இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன, தென்னாபிரிக்கா, அவுஸ்ரேலியா, பங்களாதேஷ், மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்தினார். இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாட்டு இடம்பெற்றது. 21 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்த இந்த மாநாட்டில் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டு உரையாற்றினார். இதன் பின்னர், சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் தென்னாபிரிக்க அதிபர் ...
Read More »குமரன்
ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்
சாதனை உயரத்தை எட்டி உள்ள மகளிர் சமுதாயத்திற்கு என்று ஒரு நாள் உலகெங்கும் ஒருங்கே கொண்டாடப்படுகிறது என்றால் அது தான் உலக மகளிர் தினம். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றது அந்த காலம். ஆனால் கல் உடைக்கும் வேலையில் இருந்து கணினி துறை வரை அனைத்து துறைகளிலும் இன்றைக்கு மைல்கல்லாக மகளிர் விளங்கும் அளவுக்கு சாதனை படைத்து உயர்ந்துள்ளனர் என்றால் மிகையில்லை. இவ்வாறு சாதனை உயரத்தை எட்டி உள்ள மகளிர் சமுதாயத்திற்கு என்று ஒரு நாள் உலகெங்கும் ஒருங்கே கொண்டாடப்படுகிறது என்றால் அது தான் ...
Read More »நடிகைகள் தற்காப்பு கலை பயில வேண்டும்: தன்ஷிகா
நடிகை தன்ஷிகா பிரபல சண்டை இயக்குனர் பாண்டியன் மாஸ்டரிடம் தற்காப்பு கலை பயின்றவர். சிலம்பமும் கற்றுக் கொண்டவர். தற்போது அவர் நடித்துள்ள விழித்திரு படம் வருகிற 10ந் தேதி வெளிவருகிறது. இதையட்டி அவர் அளித்த பேட்டி வருமாறு: விழித்திரு படம் ஒரு இரவில் நடக்கும் கதை. இதில் ஹீரோ, ஹீரோயின் என்று யாரும் இல்லை. எல்லோருமே கதை மாந்தர்கள்தான். படத்தில் நான்கு கதைகள் அதில் நான் வரும் கதையும் ஒன்று. என் கதையில் தம்பிராமய்யாவும், விதார்த்தும் உள்ளனர். டி.ராஜேந்தரின் ரசிகையாக நடித்திருக்கிறேன். அவருடன் ஆடியும் ...
Read More »அவுஸ்ரேலியா செல்லும் கனவு கடல் நடுவில் கலைந்து போகும்!
நீங்கள் அல்லது உங்கள் அன்புக்குரிய ஒருவர் அவுஸ்ரேலியாவுக்கு குடியேற வழியொன்றைத் தேடுகின்றீர்களா? அதற்காக அவர் தெரிவுசெய்திருப்பது வியாபாரிகளால் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் படகின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுசெல்வதாகக் கூறும் மோசடியையா? அப்படியாயின் நீங்கள் ஏமாற்றப்பட்டுள்ளீர்கள். இதுவரை அவர்களுடன் அவுஸ்ரேலியாவுக்கு படகில் சென்ற எவரும் அங்கு காலடி எடுத்து வைத்ததில்லை. மேலும் அவர்கள் உருவாக்கித்தரும் கனவுக் கோட்டை அந்த படகுப் பயணத்தில் இல்லை. நீங்கள் இலட்சக்கணக்கில் பணம் செலவழித்துஇ சொத்துக்களை அடகுவைத்து, ஊர் உலகிற்கு கடனாளியாகி அவுஸ்திரேலிய கனவின் பின் சென்றாலும் அதை ஒருநாளும் உங்களால் ...
Read More »அவுஸ்ரேலியாவில் இலங்கையர் படுகொலை: 3 நேபாளிகள் கைது
தெற்கு அவுஸ்ரேலியாவில் இலங்கையர் ஒருவரை படுகொலை செய்ததாக நேபாள பிரஜைகள் மூவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் 44, 48 மற்றும் 34 வயதானவர்கள் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட அடிலெய்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. காவல் துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், 39 வயதான குறித்த இலங்கையரின் சடலத்தை கைப்பற்றியுள்ளனர். இதேவேளை, சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், எவரும் பிணை கோரி விண்ணப்பிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
Read More »உங்கள் நேரம் யாருக்கானது?
தாய்க்கு, மனைவிக்கு, மகளுக்கு, சகோதரிக்கு, ஒரு பெண்ணுக்கு இதுவரை நாம் எதைத் தந்திருக்கிறோம்? எதிர்பார்த்துக் காத்திருப்பவளோடு நேரம் செலவிடுகிறோமா? அடுப்புச் சூட்டில் வெந்து, அவள் நமக்காகத் தயாரிக்கும் உணவை மனதாரப் பாராட்டி இருக்கிறோமா, திறமைகளை வெளிப்படுத்தும்போது உற்சாகப்படுத்தியிருக்கிறோமா? நாள் முழுதும் நமக்காய் வீட்டில் உழைப்பவளின் வேலையில் பங்கெடுத்திருக்கிறோமா? அவளின் சின்னச்சின்ன ஆசைகளை உதாசீனப்படுத்தாமல் நிறைவேற்றி இருக்கிறோமா? கொஞ்சம் யோசியுங்கள். நினைவில் இல்லையென்றாலும் இந்தக்குறும்படம் அதை நியாபகப்படுத்திவிடும். கால்கள் தேயத்தேய, வலிமை குன்ற வாழ்க்கை முழுவதும் உழைத்துக் கொண்டே இருக்கும் இறைவிகளுக்கு இந்தப் படம் சமர்ப்பணமாகட்டும். ...
