இலங்கையில் மீண்டும் எது இடம்பெறக்கூடாதென மக்கள் நினைத்தார்களோ அது மீண்டும் நடந்து முடிந்து இன்றுடன் ஒரு மாதம் கனத்த மனத்துடனும் கண்ணீருடனும் கடக்கின்றது. கடந்த 30 வருடகால உள்நாட்டுப்போர் ஓய்ந்து குண்டுச் சத்தங்களுக்கும் ஆயுதங்களுக்கும் ஓய்வுகொடுத்த இலங்கை, பத்து வருட நிறைவை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த வேளை, மீண்டும் இலங்கையை அதிரவைத்த மிலேச்சத்தனமான தற்கொலைத் தாக்குதல்கள். இலங்கை மக்களாலோ ஏன் உலக மக்களாலோ ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இடம்பெற்ற அந்த மிலேச்சத்தனமான தற்கொலைத் தாக்குதல் சம்பவங்கள் இலங்கையின் சுதந்திரத்தையும் அபிவிருத்தியையும் பொருளாதாரத்தையும் ...
Read More »குமரன்
சஹ்ரான் இறந்துவிட்டதாக மரபணு பரிசோதனையில் உறுதி!
தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக மரபணு பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில், கொழும்பு – ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹஸீம் தான் என, மரபணுப் பரிசோதனை (டீஎன்ஏ) மூலம் உறுதியாகியுள்ளது என அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத் தகவல்கள் உறுதி செய்துள்ளன. தற்கொலைத்தாரியான சஹ்ரானின் மகள், சகோதரி ஆகியோரின் ...
Read More »குண்டுகளை தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை தற்கொலை குண்டுதாரிகள் பெற்றது எப்படி?
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குண்டுகளை தயாரிப்பதற்கான பயிற்சிகளை எங்கிருந்து பெற்றனர் என்பதை கண்டறிவதற்கான விசாரணைகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் ஐஎஸ் அமைப்பினர் பயன்படுத்தும் சாத்தானின் தாய் என அழைக்கப்படும் வெடிபொருட்களை பயன்படுத்தியுள்ளமை இலங்கை குண்டுவெடிப்புகளில் வெளிநாட்டவர்களிற்கு தொடர்புள்ளதை உறுதி செய்துள்ளது என விசாரணை அதிகாரிகள் ஏஎவ்பி செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளனர். உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று ஒரு மாதம்முடிவடைகின்ற நிலையில் அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். ஏப்பிரல் 21 தாக்குதலி;ற்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளை உள்ளுர் தீவிரவாதிகள் வெளிநாட்டு நிபுணத்துவத்தின் உதவியுடன் பயன்படுத்தியுள்ளனர் ...
Read More »பார்த்திபன் குருவை மிஞ்சிய சிஷ்யன்!
பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்திருக்கும் ஒத்த செருப்பு படத்தின் அறிமுக விழாவில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், பார்த்திபன் குருவை மிஞ்சிய சிஷ்யன் என்று பாராட்டினார். பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் இயக்குநர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. உலக அளவில் ஒரே ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே இடம்பெறும்படியாக 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் ...
Read More »ஈழ தமிழ் குடும்பத்திற்காக அவுஸ்திரேலியர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள ஈழத்தமிழ் குடும்பத்திற்காக சுமார் 2 இலட்சம் வரையான கையெழுத்துக்கள் திரட்டப்பட்டுள்ளது. திரட்டப்பட்ட கையெழுத்துக்கள் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பிலோலா சமூகத்தினர் இந்த கையெழுத்து திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததோடு, நேற்று முன்தினம் குறித்த கையெழுத்துக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மெல்பனில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களான நடேசலிங்கம் – பிரியா குடும்பம் தம்மை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ...
Read More »மீண்டும் லிபரல் கூட்டணி ஆட்சியில்! அடுத்தக்கட்ட நகர்வு என்ன?
