குமரன்

கடும் மழையால் அவுஸ்ரேலியாவின் பயிற்சி ஆட்டம் ரத்து!

வங்காள தேசத்தில் கடும் மழை பெய்து வருவதால் அவுஸ்ரேலியா விளையாட இருந்த இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவுஸ்ரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்காள தேசம் சென்றுள்ளது. முதல் போட்டி 27-ந்திகதி தொடங்குகிறது. இதற்கு முன் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஆஸ்திரேலியா விரும்பியது. இதற்கு வங்காள தேச கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த போட்டி டாக்காவில் நாளை தொடங்குவதாக இருந்தது. தற்போது வங்காள தேசத்தில் கடும் மழை ...

Read More »

ஓவியா ஆர்மி: இலங்கை கலைஞர்களின் அசத்தல் பாடல்

பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியாவை ஆதரித்து இலங்கை கலைஞர்கள் உருவாக்கிய பாடல் ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை ஓவியா. அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கையினை சேர்ந்த கலைஞர்கள் இணைந்து பாடல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர். பிரேம் ராஜ் இசையமைப்பில் வெளிவந்துள்ள இந்தப் பாடலை யஜீவன், பிரசாதன் மற்றும் பிரேம்ராஜ் பாடியுள்ளனர். பாடலில் இடம்பெற்றுள்ள சொல்லிசையினை ரமேஸ்காந்த் மற்றும் எஸ்.ஜி.பிரபு பாடியுள்ளனர். பாடலின் வரிகளை பிரவீன் மற்றும் ...

Read More »

3 தமிழ் அரசியல் கைதிகள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில்!

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் இன்று காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். தமது வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று கோரியே, விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களான மூவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வவுனியா நீதிமன்றத்தில் தம் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை துரிதமாக விசாரிக்க வேண்டும் என்று கோரிய, இவர்கள் மூவரும் இன்று காலையில் இருந்து உணவைத் தவிர்த்து வருகின்றனர். அனுராதபுர சிறைச்சாலையில் 20 அரசியல் கைதிகள் தடுத்து ...

Read More »

விஜயதாச ராஜபக்ஷ இராஜினாமா செய்ய வேண்டாம் – தேரர்கள் குழு

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை, அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டாம் என தேரர்கள் குழுவினர் இன்று (21) வேண்டுகோள் விடுத்துள்ளனர். பௌத்த சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேரர்கள் அடங்கிய குழுவினர் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுக்கு இன்று காலை வருகை தந்திருந்தனர். அமைச்சரை சந்தித்து ஆசிர்வாதம் வழங்குவதற்காகவும் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் எனக் கோருவதற்காகவும் வருகை தந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அமைச்சர் அங்கு வருகை தராத காரணத்தினால் அதிகாரிகளை சந்தித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தொடர்ந்தும் ...

Read More »

அவுஸ்ரேலியப் பிரதமரின் அதிரடித் திட்டம்!

அவுஸ்ரேலியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியில் பொதுமக்களும் ஈடுபடும் வகையில் national security strategy – நாட்டின் பாதுகாப்புசெயல் திட்டமொன்றை பிரதமர் Malcolm Turnbull இன்று அறிமுகம் செய்தார். மெல்போர்ன் மற்றும் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா ஆகிய நகரங்களில் சமீபத்தில் வாகனத்தை பயன்படுத்தி பொதுமக்களின்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுபோன்ற தாக்குதல்களிலிருந்து பொதுமக்கள் தப்பிக்கும் வகையில், சாலை, கடை, சந்தை என்று பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாகனங்கள் நுழைய இயலாதவாறு சுவர்கள், தடைகள் ஏற்படுத்தும் வழிமுறைகளை இந்த புதிய செயல் திட்டம் விளக்குமென அவுஸ்ரேலிய ...

Read More »

குடல் இறக்கம், காது-மூக்கு-தொண்டை சத்திரசிகிட்சை ரோபோ!