Read More »இணைய இசை அகராதி
இணையத்தில் இசை தொடர்பான இணையதளங்களும், சேவைகளும் அநேகம் உள்ளன. அதே போல புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்துகொள்ள உதவும் இணைய அகராதிகளும் நிறையவே இருக்கின்றன. இந்த இரண்டு அம்சங்களையும் ஒன்றாக இணைந்ததாக ‘ஆன்மியூஸிக் டிக் ஷனரி’ தளம் அமைந்துள்ளது. அதாவது இசைக்கான இணைய அகராதியாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான இணைய அகராதிகள் போலவே இதிலும் சொற்களுக்கான பொருளைத் தேடலாம். ஆனால், இசை தொடர்பான சொற்களை மட்டுமே இதில் தேட முடியும். இசைக் கருவி, இசையமைப்பாளர்கள் சார்ந்தும் தேட முடியும். இசையில் ஆர்வம் கொண்டவர்கள் அல்லது ...
Read More »ஊடகர் Trevor R. Grant அவர்கள் இன்று காலமானார்!
தமிழின ஆதரவாளரும் “Sri Lanka’s Secrets” என்ற நூலின் மூலம் சிங்கள இனவெறி அரசின் முகத்திரையைக் கிழித்தவரும் அவுஸ்திரெலியாவில் தனி மனிதனாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்தவரும் சிறந்த ஊடகவியலாளருமான திரு.Trevor R. Grant அவர்கள் இன்று (6)புற்று நோயால் சாவடைந்துள்ளார். ஒரு கிரிக்கெட் வீரரான இவர் பின்னர் ஒரு பத்திரிகையாளராக தனது வாழ்வைத் தொடங்கினார். சிறிது காலம் தனது தொழிலில் விலகியிருக்க வேண்டிய நிலையேற்பட்ட போது ஏதிலிகள் தங்கியிருந்த இடங்களுக்கு உதவிப் பொருட்களை எடுத்துச் செல்லும் பார ஊர்திச் சாரதியாகப் ...
Read More »அதிசயிக்க வைக்கும் அவுஸ்ரேலியா : சாகச சுற்றுலா போக ஆசையா?
சுற்றுலா தலங்களின் சொர்க்கபுரி அவுஸ்ரேலியா. தொழில்நுட்ப மிரட்டல், இயற்கையின் பேரெழில் என கலந்துகட்டியாக கண்டுகளிக்க ஏராளமான இடங்கள் உண்டு. சாகச விரும்பிகளுக்கு தீனியிடும் பல இடங்கள் இருப்பதுதான் இதன் சிறப்பம்சம். குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட் கோஸ்ட் கடலோர பிராந்தியம் அனைத்துவகை சாகச சுற்றுலாக்களின் மையமாக இருக்கிறது. சாகசங்களில் முதன்மையானது பலூனில் பறந்து ரசிக்கும் த்ரில்லான பயணம். கோல்ட் கோஸ்ட் ‘ஹாட் ஏர் பலூன்’ பயணம் புது அனுபவத்தை தரும். பல ஆண்டுகளாக மிகப் பாதுகாப்பும் நேர்த்தியுமாக இந்த பலூன் பயணங்களுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். ...
Read More »தயக்கத்தை வெல்ல ஒரு செயலி
‘ஸ்டெப்ஸ்’ எனும் பெயரில் ஐபோனுக்கான புதுமையான செயலி ஒன்று அறிமுகமாகி உள்ளது. இந்தச் செயலி சமூகத் தயக்கங்களை உடைத்தெறிய உதவுகிறது. அறிமுகம் இல்லாதவர்களுடன் பேசத் தயங்குவது, புதிய இடங்களுக்குச் செல்வது, நிராகரிப்புகளை எதிர்கொள்ள அஞ்சுவது என ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான சமூகச் சங்கடம் அல்லது தயக்கம் இருக்கலாம். கூட்டுக்குள் அடைந்து கிடக்காமல் தைரியமாக இத்தகைய சூழலை எதிர்கொள்வதே இந்தத் தயக்கங்களை வெல்ல ஏற்ற வழி எனச் சொல்லப்படுகிறது. இது வெளிப்படுத்திக்கொள்ளும் சிகிச்சை என அழைக்கப்படுகிறது. இந்தச் செயலி தயக்கங்களை வெல்ல வழி செய்யும் சிறிய ...
Read More »