தான் முன்வைத்த வாக்குறுதியை நிறைவேற்றும் அறிவிப்பை பிரதமர் Scott Morrison விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் 46 ஆவது நாடாளுமன்றம் எதிர்வரும் ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னர் கூடும்போது வரிக்குறைப்பு தொடர்பாக தேர்தல் பிரச்சாரத்தின்போது தான் முன்வைத்த வாக்குறுதியை நிறைவேற்றும் அறிவிப்பை பிரதமர் விடுப்பார் என குறிப்பிடப்படுகின்றது. ஆண்டொன்றுக்கு 126 ஆயிரம் டொலர்கள்வரை வருமானமீட்டுபவர்களுக்கு 1080 டொலர் வரிக்குறைப்பினை வழங்கும் Morrisonனின் திட்டத்தை அவரது நிதியமைச்சர் நடைமுறைப்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டம் குறித்த புதிய ஏற்பாடுகளுடன்கூடிய திருத்தம் மற்றும் விசேட ...
Read More »ஈரானின் இராஜதந்திர போர் 2019!
ஈரானுடனான உலக நாடுகளின் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒருதலைப்பட்சமாக விலகிக் கொண்ட ஓராண்டுக்குப் பின்னர் ஈரான் அதன் யுரேனியத்தை தொடர்ச்சியாக வைத்திருத்தல் என்று அறிவித்ததன் மூலம், மேற்குலகத்துக்கு உறுதியான மற்றும் தெளிவான செய்தியை ஈரான் சொல்லியிருக்கிறது. கடந்தாண்டு, ஐரோப்பிய முக்கூட்டு அணுசக்தி ஒப்பந்தம் புதுப்பிக்க முற்பட்ட வேளையில், ஐரோப்பிய நாடுகள் ஈரானின் நன்னோக்கத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் எந்த ஒரு கொள்கை நகர்வுகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக, ஐக்கிய அமெரிக்காவின் கொள்கைக்கு ஏற்றதாகவே, ஈரானிய ஏவுகளை திட்டங்களைக் குறைக்க அல்லது ஈரானின் ...
Read More »ஹைட்ரோகார்பன் அகழ்வால் அழிந்த அமெரிக்க நிலப்பரப்பு!
ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சியின்போது அமெரிக்காவில் பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு நாசமானதாக வெளியான தகவலின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வோம். ஹைட்ரோகார்பன் எரிவாயு பாதிப்பு பற்றி பல்வேறு விவரங்கள் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அந்த வரிசையில் அமெரிக்காவில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சியில் சுமார் 6,75,000 ஏக்கர் நிலப்பரப்பு முற்றிலும் நாசமாகி, மக்கள் வாழ முடியாத பகுதியானது என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அவ்வாறு பரவிய தகவலில் அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் அருகில் உள்ள பெலாக்வா என்னும் பகுதியின் ...
Read More »ரிஷாத், அசாத் சாலிக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
நீதித்துறைக்கு அவமதிப்பினை ஏற்படுத்தும் விதமாக கருத்துரைத்த மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் உள்ளிட்டவர்கள் தொடர்பில் நீதித்துறைசார்ந்த அமைச்சர் ஏன் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்று எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த கேள்வியெழுப்பினார். இன்று சட்டவாட்சிக் கோட்பாடு நடைமுறையில் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் காணப்படுகின்றது. அரசாங்கத்தின் இயலாமையினை மறைப்பதற்கு சட்டத்தின் மீது பழி சுமத்தப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் ...
Read More »பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்! – கனேடிய பிரதமர்
இலங்கையில் அர்த்தமுள்ள வகையில் பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்படுவது அவசியமாகும். பாதிக்கப்பட்டவர்களினால் நம்பக்கூடிய வகையிலான பொறுப்புக் கூறல் பொறிமுறைமை ஒன்றை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என்று கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 26 ஆண்டுகளாக நீடித்து வந்த யுத்தம் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக முடிவுக்கு வந்திருந்தது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும் அதற்கு முன்னரும் ...
Read More »