நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை, அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டாம் என தேரர்கள் குழுவினர் இன்று (21) வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பௌத்த சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேரர்கள் அடங்கிய குழுவினர் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுக்கு இன்று காலை வருகை தந்திருந்தனர்.
அமைச்சரை சந்தித்து ஆசிர்வாதம் வழங்குவதற்காகவும் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் எனக் கோருவதற்காகவும் வருகை தந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், அமைச்சர் அங்கு வருகை தராத காரணத்தினால் அதிகாரிகளை சந்தித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தொடர்ந்தும் பதவி வகிக்க வேண்டும். எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் இராஜினாமா செய்ய வேண்டாம் எனக் கோரிக்கை விடுப்பதாக, தேரர்கள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal