித்துள்ள நிலையில், “றோ” தொடர்பில், முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ கருத்துரைத்துள்ளார். “இந்தியாவின் “றோ” புலனாய்வுச் சேவையுடன் தொடர்புடைய அமைச்சர்கள் இருப்பார்களாயின், அவர்களின் பெயர்களை வெளியிடவேண்டுமென, மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார். தங்கல்ல, ஹேனகடுவ விஹாரைக்கு, நேற்று (24) வருகை தந்திருந்த மஹிந்த ராஜபக்ஷ, மத வழிபாடுகளை நிறைவு செய்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “இந்த அரசாங்கத்துக்கு எந்நாளும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. “றோ” புலனாய்வுச் ...
Read More »அவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 33 புகலிடக் கோரிக்கையாளரின் படகுகள்!
கடந்த 5 ஆண்டுகளில் 33 படகுகள் கடலில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டது அல்லது திருப்பியனுப்பப்பட்டதாக தி அவுஸ்திரேலியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் குறித்த படகுகள் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதில் 800 புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணம் செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் நேசநாடுகளின் கூட்டு நடவடிக்கை மூலம் 78 ஆட்கடத்தல் நடவடிக்கைகள் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 2525 பேர் அவுஸ்திரேலியாவுக்கு படகுப்பயணம் ...
Read More »சுசி கணேசனால் நானும் சங்கடங்களை சந்தித்தேன் : அமலாபால்
இயக்குநர் சுசி கணேசனால் தானும் சில தர்ம சங்கடங்களை சந்தித்தேன் என நடிகை அமலாபால் கூறியுள்ளார். மீ டூ விவகாரத்தால் தினம் ஒரு திரைப்பிரபலம் சிக்கி வருகின்றனர். வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி, தமிழ் சினிமாவில் ஆரம்பித்து வைத்தார் பாடகி சின்மயி. அவர் மீது பல பெண்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர் இந்நிலையில், பெண் இயக்குநர் லீனா மணிமேகலை, தான் தொகுப்பாளினியாக இருந்தபோது, இயக்குநர் சுசி கணேசனால் காரில் வைத்து பாலியல் தொல்லைக்கு ஆளானதாக குற்றம் சாட்டினார். இதை, சுசி கணேசன் ...
Read More »இயற்கை முறையில் பிறந்தநாள் கொண்டாடிய கோவை சிறுமி!
கோவையில், எல்.கே.ஜி படிக்கும் சிறுமி, சக பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து இயற்கை பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.கோவையில், எல்.கே.ஜி படிக்கும் சிறுமி, சக பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து இயற்கை பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். கோவையில் இயங்கி வரும், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பில் உறுப்பினராக இருப்பவர் சுரேஷ். இவருடைய மகள் சான்வி தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். இந்த நிலையில், சான்வியின் பிறந்தநாளை இயற்கை முறையில் கொண்டாடும் விதமாக, சுரேஷின் வீட்டில் செய்த நிலக்கடலை உருண்டை, ஒரு துணிப்பை மற்றும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டியதன் ...
Read More »சிறப்புக் கட்டுரை: மீ டூ: ஊடக கர்வம் உடைகிற தருணம்!
ஊடகத் துறையில் இயங்கிக்கொண்டிருப்பதில் மனநிறைவு, பெருமை என்பதையெல்லாம் தாண்டி ஒரு கர்வம் கொண்டவன் நான். யாரையும் கேள்வி கேட்க முடிகிற வாய்ப்பால் வளர்ந்த கர்வம் அல்ல, சமுதாய மாற்றத்தில் ஒரு மையமான பாத்திரம் வகிக்கிற ஊடகத்தில் ஒரு சிறு புள்ளியாகவேனும் இருக்கிறோம் என்ற உணர்வால் ஏற்பட்ட கர்வம் அது. அந்தக் கர்வம் தகர்ந்து கூசிப்போய் நிற்கிற தருணங்களும் ஏற்படுவதுண்டு. ‘மீ டூ’ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காகச் சென்னையில் தென்னிந்திய திரைப்பட பெண்கள் சங்கம் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அத்தகைய தருணங்களில் ஒன்று. அறம் ...
Read More »விட்டுக்கொடுப்பு செய்வதற்கு இந்த போராட்டத்தில் பங்குகொண்டிருக்கும் எவருக்கும் உரிமை இல்லை!
வட மாகாண முதலமைச்சராக எனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த நான் எனது முதலமைச்சர் பதவிக்காலம் பூர்த்தியாகிவரும் நிலையில் எனது எதிர்கால செயற்பாடுகள் எப்படி இருக்கப்போகின்றன என்பது தொடர்பாக தெளிவுபடுத்தும் நோக்கத்தில் தமிழ் மக்கள் பேரவையினூடாக உங்கள் அனைவரையும் இன்று சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். கடும் சவால்கள் நிறைந்திருந்த கடந்த 5 வருட காலத்தில் என்னுடன் பணியாற்றிய சக மாகாண சபை உறுப்பினர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், எனக்கு ஆதரவு நல்கிய நண்பர்கள், தோளோடு தோள் நின்று சேவையாற்றிய தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக ...
Read More »கொள்கை அடிப்படையில் ஓரணியில் திரள வேண்டும்!
தமிழ் மக்களின் தனித்துவத்தின்பால் பற்றுள்ளவர்கள் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து, மனித உரிமைக் கோட்பாடுகளை மனதில் நிறுத்தி, கொள்கை அடிப்படையில் ஓரணியில் திரள வேண்டும். காலாதி காலமாக நாம் வலியுறுத்தி வந்த கொள்கைகளின் அடிப்படையில் பிரிக்கப்படாத வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றை அடைவதற்கு நீங்கள் யாவரும் முன்வரவேண்டும் என்று அழைக்கின்றேன். அது முடியாது என்று முணுமுணுக்கும் முக்கியஸ்தர்களின் முனகல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அறைகூவல் விடுத்துள்ளார் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். முதலாவது வடமாகாணசபையின் இறுதி அமர்வான நேற்று(23) அவர் ஆற்றிய ...
Read More »தமிழ் மக்கள் பேரவையின் மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில்
தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இன்று (24.10.18) காலை ஆரம்பமாகியது. இந்நிகழ்வானது பேரவையின் இணைத்தலைவர் நீதியரசர் க.வி விக்னேஸ்வரன் தலமையில் கூட்டம் ஆரம்பமானது. இதன் போது அதிகளவான மக்கள் கலந்து கொண்டனர்.
Read More »ஒரு ரூபாய் இழப்பீடு கோரி இயக்குநர் சுசிகணேசன் மனு தாக்கல்!
இயக்குநர் சுசிகணேசன் மீது லீனா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டை வைத்த நிலையில், அதில் உண்மை இல்லை என்பதை நிரூபிக்க ஒரு ரூபாய் இழப்பீடு கோரி சுசிகணேசன் நீதிமன்ற மனு தாக்கல் செய்துள்ளார். ‘மீ டூ’ மூலம் பிரபல நடிகைகள், பாடகிகள் உள்ளிட்ட பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை, பிரபல இயக்குநர் சுசிகணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டை சுசிகணேசன் மறுத்து உள்ளார். மேலும், ...
Read More »