ஈழ தமிழ் குடும்பத்திற்காக அவுஸ்திரேலியர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள ஈழத்தமிழ் குடும்பத்திற்காக சுமார் 2 இலட்சம் வரையான கையெழுத்துக்கள் திரட்டப்பட்டுள்ளது.

திரட்டப்பட்ட கையெழுத்துக்கள் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பிலோலா சமூகத்தினர் இந்த கையெழுத்து திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததோடு, நேற்று முன்தினம் குறித்த கையெழுத்துக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மெல்பனில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களான நடேசலிங்கம் – பிரியா குடும்பம் தம்மை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவர்களை நாடுகடத்தக்கூடாது என்று வலியுறுத்தி 190,000 கையெழுத்துக்கள் திரட்டப்பட்டு குடிவரவு அமைச்சர் டேவிட் கொல்மனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.