பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியாவை ஆதரித்து இலங்கை கலைஞர்கள் உருவாக்கிய பாடல் ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை ஓவியா. அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கையினை சேர்ந்த கலைஞர்கள் இணைந்து பாடல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
பிரேம் ராஜ் இசையமைப்பில் வெளிவந்துள்ள இந்தப் பாடலை யஜீவன், பிரசாதன் மற்றும் பிரேம்ராஜ் பாடியுள்ளனர். பாடலில் இடம்பெற்றுள்ள சொல்லிசையினை ரமேஸ்காந்த் மற்றும் எஸ்.ஜி.பிரபு பாடியுள்ளனர்.
பாடலின் வரிகளை பிரவீன் மற்றும் பிரேம் ராஜ் எழுதியுள்ளதோடு, பிரவீனின் ஒளிப்பதிவு மற்றும் கஜனின் வடிவமைப்பில் காணொளி பாடலாக வெளியாகிள்ளது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal