குமரன்

பிளே ஸ்டேஷன் கேம்களை விண்டோஸ் கணினியில் விளையாட புதிய சேவை

பிளே ஸ்டேஷன் சாதனம் இன்றி விண்டோஸ் கணினிகளிலும் பிளே ஸ்டேஷன் கேம்களை விளையாட புதிய சேவை துவங்கப்பட்டுள்ளது. பிளே ஸ்டேஷன் நௌ என பெயரிடப்பட்டுள்ள இந்த சேவையின் முழு தகவல்களை பார்ப்போம். சோனியின் பிளே ஸ்டேஷன் சாதனத்தை வாங்காமல் அதன் கேம்களை விண்டோஸ் கணினியில் விளையாட பிளே ஸ்டேஷன் நௌ எனும் சேவை துவங்கப்பட்டுள்ளது. பிளே ஸ்டேஷன் நௌ பயன்படுத்தி பிளே ஸ்டேஷன் 4 கேம்களை விண்டோஸ் இயங்குதளம் கொண்ட கணினிகளில் விளையாட முடியும். தற்சமயம் பிளே ஸ்டேஷன் நௌ சேவைக்கான சோதனை நடைபெற்று ...

Read More »

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் அமலாபாலின் தம்பி

அமலாபாலின் தம்பியான அபிஜித் பால் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறாராம். அமலாபாலின் தம்பி அபிஜித் பால். இவர் ஏற்கெனவே ஒருசில மலையாள படங்களில் நடித்துள்ளார். மோகன்லால்-அமலாபால் இணைந்து நடித்த ‘லைலா ஓ லைலா’ படம்தான் இவர் அறிமுகமானது. தமிழில் பிரபுதேவா-தமன்னா நடிப்பில் வெளிவந்த ‘தேவி’ படததில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், அபிஜித் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் அந்த படத்தை விஜய்ஸ்ரீ என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் இரண்டு சிறப்பம்சங்களும் இடம்பெற்றிருக்கிறதாம். அதாவது இந்த படத்தில் இடைவேளை ...

Read More »

இந்தியா – அவுஸ்ரேலியா தொடருக்கான ஆடுகளம் !

இந்தியா – அவுஸ்ரேலியா தொடருக்கான ஆடுகளம் சுழற்பந்துக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டதற்கு கங்குலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 333 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. புனே மைதானத்திற்கு இதுதான் முதல் டெஸ்ட். இதனால் ஆட்டம் ஐந்து நாட்கள் நீடிக்கும் வகையில் ஆடுகளம் இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் பந்து முதல் ஓவரில் இருந்தே டர்ன் ஆகும் வகையில் ஆடுகளம் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு ...

Read More »

செவ்வாய்க்கு காந்த கவசம்!

செவ்வாய் கிரகத்தை, மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்றதாக மாற்ற, என்ன செய்ய வேண்டும்? செவ்வாய்க்கு மேலே, அந்தரத்தில், மாபெரும் காந்தக் கருவிகளை நிறுத்தி, அதன் மூலம் காந்தப் புலத்தை கவசம் போல உருவாக்க வேண்டும் என, அமெரிக்க விண்வெளி அமைப்பான, ‘நாசா’வின் கோள் அறிவியல் பிரிவுத் தலைவர் ஜேம்ஸ் கிரீன் அண்மையில் தெரிவித்துள்ளனர். பூமியில் பேரழிவு ஏற்பட்டால், மனித இனம் பிழைக்க, அருகாமையில் உள்ள செவ்வாய் கிரகம் தான் ஒரே கதி என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பல கோடி ஆண்டுகளுக்கு முன், பூமியைப் போலவே, ...

Read More »

ஸ்ரீதேவி நடிக்கும் புதிய படம்

நடிகை ஸ்ரீதேவி சப்தமில்லாமல் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். 80-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டார் ஸ்ரீதேவி. இதைத் தொடர்ந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிவிட்ட ஸ்ரீதேவி, நீண்ட இடைவெளிக்கு 2012-ஆம் ஆண்டு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அப்படத்தை தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த ‘பாம்பே டாக்கீஸ்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். 2015-ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ...

Read More »

அவுஸ்ரேலிய நபர் ஒருவரைக் கைதுசெய்வதற்கு கிளிநொச்சி நீதிமன்றத்தினால் சர்வதேச பிடியாணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொண்ட சந்தேக நபர்களில் ஒருவரான அவுஸ்திரேலிய நபர் ஒருவரைக் கைதுசெய்வதற்கு கிளிநொச்சி நீதிமன்றத்தினால் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமந்திரனின் படுகொலை வழங்கு நேற்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது. இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களும் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களை மார்ச் 22 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதிவான் உத்தரவிட்டார். மேலும், குறித்த படுகொலைச் சதியுடன் ...

Read More »

அவுஸ்ரேலியா உள்ளவர்கள் குடியேற்றப்பட்டவர்களே!

உலகில் உள்ள ஏழு கண்டங்களுள் ஒன்றக விளங்கும் சிறிய கண்டமாகக் காணப்படுவது அவுஸ்ரேலியா ஆகும். அதுமட்டுமல்லாது உலகின் மிகப்பெரிய தீவாகவும் காணப்படுகின்றது. எனினும் இங்கு வசிப்பவர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து குடியேற்றப்பட்டவர்கள் எனும் கருத்து நீண்ட காலமாக நிலவி வந்தது. இருந்த போதிலும் இதனை நிரூபிப்பதற்கான போதியளவு ஆதாரங்கள் காணப்பட்டிருக்கவில்லை. ஆனால் தற்போது தலை முடியிலுள்ள DNA இனைக் கொண்டு குடியேற்றம் செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இக் குடியேற்றமானது சுமார் 50,000 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு குழுவினரே குடியேற்றம் ...

Read More »

தமிழுக்கு அறிமுகமாகும் மூன்றாம் தலைமுறை இயக்குனர்

தமிழ் சினிமாவில் மூன்றாம் தலைமுறை இயக்குனர் ஒருவர் அறிமுகமாவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வைக்கிங் மீடியா  மற்றும் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘யார் இவன்’. இப்படத்தில் சச்சின் என்பவர் தயாரித்து நடிக்கிறார். இவர் தெலுங்கில் 6 படங்கள் நடித்துள்ளார். இந்தியிலும் ஒருசில படங்களில் நடித்துள்ளார். தமிழுக்கு இவர் அறிமுகமாவது இந்த படம்தான். அதேபோல், பாலிவுட் நடிகை ஈஷா குப்தாவும் இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். மேலும், இவர்களுடன் பிரபு, கிஷோர், டெல்லி கணேஷ், தன்யா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ...

Read More »

சிவப்பாக மாறிய ஏரி- மெல்போர்ன்

மெல்போர்ன் அருகே Westgate Park பகுதியில் அமைந்துள்ள உப்பு நீர் ஏரிதான் இவ்வாறு சிவப்பு நிறமாக மாறியுள்ளது. கோடை காலத்தில் ஏற்படும் அதிக வெப்பம் காரணமாக இங்குள்ள தண்ணீர் சிவப்பு நிறமாக மாறுவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மழையின் அளவு பெருமளவு குறைவதாலும் உப்பின் செறிவு மிக அதிகமாக இருப்பதாலும் குறித்த ஏரியில் தண்ணீர் பளபளக்கும் பிங்க் வண்ணத்திலோ அல்லது சிவப்பாகவோ மாறிவிடுகின்றன. மட்டுமின்றி இந்த ஏரியின் அடிப்பகுதியில் பரவிக்கிடக்கும் ஒருவகை ஆல்கேயானது இந்த மாயத்தை செய்வதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கோடை காலத்தில் உப்பின் ...

Read More »

அண்ணா இருக்கேன் எதுக்கும் கவலைப்படாதே!

அவுஸ்ரேலியாவில் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 4 மாத குழந்தைக்கு 3 வயதேயான அதன் சகோதரர் ஆதரவாக பேசிய பேச்சு அந்த குடும்பத்தினரை நெகிழச்செய்துள்ளது. அவுஸ்ரேலியாவின் மேற்கு பகுதியில் குடியிருந்து வருபவர் ஷெரைல் மற்றும் ஜோன் தம்பதிகள். இவர்களுக்கு வில்லியம்(3) மற்றும் தாமஸ் என இரு குழந்தைகள் உள்ளனர். இதில் 4 மாதங்களேயான தாமஸ் கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பெரும்பாலான நேரம் குழந்தை தாமசுடன் குடும்பத்தினர் அனைவரும் செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் விடுமுறையை கழிக்கும் பொருட்டு குழந்தையுடன் வெளியே புறப்பட்டுச் செல்ல தயாராகிக்கொண்டிருந்தனர் ஷெரைல் ...

Read More »