ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளித்த நபரை அவுஸ்ரேலிய காவல் துறை நேற்று (28) கைது செய்தனர். சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், தற்போது ஏவுகணை தொழில் நுட்பத்தில் மிகவும் முன்னேறி வருகின்றனர். இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளித்ததாக அடையாளம் தெரியாத நபர் ஒருவரை அவுஸ்ரேலியா காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். 42 வயதான அந்த நபர், ஏவுகணைகள் கண்டறிவது எப்படி மற்றும் சொந்தமாக ஏவுகணைகள் உருவாக்குவது எப்படி? என ...
Read More »குமரன்
ஒரே மூச்சில் 104 செயற்கைக் கோள்கள்!
ஒரே மூச்சில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய இந்தியாவின் அசுர சாதனையை கண்டு டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் உளவுப்படை அதிர்ச்சியில் வாய் பிளந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆசியா கண்டத்தின் அசைக்க முடியாத சக்தியாக உருவாகியுள்ள இந்தியா விண்வெளி ஆய்வில் பல புதிய சாதனைகளை அடுத்தடுத்து படைத்து வருகிறது. 2008-ல் சந்திரமண்டலத்தில் கால்பதித்தது, ஆசிய நாடுகளில் முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றது இந்தியா, 2013-ல் செவ்வாய் கிரகத்திற்கு ‘மங்கல்யான்’ என்ற ஆளில்லா விண்கலத்தை அனுப்பியது. அடுத்தடுத்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ...
Read More »பெண்களின் பாதுகாப்பாக புதிய பிரச்சாரம்!
சமீபகாலமாக பெண்களுக்கு எதிராக நடந்துவரும் குற்றங்களிலிருந்து அவர்களை காப்பதற்காக நடிகை வரலட்சுமி சரத்குமார் புதிய பிரச்சாரத்தை கையிலெடுத்திருக்கிறார். நடிகை பாவனா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் தற்போது நாடெங்கும் பெரிய அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. பாவான தைரியமாக இந்த விஷயத்தை வெளியில் சொன்னதையடுத்து மேலும் ஒரு சில நடிகைகளும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை வெளியில் சொல்ல ஆரம்பித்துள்ளனர். அந்த வரிசையில் நடிகை வரலட்சுமியும், தானும் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக சொல்லி அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தினார். வரலட்சுமியின் பதிவு செய்த இந்த டுவிட்டருக்கு பெண்கள் மத்தியில் ...
Read More »ஈழத்துப்பாடகர் சாந்தன் வணக்க நிகழ்வுகள் – சிட்னி, மெல்பேர்ண்
தாயகவிடுதலைக்கான போராட்டத்தில் தனது குரலால் விடுதலை எழுச்சியை மக்களிடத்தில் காவிச்சென்று விடுதலைப் பணியாற்றிய சாந்தன் அவர்களின் இழப்பு துயரமானது. பல நூற்றுக்கணக்கான விடுதலை எழுச்சிப் பாடல்களை பாடியும் தனது இரு புதல்வர்களை மாவீரர்களாக மண்ணின் விடுதலைக்கு அர்ப்பணித்தும் உறுதியாக போரின் இறுதிவரை ஓய்வில்லாமல் விடுதலைக்காக உழைத்திருந்தார். போர் முடிவடைந்த கடந்த எட்டு ஆண்டுகளில் பல போராளிகளை பல செயற்பாட்டாளர்களை நோய் என்ற காரணத்தோடு மரணித்துப்போய்க்கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். பாரிய போர் அவலத்தைச் சுமந்தவர்களின் வாழ்வு தொடர்ந்தும் கவலைதோய்ந்த கணங்களாகவே நகர்ந்துகொண்டிருக்கின்றது. தனது குரலால் எம்தேசத்தின் ...
Read More »அக்கினியில் சங்கமமானது புரட்சி பாடகரின் குரல்!
ஆயிரக் கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் ஈழத்தின் புரட்சிப் பாடகர் எஸ்.ஜி. சாந்தனின் பூதஉடல் இன்று மாலை இரணைமடுவில் அக்கினியுடன் சங்கமமானது. மறைந்த ஈழத்து எழுச்சிப் பாடகன் எஸ்.ஜி சாந்தன் குணரட்னம் சாந்தலிங்கத்தின் இறுதி நிகழ்வு இன்று(28) செவ்வாய்க்கிழமை அவரது கிளிநொச்சி விவேகானந்தநகர் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் கரைச்சி பிரதேச செயலக வளாகத்தில் பொது அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது. இதனையடுத்து பெரும் திரளான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் கிளிநொச்சி இரணைமடு பொது மயானத்தில் மாலை தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி நிகழ்வில் சாந்தனோடு பணியாற்றி ...
Read More »எல்நினோ தாக்கம் பற்றி அவுஸ்ரேலியாவின் அதிர்ச்சி தகவல்!
காலநிலை மாற்றம் காரணமாக உருவாகும் எல் நினோவின் தாக்கமானது, இவ்வருடம் 50 சதவீதத்தால் அதிகரிக்குமென, அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. எல்நினோ எனப்படும் காலநிலை தாக்கத்தால், மழை காலத்தில் அளவுக்கு அதிகமான மழை பொழிவதுடன், கோடை காலத்தில் அதிகளவான வெப்ப தாக்கம் இருக்குமெனவும், அதனால் அளவுகடந்த வறட்சி, மழை வெள்ளம் ஏற்படுவதற்கு சாதகமாக அமையுமென அவுஸ்ரேலியாவின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் கடந்த காலங்களை விட 2017 ஆம் ஆண்டில் எல் நினோவின் தாக்கம் தொடர்பாக குறித்த ...
Read More »மொழிகளின் ஒலி..
உலகில் பேசப்படும் ஒவ்வொரு மொழியின் ஒலிக்குறிப்பைக் கேட்டறிய விருப்பமா? எனில் ‘லோக்கலிங்குவல்’ இணையதளம் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. இந்தத் தளம் உலக வரைபடத்துடன் வரவேற்கிறது. வரைபடத்தில் உள்ள எந்த நாட்டின் மீது கிளிக் செய்தாலும், அந்த நாட்டில் பேசப்படும் மொழியின் ஒலிக்குறிப்பைக் கேட்கலாம். அந்த நாட்டுக்கான பொதுவான மொழியோடு, அங்குள்ள பல்வேறு பகுதிகளில் பேசப்படும் மற்ற மொழிகளுக்கான ஒலிக்குறிப்புகளையும் கேட்கலாம். இந்தியாவுக்கான பகுதியை கிளிக் செய்தால் இந்தியில் தொடங்கி வரிசையாக தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகள் பட்டியலிடப்படுகின்றன. ஒவ்வொரு மொழியிலும் இடம்பெற்றுள்ள வார்த்தைகளின் ...
Read More »தி ஜங்கிள் புங் படத்துக்கு ஒஸ்கார் விருது
சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஒஸ்கார் விருது தி ஜங்கிள் புக் படத்துக்கு கிடைத்துள்ளது. 89-வது ஒஸ்கார் விருது வழங்கு விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கார் விருது தி ஜங்கிள் புக் படத்துக்கு கிடைத்துள்ளது. அதேபோல், சிறந்த அனிமேஷன் விருது ஜூடோபியா படத்துக்கு கிடைத்துள்ளது. தி லையன் கிங் படத்தில் நடித்த சிறுவர் நட்சத்திரம் சுன்னி பவர் ஒஸ்கர் விருதினை தட்டிச் சென்றுள்ளார். மேலும் சில விருதுகள் விவரம்:- சிறந்த துணை நடிகர் – ...
Read More »07 ஆண்டுகளுக்கு திரையில் இணையும் காதல் ஜோடி!
பாலிவுட்டில் பிரபலமான காதல் ஜோடி அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் இருவரும் 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறந்த காதல் தம்பதிகளாக விளங்கும் அபிஷேக்-ஐஸ்வர்யா ராய் ஜோடி, ‘குரு’, ‘ராவண்’, ‘குச் நா கஹோ’ உள்ளிட்ட படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். தற்போது இவர்கள் ஜோடியில் ‘குலாப் ஜாமூன்’ திரைப்படம் உருவாகிவிருக்கிறது. இப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் இயக்கவிருக்கிறார். எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் இயக்குனர் தரப்பில் ...
Read More »மூடப்பட்ட எல்லைக் கதவுகள்: அகதிகளுக்கு இடமில்லை! -அவுஸ்ரேலியா
எல்லைக் கதவுகள் மூடப்பட்டே உள்ளதால், அகதிகளுக்கு இடமில்லை என்று அவுஸ்ரேலிய பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஓபாமா ஆட்சியில் அவுஸ்ரேலியா -அமெரிக்கா இடையே அகதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ஒருமுறை மட்டும் அமெரிக்காவில் அகதிகளை குடியமர்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவுஸ்ரேலியா – அமெரிக்கா இடையே ஏற்பட்ட அகதிகள் மீள்குடியமர்த்தும் ஒப்பந்தம் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், அகதிகள் தொடர்பான கொள்கையை மீண்டும் அவுஸ்ரேலியா வெளிப்படுத்தியுள்ளது.
Read More »