‘ரோபோ’ எனப்படும் எந்திர மனிதனின் செயல்பாடுகள் பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது மனிதர்களின் உடலில் சத்திரசிகிட்சை செய்யும் வகையில் புதிதாக ‘ரோபோ’ தயாரிக்கப்பட்டுள்ளது. மிக சிறியதாக இருக்கும் இந்த ‘ரோபோ’வை இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். கேம்பிரிட்ஜ் பகுதியில் 100 விஞ்ஞானிகள் மற்றும் என்ஜினீயர்கள் இணைந்து இரவு-பகலாக அயராது பாடுபட்டு இதை வடிவமைத்துள்ளனர். இது மனித கைகள் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘எவர்சியஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை குடல் இறக்கம் சீரமைப்பு, கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட ஆபரேசன் செய்ய பயன்படுத்த முடியும். இந்த ...

Read More »

‘ஆளப்போறான் தமிழன் என்பதை ரசிகர்கள் மெய்யாக்க வேண்டும்’ – ஏ.ஆர் ரஹ்மான்

விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மெர்சல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமான் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பாடல் வரிகளை ரசிகர்கள் மெய்யாக்க வேண்டும் என பேசினார். விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். படத்தின் மீது அதீத எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில், படத்தில் இருந்து ஆளப்போறான் தமிழன், நீதானே நீதானே என்ற இரு பாடல் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் ...

Read More »

ஸ்மார்ட் கருவி

எமது வீடுகளில் ஏசி பயன்படுத்துவதால் ஏசி கட்டணம் அதிகமாகும் என்பது பலருக்கும் வருத்தமாக இருக்கும். இந்தக் குறையை போக்குவதற்கு புதிய கருவியை கண்டறிந்துள்ளனர். மிஸ்ட்பாக்ஸ் என்ற இந்தக் கருவி ஏசி மூலம் அதிகமாகும் உங்களது மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதம் குறைக்கும். இந்தக் கருவியை உங்களது ஏசியோடு பொருத்திக் கொள்ள வேண்டும். இந்தக் கருவியை அப்ளிகேஷன் மூலமாக ஸ்மார்போனோடு இணைத்துக் கொள்ளமுடியும். இந்தக் கருவி விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

Read More »

ஒரே சினிமா தான் இனி – விவேக் ஓபராய்

ஹாலிவுட், கோலிவுட், பாலிவுட் என்றெல்லாம் இனி இல்லை. ஒரே சினிமா தான் இனி என்று விவேகம் பத்திரியாளர்கள் சந்திப்பில் நடிகர் விவேக் ஓபராய் கூறினார். இந்திய சினிமாவில் இளம் பெண்களின் கனவு கண்ணன், காதலனாக வலம் வந்தவர் விவேக் ஓபராய். தமிழ் மக்களின் மீது அளவு கடந்த அன்பையும், மரியாதையையும் வைத்திருப்பவர். சுனாமியால் தமிழகம் நிலை குலைந்திருந்த போது தமிழ் மக்களுக்கு அவர் நீட்டிய ஆதரவு கரம் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழ் சினிமாவில் நல்ல ஒரு அறிமுகத்துக்காக காத்திருந்த நேரத்தில் அவரின் ...

Read More »

அவுஸ்ரேலிய தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழன்!

அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சிட்னி நகர சபைக்கான தேர்தலில் தமிழர் தாயகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஈழத் தமிழ் அகதியான சுஜன் செல்வன் போட்டியிடுகின்றார். அரசியல் தஞ்சம் கோரும் ஈழத் தமிழர்களுக்கு அவுஸ்திரேலியாவின் தற்போதைய அரசியல் சூழ்நிலை அவ்வளவு சாதகமானதாக இல்லையென கூறும் முன்னாள் அகதியும், தற்போதைய அவுஸ்திரேலிய பிரஜையுமான சுஜன் செல்வன் எனினும், அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரும் ஈழத் தமிழர்கள் அந்நாட்டு சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நேர்காணலின்போது சரியான தகவல்களை வழங்குவதன் ஊடாக தஞ்சக்கோரிக்கை அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள முடியுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ...

Read More »